இந்தியப் புலிகளின் காப்பிடங்கள்
இந்தியாவில் தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையத்தால் வழிகாட்டப்படும் புலிகள் திட்டத்தால் மேலாளப்படும் 54 புலிகள் காப்பகங்கள் உள்ளன.[1][2]இந்தியாவின் புலிக் காப்பகங்கள் 1973 இல் அமைக்கப்பட்டு,புலிகள் திட்டத்தால் மேலாளப்படுகின்றன. இதற்கு, இந்திய அரசு, தேசியப் புலிகள் பேணுதல் ஆணையம் வழிகாட்டுகிறது. புலிக் காப்பகங்களாக 2018 இல் 50 பாதுகாப்புப் பகுதிகள் பெயரிடப்பட்டன.[3]
2022 இல் 53 ஆம் புலிக் காப்பகம் [[ராணிப்பூர் கானுயிர் புகலிடம் இராணிப்பூர் கானுயிர் புகலிடம் உத்தரப்பிரதேசத்தில் மாநிலத்தின் மூன்றாம் புலிக் காப்பகமாக அறிவிக்கப்பட்டது.[4]
உலகப் புலிகளில் 80% இந்தியாவில்தான் உள்ளன. 2006 இல் 1,411 புலிகள் இருந்த நிலையில் , 2011ஈல் 1,706 ஆகவும் , 2014ஈல் 2,226 ஆகவும் உயர்ந்தது.[5] சுற்றுச்சூழல் அமைச்சரின் அண்மைய அறிக்கையின்படி , 2016 ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 2500 ஆக உயர்ந்தது.2006 இல், 1,411 ஆக இருந்த புலிகளின் தொகை 2022 இல் 3167 ஆக அதாவது, இருமடங்காக உய்ர்ந்தது என இந்தியா மதிப்பிட்டுள்ளது.[6][7]
இந்தியப் புலிகளின் தொகை கூடியமை, உலகளாவிய புலிகளின் தொகையைப் பெருக்குவதில் பெரும் பங்கு வகித்தது; 2010 இல் 3,159 ஆகவிருந்த உலகப் புலிகளின் தொகை in 2010 2016 இல்3890 ஆக உயர்ந்தது என உலகக் கானுயிர் நிதியமும் உலகப் புலிகள் பேரவையும் அறிவித்துள்ளன.[8]
இலக்குகள்
தொகுஇந்தியா" வில் உள்ள பேணுதல் சார்ந்த வங்காளப் புலிகளின் தொகையைப் பாதுகாக்க, 71,027.1 km2 (27,423.7 sq mi) பரப்பளவு புலிக் காப்பிடங்களை மாநிலக் கானியல் துறைகள் மேலாண்மை செய்கின்றன . புலிகள் "அவற்றின் அறிவியல், பொருளியல்வ் அழகியல், பண்பாட்டு, சுற்றுச்சூழல் விழுமியங்களுக்காகவும் உயிரியல் முதன்மை வாய்ந்த அனைத்து இடங்களையும் தேசிய மரபுச் சொத்தாகவும் கல்வி நோக்கத்துக்காகவும்"பேணப்படுகின்றன. [9]
புலித்தொகை மதிப்பீடு
தொகுதேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையத்தின் மதிப்பீட்டின்படி , இந்தியாவில் 1,411 வயது வந்த புலிகள் மட்டுமே இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.[10] 2010 தேசியப் புலிகள் மதிப்பீடு இந்தியாவில் புலிகளின் மொத்த மக்கள் தொகை 1,706 என மதிப்பிட்டுள்ளது. சுற்றுச்சூழல் மற்றும் கானகத்துறை அமைச்சகத்தின் கூற்றுப்படி , இந்தியாவில் புலிகளின் எண்ணிக்கை 2014 ஆம் ஆண்டில் 2,226 ஆக இருந்தது , இது 2010 ஆம் ஆண்டின் மதிப்பீட்டிலிருந்து 30,5% அதிகரித்துள்ளது.[11] சிறந்த பாதுகாக்கப்பட்ட புலிகள் வளக்களங்கள் , குறிப்பாக புலிகள் காப்பகங்கள் , சாத்தியமான தொகையைப் பேணிவருவதாக இந்த விரிவான ஆய்வு சுட்டிக்காட்டியது. இருப்பினும் பாதுகாக்கப்பட்ட பகுதிகளுக்கு வெளியே புலிகள் புழங்கிய பகுதி கணிசமாகக் குறைந்துள்ளது. புலிகள் தம் வள இடங்களுக்குச் செல்ல வழித்தடங்களின் தேவையை இது நிறுவுகிறது. தற்போதுள்ள புலிக் காப்பகங்கள் இந்தியாவின் அதிக அடர்த்தி கொண்ட கானகப்பகுதியில் மூன்றில் ஒரு பங்கில் அமைந்துள்ளன.[12] 2016ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் முந்தைய ஆண்டு முழுவதையும் விட அதிகமான புலிகள் கொல்லப்பட்டன. புலிகளின் கணக்கெடுப்பு எண்கள் அறிவியல் சமூகத்தால் கேள்விக்கு உல்ளாக்கும் முன் தக்கநேரத்தில் இந்த குறிப்பிடத்தக்க வெளியீடு வந்துள்ளது.
2010 - 2011 ஆம் ஆண்டில் தேசியப் புலிகள் பாதுகாப்பு ஆணையம், இந்திய வனவிலங்கு நிறுவனத்துடன் இணைந்து நாட்டில் உள்ள 44 புலிகள் காப்பகங்களின் த்ன்னாட்சி மேலாண்மை செயல்திறன் மதிப்பீட்டை மேற்கொண்டன. இருப்புக்கள் நான்கு முக்கிய பிரிவுகளாக வகைப்படுத்தப்பட்டன. கர்நாடகத்தில் ஒன்றரை வயதுக்குட்பட்ட புலிகளின் எண்ணிக்கை 408க்கும் அதிகமாக உள்ளன. குறிப்பிடத்தக்க புலித்தொகை கொண்ட பிற மாநிலங்களில் உத்தரகாண்டு (340) மத்தியப் பிரதேசம் (308) தமிழ்நாடு (229) மகாராட்டிரம் (190) அசாம் (167) கேரளா (136), உத்தரப் பிரதேசம் ஆகியவை அடங்கும்.[13]
இந்தியாவில் உள்ள புலி இருப்புக்களின் பட்டியல்
தொகுவ. எண். | உருவாக்கிய ஆண்டு | மாநிலம் | புலிகள் தொகை, 2018[3] | பரப்பளவு (கிமீ2) | |
---|---|---|---|---|---|
1 | பந்திப்பூர் | 1973–74 | கருநாடகம் | 120 | 868.63 |
2 | கார்பெத்து தேசியப் பூங்கா | 1973–74 | உத்தரகாண்டு | 216 | 1318.54 |
3 | கன்கா புலிக் காப்பகம் | 1973–74 | மத்தியப்பிரதேசம் | 80 | 940 |
4 | மானசு | 1973–74 | அசாம் | 11 | 500 |
5 | மேல்காட் | 1973–74 | மகாராட்டிரம் | 25 | 1677 |
6 | பாலமாவு புலிக் காப்பகம் | 1973–74 | ஜார்க்காண்டு | 3 | 414.93 |
7 | இரந்தம்பூர் | 1973–74 | இராசத்தான் | 37 | 1334 |
8 | சிமிலிபால் தேசியப் பூங்கா | 1973–74 | ஒடிசா | 99 | 2750 |
9 | சுந்தரவனம் தேசியப் பூங்கா | 1973–74 | மேற்கு வங்கம் | 96[14] | 1330.10 |
10 | பெரியாறு | 1978–79 | கேரளா | 20 | 350 |
11 | சரிசுகாபுலிகள் காப்பகம் | 1978–79 | இராசத்தான் | 9 | 881 |
12 | புக்சா | 1982–83 | மேற்கு வங்கம் | 2 | 760 |
13 | இந்திராவதி | 1982–83 | சத்தீசுகார் | 12 | 1258.37 |
14 | நம்தாபா | 1982–83 | அருணாச்சலப்பிரதேசம் | 11 | 1985.23 |
15 | துத்வா | 1987–88 | உத்தரப்பிரதேசம் | 58 | 490.3 |
16 | களக்காடு-முண்டந்துறை | 1988–89 | தமிழ் நாடு | 10 | 895 |
17 | வால்மீகி | 1989–90 | பீகார் | 40 | 898.45 |
18 | பெஞ்ச் | 1992–93 | மத்தியப்பிரதேசம் | 43 (மகாராட்டிரத் தொடர்ச்சி) | 292.85 |
19 | ததோபா-அந்தாரிபுலிகள் காப்பிடம் | 1993–94 | மகாராட்டிரம் | 115 | 625.4 |
20 | பந்தாவ்கர் | 1993–94 | மத்தியப்பிரதேசம் | 63 | 1536 |
21 | பன்னா | 1994–95 | மத்தியப்பிரதேசம் | 17 | 542.67 |
22 | தாம்பா | 1994–95 | மிசோரம் | 0 | 500 |
23 | பத்திரா கானுயிர் புகலிடம் | 1998–99 | கருநாடகம் | 22 | 892.46 |
24 | பெஞ்சு | 1998–99 | மகாராட்டிரம் | 35 (மத்தியப்பிரதேசத் தொடர்ச்சி) | 257.26 |
25 | பக்கே | 1999–2000 | அருணாச்சலப்பிரதேசம் | 7 | 861.95 |
26 | நமேரி | 1999–2000 | அசாம் | 5 | 200 |
27 | சாத்புரா புலிக் காப்பகம் | 1999–2000 | மத்தியப்பிரதேசம் | 26 | 524 |
28 | ஆனைமலை | 2008–09 | தமிழ் நாடு | 13 | 958 |
29 | சீதாநதி கானுயிர் புகலிடம் | 2008–09 | Chhattisgarh | 4 | 556 |
30 | சத்கோசியா | 2008–09 | ஒடிசா | 3 | 796 |
31 | கசிரங்கா | 2008–09 | அசாம் | 103 | 858.98 |
32 | அச்சனக்மார் கானுயிர் புகலிடம் | 2008–09 | சத்தீசுகார் | 11 | 557.55 |
33 | தந்தேலி-ஆன்சி புலிகள் காப்பகம் | 2008–09 | கருநாடகம் | 5 | 1300 |
34 | சஞ்சய் | 2008–09 | மத்தியப்பிரதேசம் | 8 | 466.68 |
35 | முதுமலை | 2007 | தமிழ் நாடு | 103 | 321 |
36 | நாகர்கோளே | 2008–09 | கருநாடகம் | 101 | 642.39 |
37 | பரம்பிக்குளம் புலிகள் காப்பகம் | 2008–09 | கேரளா | 19 | 643.66 |
38 | சயாத்திரி | 2009–10 | Maharashtra | 7 | 1166 |
39 | பிலிகிர் அரங்கநாதர் கோயில் | 2010–11 | கருநாடகம் | 68 | 539.52 |
40 | காவால் | 2012–13 | தெலுங்கானா | – | 2015.44 |
41 | சத்தியமங்கலம் | 2013–14 | தமிழ் நாடு | 72 | 1408.6 |
42 | முகந்திரா மலைகள் | 2013–14 | இராசத்தான் | – | 759.99 |
43 | நவேகான் | 2013–14 | மகாராட்டிரம் | 7 | 133.88 |
44 | நாகார்ஜுனசாகர்-சிறீசைலம் | 1982–83 | ஆந்திரப்பிரதேசம் | 74 | 3728 |
45 | அமிராபாது | 2014 | தெலுங்கானா | – | 2611.4 |
46 | பிலிபித் | 2014 | உத்தரப்பிரதேசம் | 65 | 602.79 |
47 | போர் | 2014 | மகாராட்டிரம் | 5 | 121.1 |
48 | இராஜாஜி | 2015 | உத்தரகாண்டு | – | 820.5 |
49 | ஒராங்கு | 2016 | அசாம் | – | 78.81 |
50 | காம்லாங்கு கானுயிர் பகலிடம் | 2016 | அருணாச்சலப்பிரதேசம் | – | 783 |
51 | சிறீவில்லிபுத்தூர் மேகமலை | 2021 | தமிழ் நாடு | 14 | 1016.57 |
52 | இராம்கார் விசுதாரி | 2021 | இராசத்தான் | 35 | 1501.89 |
53 | குரு காசிதாசு தேசியப் பூங்கா, தாமூர் பிங்கிளா கானுயிர் புகலிடம் |
2022 | சத்தீசுகார் | ||
54 | இராணிப்பூர் கானுயிர் புகலிடம்[15] | 2022 | உத்தரப்பிரதேசம் |
- குறிப்பு: உத்தரப்பிரதேச சாமங்கார் புலிக் காப்பகம் என்பது ஜிம் கார்பெத்து தேசியப் பூங்காவின் இணை வட்டாரம் ஆகும்.[16] எனவே இது தனியான புலிக் காப்பிடமாகக் கருதப்படுவதில்லை. இதன் கூடுதல் பரப்பளவு 80.6 km2 (31.1 sq mi) ; இதில் மைய புலிகள் வாழிடம் அமையவில்லை.[17]
எதிர்காலம்
தொகுதற்போதுள்ள காப்பகங்களுடன் கூடுதலாக, நான்கு புதிய புலிகள் காப்பகங்களை உருவாக்க தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையத்தால் கொள்கை அளவில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது, மேலும், ரதபானி புலிகள் காப்பகம் (மத்திய பிரதேசம்), சுனபேடா புலிகள் காப்பகம் (ஒடிசா), குரு காசிதாஸ் (சத்தீசுகர்)ஆகியன மாநிலங்களால் புலிகள் காப்பகமாக அறிவிக்கவும் குத்ரேமுக் தேசிய பூங்காவிற்கு கருநாடகத்துக்கும் இறுதி ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. பின்வரும் பகுதிகளை புலிகள் காப்பகங்களாக அறிவிப்பதற்கான முன்மொழிவுகளை அனுப்புமாறு மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது: (i) சுகெல்வா [18] (உத்தரப் பிரதேசம்), (ii) மகாதேய் புகலிடம் (கோவா), (iii) சிறீவில்லிபுத்தூர் நரைத்த அணில் கானுயிர் புகலிடம் / மேகமலை கானுயிர் புகலிடம் ( திவ்வனம் கானுயிர் புகலிடம் அருணாச்சல பிரதேசம், ) காவிரி - மாதேசுவரன் மலை (கர்நாடகம்). [19]
காட்சிமேடை
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ http://projecttiger.nic.in/content/109_1_ListofTigerReservesCoreBufferAreas.aspx
- ↑ "Core buffer areas". Government of India. பார்க்கப்பட்ட நாள் 22 January 2016."Core buffer areas". Government of India. Retrieved 22 January 2016.
- ↑ 3.0 3.1 Jhala, Y. V.; Qureshi, Q.; Nayak, A. K. (2019). Status of tigers, co-predators and prey in India 2018. Summary Report. TR No./2019/05 (PDF) (Report). New Delhi, Dehradun: National Tiger Conservation Authority & Wildlife Institute of India.
- ↑ "Uttar Pradesh gears up for its fourth tiger reserve in Chitrakoot". newsonair.com. 2022. https://newsonair.com/2022/10/01/uttar-pradesh-gears-up-for-its-fourth-tiger-reserve-in-chitrakoot/.
- ↑ "India's tiger population sees 30% increase". BBC. http://www.bbc.com/news/world-asia-30896028.
- ↑ "India's tiger population sees 33% increase". BBC. 2019. https://www.bbc.com/news/world-asia-india-49148174.
- ↑ "India’s tiger population tops 3,000, shows census" (in en-IN). The Hindu. 2023-04-09. https://www.thehindu.com/sci-tech/energy-and-environment/indias-tiger-population-in-2022-was-3167-reveals-latest-census-data-released-by-pm/article66716598.ece.
- ↑ "2967 – What the new global Tiger number means". WWF. 2016.
- ↑ "Project Tiger" (PDF). Delhi: Government of India. பார்க்கப்பட்ட நாள் 22 January 2016.
- ↑ Status of the Tigers, Co-predators, and Prey in India (PDF). National Tiger Conservation Authority, Govt. of India.
- ↑ "Population Of Big Cats". பார்க்கப்பட்ட நாள் 22 January 2016.
- ↑ "Tiger Estimate in India" (PDF). Public Information Brochure. Ministry of Environment and Forests, GOI. 28 March 2011. p. 9. பார்க்கப்பட்ட நாள் 21 June 2011.
- ↑ "India's tiger population rises". Deccan Chronicle. http://www.deccanchronicle.com/150120/nation-current-affairs/article/tiger-population-rises-2226-2014-1706-2010.
- ↑ "Sunderbans home to 96 tigers, Bengal Forest Dept. estimates" (in en-IN). The Hindu. 2021-07-29. https://www.thehindu.com/news/national/other-states/sunderbans-home-to-96-tigers-bengal-forest-dept-estimates/article35617823.ece.
- ↑ "Uttar Pradesh gets its 4th tiger reserve with Ranipur Tiger Reserve". The Times of India. https://timesofindia.indiatimes.com/travel/travel-news/uttar-pradesh-gets-its-4th-tiger-reserve-with-ranipur-tiger-reserve/articleshow/95300281.cms.
- ↑ "National Tiger Conservation Authority". ntca.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2021-09-19.
- ↑ "Tiger Reserves". Wildlife Institute of India. பார்க்கப்பட்ட நாள் 2021-09-19.
- ↑ "Suhelwa Sanctuary". UP Tourism. பார்க்கப்பட்ட நாள் 22 January 2016.
- ↑ http://timesofindia.indiatimes.com/home/environment/flora-fauna/In-principle-approval-given-to-4-new-tiger-reserves-Government/articleshow/51211020.cms