சந்திர மோகன் (இந்தி நடிகர்)
சந்திர மோகன் (Chandra Mohan) (24 ஜூலை 1906 - 2 ஏப்ரல் 1949) ஓர் இந்திய திரைப்பட நடிகர் ஆவார். இவர் 1930கள் -1940களில் பாலிவுட் படங்களில் பணியாற்றியதற்காக அறியப்பட்டார். இவர் பல விமர்சன ரீதியான, வணிக வெற்றிகளில் தனது வில்லத்தனமான பாத்திரங்களுக்காக அறியப்பட்டார்.
சந்திர மோகன் வாட்டாள் | |
---|---|
1942இல் சந்திர மோகன் | |
பிறப்பு | [1] நர்சிங்பூர், மத்திய மாகாணம், பிரித்தானிய இந்தியா, பிரித்தானிய இந்தியா (தற்போதைய மத்தியப் பிரதேசம், இந்தியா) | 24 சூலை 1906
இறப்பு | 2 ஏப்ரல் 1949[1] மும்பை, மும்பை மாகாணம், இந்திய ஒன்றியம் | (அகவை 42)
பணி | நடிகர் |
செயற்பாட்டுக் காலம் | 1930–1949 |
வாழ்க்கையும் தொழிலும்
தொகுமத்தியப் பிரதேசத்தில் உள்ள நரசிங்பூரில்[1] பிறந்த இவர், பெரிய சாம்பல் நிற கண்கள், குரல் பண்பேற்றம், உரையாடல் வெளிப்பாடு ஆகியவற்றுக்கு பெயர் பெற்றவர். வி. சாந்தாராமின் 1934 ஆம் ஆண்டு வெளியான அமிர்த மந்தன் என்ற திரைப்படத்தில் இவரது கண்கள் படத்தின் ஆரம்பத்தை உருவாக்கியது. இது இவரது திரைப்பட அறிமுகமும் கூட.[2] இது புதிதாக நிறுவப்பட்ட பிரபாத் பிலிம்ஸ் என்ற படப்பிடிப்பு அரங்கத்தில் தயாரிக்கப்பட்ட முதல் படமாகும். இப்படம் இந்தி, மராத்தி ஆகிய இரண்டிலும் தயாரிக்கப்பட்டது. இந்தப் படத்தில் 'ராஜ்குரு' என்ற வேடத்திற்காக பாராட்டுகளைப் பெற்றார். மேலும், அந்த நேரத்தில் ஒரு குறிப்பிடத்தக்க வில்லனாக தன்னை நிலைநிறுத்திக் கொண்டார்.[3]
மோகன், பின்னர் சோஹராப் மோடியின் புகார்[2] என்ற படத்தில் பேரரசர் ஜஹாங்கீராகவும், மெஹபூப் கானின் ஹுமாயுனில் ரந்தீர் சிங்காகவும், மெஹபூப்கானின் "ரோட்டி"யில் சேத் இலட்சுமிதாசாகவும் தோன்றினார்.
இவரது கடைசி தோற்றங்களில் ஒன்று ரமேஷ் சைகலின் 1948 திரைப்படமான ஷாஹீத்.[4] ராவ் பகதூர் துவாரகா நாத் என்ற வேடத்தில், திலீப் குமாரால் சித்தரிக்கப்பட்ட ராமின் தந்தையாக நடித்தார். இந்த படத்தில் மோகனின் கதாபாத்திரம் ஆரம்பத்தில் பிரித்தானிய அரசாங்கத்தை ஆதரித்தது. ஆனால் பின்னர் சுதந்திர போராட்டத்திற்கு ஆதரவளித்தது. சந்திர மோகனின் கடைசி திரைப்படம் ராம்பான் (1948) என்ற மத திரைப்படமாகும். இதில் அவர் அரக்கப் பேரரசர் இராவணன் வேடத்தில் நடித்தார்.
கே. ஆசிப்பின் முகல்-இ-அசாம் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இவர் தேர்வாகியிருந்தார். ஆனால் இவரது அகால மரணம் காரணமாக இவரை வைத்து எடுக்கப்பட்ட பத்து ரீல்களும் வெட்டப்பட்டு பிறகு படம் மீண்டும் எடுக்கப்பட்டது. இந்த படம் இறுதியில் 1960இல் வெளியிடப்பட்டது.[5][6]
இறப்பு
தொகுமோகன், அதிகமாக குடித்துவிட்டு, சூதாட்டம் ஆடி பணமில்லாமல் துன்பப்பட்டு 2 ஏப்ரல் 1949 அன்று தனது 42 வயதில் மும்பையில் இறந்தார்.[1]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 1.3 "Chandra Mohan". Retrore. Archived from the original on 6 January 2019. பார்க்கப்பட்ட நாள் 29 February 2016.
{{cite web}}
: Unknown parameter|=
ignored (help) - ↑ 2.0 2.1 Garga, B D (1 December 2005). Art Of Cinema. Penguin Books Limited. pp. 131–. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-8475-431-5. Archived from the original on 16 December 2019. பார்க்கப்பட்ட நாள் 11 October 2020.
- ↑ Banerjee, Srivastava (13 September 2013). One Hundred Indian Feature Films: An Annotated Filmography. Taylor & Francis. pp. 45–. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-135-84105-8. Archived from the original on 1 April 2017. பார்க்கப்பட்ட நாள் 11 October 2020.
- ↑ Mahmood, Hameeduddin (1974). The Kaleidoscope of Indian Cinema. Affiliated East-West Press. p. 50.
- ↑ "How well do you know Mughal-e-Azam?". Rediff. 5 ஆகத்து 2010. Archived from the original on 24 June 2012. பார்க்கப்பட்ட நாள் 12 June 2012.
- ↑ Chopra, Anupama (2007). King of Bollywood: Shah Rukh Khan and the Seductive World of Indian Cinema. Grand Central Publishing. pp. 19–. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-446-50898-8.