சயாத்ரி புலிகள் காப்பகம்
சயாத்ரி புலிகள் காப்பகம் (Sahyadri Tiger Reserve) என்பது 2008 ஆம் ஆண்டில் இந்திய அரசால் உருவாக்கப்பட்ட மகாராட்டிர மாநிலத்தில் உள்ள ஒரு காப்பகமாகும்.[1] மகாராட்டிரத்தின் மேற்குத் தொடர்ச்சி மலையின் சஹ்யாத்ரி மலைத்தொடர்களில் அமைந்துள்ள இது வடமேற்குத் தொடர்ச்சி மலை ஈரமான இலையுதிர் காடுகள்[2] , வடமேற்கு தொடர்ச்சி மலை மலை மழைக்காடுகளின் சுற்றுச்சூழல் பகுதிகளின் ஒரு பகுதியாகும்.[3] இந்த மலைத்தொடர்கள் மகாராஷ்டிரா - கர்நாடகா- கோவா இடையே ஒரு பொதுவான எல்லையை உருவாக்குகின்றன , மேலும் வளமான பசுமையான/ அரை பசுமையான, ஈரமான இலையுதிர் காடுகளை உருவாக்குகின்றன. இப்பகுதி நான்கு மாவட்டங்களில் பரவியுள்ளது. மேலும், சதாரா (மஹாபலேசுவர் மேதா சதாரா, பதான் வட்டங்கள் சாங்லி (சிராலா வட்டங்கள் கோலாப்பூர் (சௌவாடி வட்டங்கள்), ரத்னகிரி (சங்கமேசுவர் சிப்புளுன், கேட் வட்டங்களில் இப்பகுதியுள்ளது.
சயாத்ரி புலிகள் காப்பகம் | |
---|---|
காட்டுயிர்க் காப்பகம் | |
ஆள்கூறுகள்: 17°29′10″N 73°48′32″E / 17.486°N 73.809°E | |
Country | இந்தியா |
State | மகாராட்டிரம் |
Established | 2008 |
பரப்பளவு | |
• மொத்தம் | 1,166 km2 (450 sq mi) |
Languages | |
• Official | மராத்தி |
நேர வலயம் | ஒசநே+5:30 (இசீநே) |
Governing body | இந்திய அரசு, இந்திய வன அமைச்சகம் |
பகுதி
தொகுஇந்தப் புகலிடம் வடக்கு பகுதியை உருவாக்கும் கோய்னா கானுயிர் புகலிடம் மற்றும் சரணாலயத்தின் தெற்கு பகுதியை உருவாக்கும் சந்தோலித் தேசிய பூங்கா முழுவதும் பரவியுள்ளது. அண்மையில் இது ராடனகரி கானுயிர் புகலிடம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
புலிகள் காப்பகத்தின் மொத்த பரப்பளவு[4][5]
- மைய பகுதி: 600.12 km2 (231.71 sq mi)
- இடையக பகுதி: 565 km2 (218 sq mi)
- மொத்த பரப்பளவு: 1,166 km2 (450 sq mi)
விலங்கினங்கள்
தொகுஇந்தப் புகலிடம் வங்காளப் புலிகளின் பாதுகாப்பிற்காக கணிக்கையாக்கப்பட்டுள்ளது. 2018 மே 23 மற்றும் 24 ஆம் தேதிகளில் சந்தோலியில் ஒரு புலி ஒளிப்படக் கருவிக்குள் புகைப்படம் எடுக்கப்பட்டது , இது எட்டு ஆண்டுகளில் புகலிடப் புலிகளின் முதல் நேரடி சான்றாகும். அதற்கு முன்னர் 2014 ஆம் ஆண்டில் டி. என். ஏ, படிம அடிப்படையிலான கணிப்புகள் இந்த காப்பகத்தில் 5 முதல் 8 புலிகள் இருப்பதாக மதிப்பிட பயன்படுத்தப்பட்டன. இங்குள்ள மற்ற விலங்குகளில் சிறுத்தை அடங்கும்.
மேலும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "Four more tiger reserves to come up in the country". The Hindu. பார்க்கப்பட்ட நாள் 28 February 2016.
- ↑ "Southern Asia: Southwestern India". WWF. பார்க்கப்பட்ட நாள் 12 August 2013.
- ↑ Wikramanayake, Eric; Eric Dinerstein; Colby J. Loucks; et al. (2002). Terrestrial Ecoregions of the Indo-Pacific: a Conservation Assessment. Island Press; Washington, DC. pp 281-284.
- ↑ "Core buffer areas". Government of India. Archived from the original on 25 May 2015. பார்க்கப்பட்ட நாள் 28 February 2016.
- ↑ "Tiger Reserves - Wildlife Institute of India, an Autonomous Institute of MoEF, Govt. of India". பார்க்கப்பட்ட நாள் 28 February 2016.