சந்தியாலா
சந்தியாலா வீர வெங்கட துர்கா சிவா சுப்ரமண்ய சாத்திரி (Jandhyala Veera Venkata Durga Siva Subrahmanya Sastry) (14 சனவரி 1951 - 19 சூன் 2001) ஒரு இந்திய திரைக்கதை எழுத்தாளரும், இயக்குனரும், நடிகரும் ஆவார். இவர், தெலுங்குத் திரையுலகில் தனது படைப்புகளுக்கு பெயர் பெற்றவர். [3] இருபத்தி நான்கு ஆண்டுகள் நீடித்த ஒரு திரைப்பட வாழ்க்கையில், இவர் நான்கு மாநில நந்தி விருதுகளையும் தென்னிந்திய பிலிம்பேர் விருதையும் பெற்றுள்ளார். [4] ஹாஸ்ய பிரம்மா என்று அழைக்கப்படும் இவர், [1] தேசிய விருது பெற்ற படைப்புகளான சங்கராபரணம் (1980), சப்தபாடி (1981), சீதகோகா சிலக்கா (1981), சாகரா சங்கமம் (1983), சுவாதி கிரணம் (1992) போன்றவற்றிற்கும் உரையாடல்களை எழுதியுள்ளார். [5] ஆபத்பாந்தவடு (1992) படத்திற்கான சிறந்த உரையாடல் எழுத்தாளருக்கான நந்தி விருதைப் பெற்றார்.
சந்தியாலா | |
---|---|
பிறப்பு | சந்தியால வீர வெங்கட துர்கா சிவா சுப்ரமண்ய சாத்திரி [1] 14 சனவரி 1951 [2] நரசாபுரம் மண்டலம், சென்னை மாநிலம், இந்தியா (தற்போதைய ஆந்திரப் பிரதேசம்) |
இறப்பு | 19 சூன் 2001[2] ஐதராபாத்து (இந்தியா), ஆந்திரப் பிரதேசம், இந்தியா (தற்போதைய தெலங்காணா) | (அகவை 50)
மற்ற பெயர்கள் | ஹாஸ்ய பிரம்மா |
பணி | இயக்குநர், நடிகர், எழுத்தாளர் |
வாழ்க்கைத் துணை | அன்னபூர்ணா |
விருதுகள் | பத்மசிறீ |
இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட நாலுகு ஸ்தம்பலதா (1982), இருமொழி நடனப் படமான ஆனந்த பைரவி (1983) போன்ற சிறந்த இயக்கத்திற்காக இவர் அறியப்படுகிறார். சிறந்த திரைப்படம், சிறந்த இயக்கம், சிறந்த கதைக்கான மாநில அரசின் நந்தி விருதுகளையும் பெற்றுள்ளார். பின்னர் ஸ்ரீவாரிகி பிரேமலேகா, (1984), ரெண்டு ரெலு ஆரு (1986), சீதா ராமா கல்யாணம் (1986), சந்தாபாய் (1986), பதமதி சந்தியா ராகம் (1987) போன்ற நகைச்சுவைப் படைப்புகளை இயக்கியுள்ளார். இவையனைத்தும் சிறந்த தெலுங்கு படத்திற்கான பிலிம்பேர் விருதையும், சிறந்த கதைக்கான நந்தி விருதையும் இவருக்குப் பெற்றுத்தந்தது. [6] மேலும், இந்திய சர்வதேச திரைப்பட விழாவிலும், லூயிஸ்வில்லின் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. [7]
ஆரம்ப கால வாழ்க்கை
தொகுஇவர், 14 சனவரி 1951 அன்று நரசாபுரத்தில் சந்தியாலா நாராயண மூர்த்தி என்பவருக்கு மகனாகப் பிறந்தார். விசயவாடாவில் உள்ள எஸ்.ஆர்.ஆர் மற்றும் சி.வி.ஆர் கல்லூரியில் வணிகவியல் இளங்கலை பட்டம் பெற்றார். இவரது குழந்தைப் பருவத்திலிருந்தே, மேடை நாடகங்களில் குறிப்பாக புராண கதாபாத்திரங்களின் பளப்பளப்பான ஆடைகள் மேல் ஆர்வம் கொண்டிருந்தார். பள்ளியில் படிக்கும் போது இவர் நடித்ததற்காக பரிசுகளையும் வென்றார்.
பிரம்மானந்தம், சூதி வேலு, சூதி வீரபத்ரராவ் போன்ற பல நகைச்சுவை நடிகர்களை அறிமுகப்படுத்தியுள்ளார். உஷாகிரன் திரைப்பட நிறுவனத்தின் சிறீவாரிகி பிரேமலேகா என்ற இவரது படம் எல்லா காலத்திலும் வெற்றி பெற்ற நகைச்சுவை படமாக மாறியது. இவரது மற்றொரு படம் ஆனந்த பைரவி இவரது வாழ்க்கையில் ஒரு மைல்கல்லாக இருந்து பல விருதுகளை வென்றது.
இறப்பு
தொகுதிரையுலகில் தனது வெள்ளிவிழாவை முடித்த இவர் 19 சூன் 2001 அன்று, மாரடைப்பால் தனது 50 வயதில் இறந்தார். [8] [9] இவருக்கு அன்னபூர்ணா என்ற மனைவியும், சாகித்தி, சம்பதா என்றா இரு மகள்கள் உள்ளனர்.
குறிப்புகள்
தொகு- ↑ 1.0 1.1 A. S., Sashidhar (13 June 2012). ""Jandhyala" is his surname - Times of India". The Times of India (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-09-28.
- ↑ 2.0 2.1 Pandya, Haresh (2001-08-03). "Obituary: Jandhyala Sastri" (in en-GB). தி கார்டியன். https://www.theguardian.com/news/2001/aug/04/guardianobituaries.filmnews.
- ↑ "Metro Plus Vijayawada : Laughing is a luxury". 29 January 2005 இம் மூலத்தில் இருந்து 3 டிசம்பர் 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20131203062213/http://www.hindu.com/mp/2005/01/29/stories/2005012902270100.htm.
- ↑ http://www.jandhyavandanam.com/ பரணிடப்பட்டது 2019-08-01 at the வந்தவழி இயந்திரம் jandhyavandanam.com
- ↑ "Jandhyala remembered". 15 January 2016 – via www.thehindu.com.
- ↑ "35th Annual Filmfare Awards South Winners : Santosh : Free Download &…". archive.is. 5 February 2017. Archived from the original on 5 February 2017. பார்க்கப்பட்ட நாள் 2 March 2019.
- ↑ "rediff.com US edition: Inscrutable Americans - soon at a theatre near you".
- ↑ "Andhra Pradesh / Vijayawada News : Rich tributes paid to Jandhyala". The Hindu. 20 June 2006 இம் மூலத்தில் இருந்து 6 செப்டம்பர் 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20120906200624/http://www.hindu.com/2006/06/20/stories/2006062003000200.htm.
- ↑ "Tribute – Jandhyala – Telugu film director and writer". Idle Brain. 19 June 2001. http://www.idlebrain.com/celeb/bio-data/bio-jandhyala.html.