சம்பா, சத்தீஸ்கர்
சம்பா (Champa) இந்தியாவின் சத்தீஸ்கர் மாநிலத்தின் ஜாஞ்சுகீர்-சாம்பா மாவட்டத்தில் உள்ள நகராட்சியுடன் கூடிய நகரம் ஆகும். ஹஸ்தேவ் ஆற்றின் கரையில் அமைந்த சம்பா நகரம், கடல் மட்டத்திலிருந்து 830 அடி (253 மீட்டர்) உயரத்தில் அமைந்துள்ளது. இந்நகரத்தில் நெய்யப்படும் உயர்தர கோசா பட்டுத் துணிகள் புகழ்பெற்றது.
சம்பா चाँपा | |
---|---|
நகரம் | |
ஆள்கூறுகள்: 22°03′N 82°39′E / 22.05°N 82.65°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | சத்தீஸ்கர் |
மாவட்டம் | ஜாஞ்சுகீர்-சாம்பா |
நிறுவிய ஆண்டு | 1671 |
தோற்றுவித்தவர் | இராஜா வீர பகதூர் தாக்கூர் நேம் சிங் |
அரசு | |
• வகை | நகராட்சி |
• நிர்வாகம் | சம்பா நகராட்சி (नगर पालिका परिषद चांपा) |
பரப்பளவு | |
• மொத்தம் | 40.24 km2 (15.54 sq mi) |
ஏற்றம் | 253 m (830 ft) |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 45,256 |
• தரவரிசை | 15th in state |
• அடர்த்தி | 1,100/km2 (2,900/sq mi) |
மொழிகள் | |
• அலுவல் மொழி | இந்தி, சத்தீஷ்கரி மொழி |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் சுட்டு எண் | 495671 |
தொலைபேசி அழைப்பு குறியீடு | 07819 |
வாகனப் பதிவு | CG 11 |
இணையதளம் | www |
மக்கள் தொகை பரம்பல்
தொகு2011-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, 21 வார்டுகளும், 9,843 வீடுகளும் கொண்ட நகரத்தின் மொத்த மக்கள்தொகை 45,256 ஆகும். அதில் 23,190 ஆண்கள் மற்றும் 22,066 பெண்கள் உள்ளனர். ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகள் 5747 (12.70%) ஆகவுள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு, 952 பெண்கள் வீதம் உள்ளனர். சராசரி எழுத்தறிவு 84.40% ஆகவுள்ளது. மக்கள்தொகையில் இந்துக்கள் 93.98%, முஸ்லீம்கள் 3.33% மற்றும் பிறர் 0.60% ஆகவுள்ளனர்.[1]
கல்வி நிறுவ்னங்கள்
தொகு- இந்தியக் கைத்தறி தொழில்நுட்ப நிறுவனம், சம்பா
- அரசு என். எம். ஆர். பட்டமேற்படிப்பு கல்லூரி
போக்குவரத்து
தொகுசாலைகள்
தொகுதேசிய நெடுஞ்சாலை எண் 1308, சம்பா நகரத்திற்கு 161 கிமீ தொலைவில் உள்ள மாநிலத் தலைநகரம் ராய்ப்பூர் நகரத்துடன் இணைக்கிறது. மேலும் தேசிய நெடுஞ்சாலை எண் 4 தில்லி நகரத்துடன் சம்பாவை இணைக்கிறது.
தொடருந்து நிலையம்
தொகுடாடாநகர-பிலாஸ்பூர் மற்றும் ஹவுரா-நாக்பூர்-மும்பை இருப்புப் பாதை வழித்தடத்தில் சம்பா தொடருந்து நிலையம் அமைந்துள்ளது. [2]