சந்துலால் சா

இந்தியத் திரைப்பட இயக்குநர்

சந்துலால் செசங்பாய் சா (Chandulal Jesangbhai Shah) (13 ஏப்ரல் 1898 - 25 நவம்பர் 1975) ஓர் பிரபல இந்தியத் திரைப்பட இயக்குனரும், தயாரிப்பாளரும் மற்றும் திரைக்கதை எழுத்தாளரும் ஆவார். [1] இவர் 1929 இல் ரஞ்சித் ஸ்டுடியோ என்றத் திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தை நிறுவினார். [2] [3]

சந்துலால் சா
பிறப்புசந்துலால் செசங்பாய் சா
(1898-04-13)13 ஏப்ரல் 1898
ஜாம்நகர், குசராத்து, இந்தியா
இறப்பு25 நவம்பர் 1975(1975-11-25) (அகவை 77)
மும்பை, மகராட்டிரம், இந்தியா
மற்ற பெயர்கள்சந்துலால் செ. சா
பணிதிரைப்பட இயக்குநர், தயாரிப்பாளர்
இரஞ்சித் ஸ்டிடுயோவின் நிறுவனர் (1929)
செயற்பாட்டுக்
காலம்
1925–1963
வாழ்க்கைத்
துணை
கேசர்பென் சந்துலால் சா

சந்துலா சா 1898 இல் பிரித்தானிய இந்தியாவில் குசராத்தின் ஜாம்நகரில் பிறந்தார். பம்பாயில் (இப்போது மும்பை) உள்ள சைடன்காம் கல்லூரியில் படித்தார். பின்னர் 1924 இல் மும்பை பங்குச் சந்தையில் பணி நியமனம் பெற்றார். வேலை கிடைக்கும் என்று காத்திருந்தபோது, புராணப் படங்களுக்கு எழுத்தாளராக இருந்த தனது சகோதரரான ஜே. டி. சாவுக்கு உதவினார்.[4] 1925 ஆம் ஆண்டு "இலட்சுமி பிலிம் கம்பெனி" என்ற நிறுவனத்தின் இயக்குனர் மணிலால் ஜோஷி உடல்நிலை சரியில்லாமல் இருந்ததால் விம்லா என்ற படத்தை இயக்க இவரை அழைத்தார். அந்த அழைப்பை ஏற்றுக் கொண்ட சந்துலால் சா படத்தை இயக்கியது மட்டுமின்றி அந்த நிறுவனத்திற்காக பஞ்ச் தண்டா (1925) மற்றும் மாதவ் கம் குண்டலா (1926) என்ற இரண்டு படங்களையும் இயக்கினார்.

திரைப்பட வாழ்க்கை

தொகு

இலட்சுமி பிலிம் கம்பெனியில் இருந்த சந்துலாலின் நண்பரான அமர்சந்த் செராப், வரை கோகினூர் பிலிம் கம்பெனிக்கு அழைத்துச் சென்றார். அங்கு இவர் நிறுவனத்தின் நிறுவனர் கோஹருடன் தொடர்பு கொண்டார், அது இறுதியில் தனிப்பட்ட மற்றும் தொழில்முறை உறவாக வளர்ந்தது.

கோகினூர் நிறுவனத்தின் தயாரிப்பில் கோகர் மற்றும் சுலோச்சனா ஆகியோரின் நடிப்பில் டைப்பிஸ்ட் கேர்ள் (1926) என்ற திரைப்படம் இவர் இயக்கிய முதல் படமம் 17 நாட்களில் தயாரிக்கப்பட்டது. இந்தப் படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. சந்துலால் அந்நிறுவனத்திற்காக மேலும் ஐந்து படங்களை இயக்கினார், அனைத்திலும் கோகர் இடம்பெற்றார். இவற்றில் குன்சுந்தரி (1927) என்ற படம் மிகவும் பிரபலமானது

திரைப்படத் தயாரிப்பைத் தவிர, இந்தியத் திரைப்படத் துறையின் நிறுவனப் பணிகளுக்கும் சந்துலால் சா நிறைய நேரம் செலவிட்டார். இந்தியத் திரைப்படத் துறையின் வெள்ளி விழா (1939) மற்றும் பொன்விழா (1963) ஆகிய இரண்டும் இவரது வழிகாட்டுதலின் கீழ் கொண்டாடப்பட்டன. இவர் 1951 இல் உருவாக்கப்பட்ட இந்திய திரைப்படக் கூட்டமைப்புக்கு முதல் தலைவராக இருந்தார். அடுத்த ஆண்டு ஹாலிவுட்டுக்கு இந்தியக் குழுவை வழிநடத்தினார்.[5]

பிற்கால வாழ்க்கையும் இறப்பும்

தொகு

ராஜ் கபூர் மற்றும் நர்கிசு நடித்த பாபி (1953) என்றத் திரைப்படம் தோல்வியடைந்தபோது சந்துலாலின் வீழ்ச்சி தொடங்கியது. அதன்பிறகு ஊட்பதாங் (1955), ஜமீன் கே தாரே (1960) மற்றும் கடைசியாக நந்த்லால் ஜஸ்வந்த்லாலுடன் இணைந்து இயக்கிய அகேலி மாட் ஜெய்யோ (1963) ஆகிய மூன்று படங்களை இயக்கினார். இவர் சூதாட்டம் மற்றும் குதிரை பந்தயத்தில் ஈடுபட்டார். திரைப்படத்துறையின் மிகவும் சக்திவாய்ந்த மனிதராகவும், ஒரு காலத்தில் மகிழுந்துகளை வைத்திருந்தவருமான இவர் பேருந்துகளில் பயணம் செய்ய பணமின்றி வண்டியிலிருந்து கீழே தள்ளப்பட்டார். சந்துலால் சா 25 நவம்பர் 1975 அன்று இறந்தார்.[6]

மேற்கோள்கள்

தொகு
  1. IMDB Profile
  2. Susan Hayward (2013). Cinema Studies: The Key Concepts. Routledge. pp. 467–. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-415-53813-8.
  3. Tejaswini Ganti (2013). Bollywood: A Guidebook to Popular Hindi Cinema. Routledge. pp. 17–18. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-415-58384-8.
  4. Mihir Bose (9 May 2008). "3-Growing Under the Banyan Tree". Bollywood: A History. Roli Books Private Limited. pp. 90–. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-93-5194-045-6. பார்க்கப்பட்ட நாள் 18 July 2015.
  5. Chandulal Shah on Upperstall
  6. Navhind Times Article பரணிடப்பட்டது 23 செப்டெம்பர் 2012 at the வந்தவழி இயந்திரம்

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=சந்துலால்_சா&oldid=3853171" இலிருந்து மீள்விக்கப்பட்டது