சபாப் ஆலம்

இந்திய கல்வியாளர்

சபாப் ஆலம் (Shabab Aalam) இந்திய எழுத்தாளர், கல்வியாளர் மற்றும் இந்தி மற்றும் உருது மொழியின் கவிஞர் ஆவார். இவர் 1984 ஆம் ஆண்டு ஆகத்து மாதம் 15 ஆம் தேதி பிறந்தார். இவர் இந்தியாவின் முதல் உதவி கவுன்சிலான கிராமீன் முக்த் வித்யாலாய் சிக்சா சன்சுதானை நிறுவினார். பின்னர் அந்நிறுவனத்தின் தலைவராக பணியாற்றினார். 2018 ஆம் ஆண்டு மீசான் தலிமி கித்மத் என்ற விருதைப் பெற்றார்.

சபாப் ஆலம்
பிறப்பு15-ஆகத்து-1984 (வயது 39)
முசாபர்நகர், உத்தரப் பிரதேசம், இந்தியா
தேசியம்இந்தியன்
பணிகல்வி
அறியப்படுவது
  • கிராமீன் முக்த் வித்யாலாய் சிக்சா சன்சுதான்
  • இந்தியாவின் முதல் உதவி கவுன்சில்
வலைத்தளம்
drshababaalam.com

சுயசரிதை

தொகு

சபாப் ஆலம் 1984 ஆம் ஆண்டு ஆகத்து மாதம் 15 ஆம் தேதி அன்று உத்தரபிரதேச மாநிலம் முசாபர்நகரில் பிறந்தார். [1] இவர் உள்ளூர் பள்ளிகளில் தனது ஆரம்பக் கல்வியைப் பெற்றார். பின்னர் உயர் படிப்பிற்காக மீரட் சென்று புவியியலில் இளங்கலைப் பட்டம் பெற்றார். [1] மேலும் முதுகலை, முதுகலை வணிக மேலாண்மை மற்றும் முனைவர் பட்டம் பெற்றவர் ஆவார். [1] நவாசு தியோபந்தியிடம் உருது கவிதைகளைப் பயின்றார். [2]

ஆலம் இந்தி மொழியில் பல கவிதைகளை எழுதியுள்ளார். [2] 2015 ஆம் ஆண்டில், இவர் கிராமீன் முக்த் வித்யாலாய் சிக்சா சன்சுதான் என்ற மாற்றுக் கல்வி வாரியத்தை நிறுவினார். இவ்வாரியமானது தேசிய திறந்தநிலைப் பள்ளிக்கல்வி நிறுவனமாக இயங்குகிறது. [3] [1] இந்த நிறுவனம் 2020 ஆம் ஆண்டு சிறந்த தொலைதூரக் கற்றல் மைய விருதைப் பெற்றது. 2017 ஆம் ஆண்டில், இந்தியாவில் முதலுதவி கல்வியை மேம்படுத்துவதற்காக இந்திய முதலுதவி கவுன்சிலை நிறுவினார். [1] [2] மேலும் இந்திய முதலுதவி கவுன்சிலின் தலைவராக பணியாற்றுகிறார்.

ஆலமின் பல புத்தகங்கள் சில இந்தியப் பல்கலைக்கழகங்களில் படிக்க பரிந்துரைக்கப்படுகின்றன. [1] இவருக்கு 2017 ஆம் ஆண்டு மீசான் தலிமி கித்மத் விருது வழங்கப்பட்டது. [1]

2023 ஆம் ஆண்டில், கொழும்பில் உள்ள ஐரோப்பிய பல்கலைக்கழக கல்லூரி ஆலமுக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கியது.

திரைப்படவியல்

தொகு

ஆலம் பல பாடல்களுக்கு வரிகள் இயற்றியுள்ளார். [4]

பாடல்கள்

தொகு
ஆண்டு பாடல் பாடகர் குறிப்பு
2022 ரப்பா வெ முகமது டேனிசு [5] [6]
2022 கபீபி முகமது டேனிசு [7]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 1.6 Sadiyah 2021.
  2. 2.0 2.1 2.2 Zahoor 2021.
  3. "Asia Today Research and Media Acknowledged and Felicitated the Winners of Asia Education Summit and Awards 2020". Business Wire. பார்க்கப்பட்ட நாள் 24 March 2020.
  4. "Harmonious voice, Emotional lyrics of "Rabba Ve" song touches many hearts". 5 April 2022. https://thechenabtimes.com/2022/04/05/harmonious-voice-emotional-lyrics-of-rabba-ve-song-touches-many-hearts/. 
  5. "Harmonious voice, Emotional lyrics of "Rabba Ve" song touches many hearts". 5 April 2022. https://thechenabtimes.com/2022/04/05/harmonious-voice-emotional-lyrics-of-rabba-ve-song-touches-many-hearts/. Ayoob, Anzer (5 April 2022). "Harmonious voice, Emotional lyrics of "Rabba Ve" song touches many hearts". தி செனாப் டைம்ஸ். Retrieved 7 August 2022.
  6. "Pawandeep Rajan, Danish Single On Separation And Depth Of Love Soon". 25 March 2022. https://odishatv.in/news/entertainment/pawandeep-rajan-danish-single-on-separation-and-depth-of-love-soon-173466. 
  7. "Indian Idol fame Mohd. Danish's Habibi song ft Kamal Sachdeva, Priyanka Rajpoot released on his YouTube channel". 22 July 2022. https://www.aninews.in/news/business/business/indian-idol-fame-mohd-danishs-habibi-song-ft-kamal-sachdeva-priyanka-rajpoot-released-on-his-youtube-channel20220726183708/. 

நூல் பட்டியல்

தொகு


 

"https://ta.wikipedia.org/w/index.php?title=சபாப்_ஆலம்&oldid=3794692" இலிருந்து மீள்விக்கப்பட்டது