மேல்காட்
1973 ஆம் ஆண்டில் புலிகள் திட்டத்தின் கீழ் அறிவிக்கப்பட்ட இந்தியாவின் முதல் ஒன்பது புலிகள் காப்பகங்களில் மேல்காட்டும் ஒன்றாகும். இது மாகாராட்டிரம், அமராவதி மாவட்ட வடக்கில், 21°26′45″N 77°11′50″E / 21.44583°N 77.19722°E ஆயக்கூறுகளில் அமைந்துள்ளது. மேல்காட் கானுயிர் புகலிடம் 1985 இல் அறிவிக்கப்பட்டது. தபதி ஆறு மேல்காட் கானுயிர் புகலிடத்துக்கு வடக்கே பாய்கிறது. புகலிட எள்லைகளாக தபதுயாறும் காவிகர் முகடும் சாத்பூரா மலைதொடரும் அமைகின்றன.
Melghat | |
---|---|
வரலாறு
தொகு1484 ஆம் ஆண்டில் இமாத் சாகி வம்சம் நிறுவப்பட்ட பெராவை அடைய வடக்கிலிருந்து மன்னர்கள் கடந்து சென்ற மேல்காட்டில் கணவாய்கள் உள்ளன. வரலாற்று சிறப்புமிக்க நாரனாலா கவில்கர் கோட்டைகள் முதமையான கிழக்கு - மேற்கு மலைத்தொடரின் பாதுகாப்பை வழங்கின. 1803 ஆம் ஆண்டில் இரண்டாம் மராட்டியப் போரில் , பின்னர் வெலிங்டன் டியூக் ஆன கர்னல் ஆர்தர் வெல்லெசுலி , மராத்தியர்களிடமிருந்து கவில்கர் கோட்டையைக் கைப்பற்றினார்.[1]
புவியியல்
தொகுமகாராஷ்டிராவின் அமராவதி மாவட்டத்தின் வடக்கு முனையில், மத்தியப் பிரதேசத்தின் எல்லையில், தென்மேற்கு சாத்புரா மலைத்தொடர்களில் மேல்காட் உள்ளது. மெல்காட் என்றால் 'மலைகளின் தொடர்' என்று பொருள், இது துண்டிக்கப்பட்ட பாறைகள், செங்குத்தான ஏறுதல்களின் நடுவில் இருக்கும் முடிவில்லாத மலைகள், பள்ளத்தாக்குகளின் ஊடாக நெடுஞ்சாலை ஒன்று செல்கிறது.
மேல்காட் பகுதி 1974 ஆம் ஆண்டு புலிகள் காப்பகமாக அறிவிக்கப்பட்டது.இது மேகத் புலிக் காப்பக நிர்வாக அளவில், சிப்னா, குகமால், அகோட் என கானுயிர் காப்பிடப் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. தற்போது, மொத்த பரப்பளவு இருப்பு சுமார் 1677 கி. மீ.2 . சிப்னா, குகமால் வனவிலங்கு பிரிவின், மையப் பகுதியில் 10-க்கும் மேற்பட்ட ஊர்கள் உள்ளன. அகோட் வனவிலங்கு பிரிவில் மையப் பகுதியில் ஊர்கள் இல்லை. அகோட் வனவிலங்கு பிரிவில் அனைத்து ஊர்களும் மறுவாழ்வு பெறுகின்றன.
இந்த காடு வெப்பமண்டல வறண்ட இலையுதிர் இயல்பு உடையதாகும், இதில் தேக்கு (டெக்டோனா கிராண்டிசு) பேரளவில் அமைகிறது. இந்த இருப்பு ஐந்து முக்கிய நதிகளின் நீர்ப்பிடிப்பு பகுதியாகும்: காண்டு, கப்ரா, சிப்னா, கட்கா டோலர்மாகிய ஐந்து ஆறுகளும் தபதியின் கிலையாறுகளாகும்.
விலங்கினங்கள்
தொகுமேல்காட்டில் உள்ள முதன்மை விலங்கினங்கள் வங்காளப் புலி, இந்தியச் சிறுத்தை, சுலோத்துக் கரடி, தோலே இந்திய நரி, சாம்பார் கவுர், குரைக்கும் மான், நீல்காய் சிதல், சௌசிங்கா தேன் பட்டைப் பறக்கும் அணில், காட்டுப்பன்றி, இலங்கூர் இரீசசு குரங்கு, இந்திய முள்ளம்பன்றி, இந்திய பாங்கோலின் சுட்டி, மலைப்பாம்பு, மென்மையான பூசப்பட்ட நீர்நாய், கருப்பு - நெப்பி முயல் ஆகியனவாகும்.
மக்கள் தொகை
தொகுகாப்பகத்துக்கு வெளியே 61 ஊர்கள் உள்ளன. 22 ஊர்கள் அருகாமையிலும் 39 ஊர்கள் பயன்பாட்டிடங்களிலும் உள்ளன அருகாமையிலும் பயனிடங்களிலும் உல்ள மக்கள்தொகை, 1994 மக்கள்தொகைக் கண்க்கீட்டின்படி, முறையே 11024 பேரும் 15642 பேரும் ஆவர்.
இங்கு வசிக்கும் முதன்மையான பழங்குடியினர், பெரும்பாலும் கோர்கு பழங்குடியினர் (80% ) ஆவர். கோண்டு, நிகால், பலாய், கோலன், கவாலி, கல்பி, வஞ்சாரி, மராத்தா போன்றவர்களும் வாழ்கின்றனர். விறகு, மரம், தீவனம், மருத்துவத் தாவரங்கள் மரமற்ற காட்டுப் பொருட்களான பழம், பூக்கள், பசை, மருத்துவத் தாவரங்கள் ஆகியவற்றின் உண்மையான உள்நாட்டுத் தேவைகளுக்காக அனைத்து மக்களும் காடுகளையே சார்ந்துள்ளனர். இவர்களின் முதன்மை வருமான வாயில்கள் உடல் உழைப்பும் மழைக்கால வேளாண்மையும் ஆகும். மரமல்லாத காடுகளான mahuali, பூக்கள், விதைகள், கரோலி, கம்குலா, dhawada, டெண்டு இலைகள் முசலி (ஒரு மருத்துவ தாவரம்) போன்றவற்றைத் திரட்டி தங்கள் வருமானத்தைப் பெருக்குகிறார்கள்.
சுற்றுலா
தொகுமகாராட்டிரத்தின் அமராவதி மாவட்டத்தில் அமைந்துள்ள மேல்காட், புலிக் காப்பு, கானுயிர் புகலிடமாகும். மேல்காட் புலிக் காப்பகம் மத்திய இந்தியாவில் சாத்புரா மலைத்தொடரின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ளது, இது கவில்கர் மலை என்று அழைக்கப்படுகிறது. இது நாக்பூருக்கு மேற்கே 2225 கி.மீ தொலைவில் 1967 இல் கானுயிர் காப்பிடமாக நிறுவப்பட்டது, மேலும் 1974 இல் புலிக் காப்பகமாகவும் அறிவிக்கப்பட்டது. 1973-74 ஆம் ஆண்டில் அறிவிக்கப்பட்ட முதல் ஒன்பது புலி இருப்புக்களில் இதுவும் ஒன்றாகும். புலித் திட்டம், வங்காளப் புலிகளைப் பாதுகாக்க 1972 ஆம் ஆண்டில் இந்தியாவில் தொடங்கப்பட்ட கானுயிர் பாதுகாப்பு திட்டம் ஆகும்.
புலிகளைத் தவிர மற்ற முதன்மை விலங்குகள் சோம்பல் கரடி, இந்திய கவுர், சாம்பார் மான், சிறுத்தை, நீலகாய் போன்றவை அமைகின்றன. அழியும் இடரில் உள்ள, 'அழிந்து வரும்' காட்டு ஆந்தை ஆகியன மேல்காட்டின் பல்வேறு பகுதிகளில் காணப்படுகின்றன.
மேல்காட்டில் 4 சுற்றுலா மையங்கலிலும் செமடோ, சிக்கல்தாரா, கரிசல், சாநூர் ஆகிய ஊர்களிலும் பரவி உள்ளன. 14 தங்கும் இடங்கள் செமாடோவுக்கு 14 கி.மீ தொலைவில் கோல்காசில் உள்ளன.
சிக்கல்தாரா, செமாடோ, கொல்காசு, கரிசல் ஆகிய இடங்களுக்குச் செல்வதற்கு அருகிலுள்ள தொடருந்து நிலையம் அமராவதி ஆகும், இது சாநூர் அகோலாவுக்கு மிக அருகில் உள்ளது. அருகிலுள்ள விமான நிலையம் நாக்பூரில் 250 கிமீ தொலைவில் உள்ளது.
சுற்றுலாப் பயணிகள் அனைத்துப் பருவங்களிலும் மேல்காட்டை சுற்றிப் பார்க்க முடியும், ஆனால் ஜூலை நடுப்பகுதியில் தொடங்கி செப்டம்பர் இறுதி வரையிலான பருவமழை காலமே சிறந்த காட்சிகளை வழங்குகிறது. குளிர்காலம் குளிர்ச்சியாக இருக்கும், இரவு வெப்பநிலை 5 பாகைக்கும் கீழே குறைகிறது. கோடைக்காலம் விலங்குகளைப் பார்ப்பதற்கு ஏற்றது.
மேல்காட்டில் தங்கும் ஏற்ப்பாடுகள் பெரும்பாலும் கானகத்துறையால் நடத்தப்படுகின்றன, சிக்கல்தாராவில் உள்ள உணவு விடுதிகள், ஓய்வு விடுதிகள் தனியாரால் நடத்தப்படுகின்றன. அவை அமைந்துள்ள காடுகளின் வளிமண்டலத்திற்கு ஏற்றவகையில் இயற்கையாகவும் மிகவும் அடிப்படையானதாகவும் உள்ளன.
மேற்கோள்கள்
தொகு- ↑ ""Melghat history", Sanctuary Asia Magazine". Archived from the original on 2016-03-06. பார்க்கப்பட்ட நாள் 2023-07-23.