சரவணம்பட்டி இரத்தினகிரி மருதாச்சல கடவுள் கோயில்
சரவணம்பட்டி இரத்தினகிரி மருதாசால கடவுள் கோயில் என்பது தமிழ்நாட்டில் கோயம்புத்தூர் மாவட்டம், சரவணம்பட்டி என்னும் ஊரில் அமைந்துள்ள ஒரு முருகன் கோயில் ஆகும்.[1]
அருள்மிகு இரத்தினகிரி மருதாசால கடவுள் கோவில் | |
---|---|
ஆள்கூறுகள்: | 11°05′38″N 77°00′38″E / 11.0939°N 77.0106°E |
அமைவிடம் | |
நாடு: | இந்தியா |
மாநிலம்: | தமிழ்நாடு |
மாவட்டம்: | கோயம்புத்தூர் |
அமைவிடம்: | சக்திமெயின் ரோடு, கரட்டுமேடு, சரவணம்பட்டி, கோவை வடக்கு வட்டம்[1] |
சட்டமன்றத் தொகுதி: | கவுண்டம்பாளையம் |
மக்களவைத் தொகுதி: | கோயம்புத்தூர் |
ஏற்றம்: | 505 m (1,657 அடி) |
கோயில் தகவல் | |
மூலவர்: | இரத்தினகிரி மருதாசலகடவுள் |
சிறப்புத் திருவிழாக்கள்: | மாட்டுப்பொங்கல், பூப்பறிக்கும் விழா |
வரலாறு | |
கட்டிய நாள்: | பத்தொன்பதாம் நூற்றாண்டு[சான்று தேவை] |
இருப்பிடம்
தொகுகோவை- சத்தியமங்கலம் சாலையில் சரவணம்பட்டியில் உள்ளது. திறக்கும் நேரம்: காலை 6.00 - 1.00 மணி மாலை 4.00 – 7.30 மணி
தல வரலாறு
தொகுசிவனை நோக்கி தவம் செய்து வரம் பெற்ற சூரபத்மன் இந்திரனை அழிக்க வந்தார். அப்போது இரத்தினகிரி மலையில் ஒளிந்துகொண்டார். இந்திரனை முருகன் மயிலாக மாற்றினார். சூரபத்மனை அசுரமயிலாக மாற்றினார். முருகனுக்கு இடப்புறம் இந்திரமயில், வலப்புறம் அசுரமயில் என இரு மயில்கள் இருந்தன.
வரலாறு
தொகுஇக்கோயில் பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.[சான்று தேவை]
கோயில் அமைப்பு
தொகுஇக்கோயிலில் இரத்தினகிரி மருதாசலகடவுள் சன்னதியும், விநாயகர், இடும்பன், கன்னிமார் உபசன்னதிகளும் உள்ளன. இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. 1927-ஆம் ஆண்டின் அறநிலையப் பாதுகாப்புச் சட்டப்படி அரசு நிருவாக அலுவலரால் நிர்வகிக்கப்படுகிறது.[2]
பூசைகள்
தொகுஇக்கோயிலில் இரண்டு காலப் பூசைகள் நடக்கின்றன. தை மாதம் மாட்டுப்பொங்கல், பூப்பறிக்கும் விழா முக்கிய திருவிழாவாக நடைபெறுகிறது.
திருவிழா
தொகு- அமாவாசை,
- காணும் பொங்கல்,
- கிருத்திகை,
- தைப்பூசம்,
- வைகாசி விசாகம். [3]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 1". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்பிரவரி 19, 2017.
- ↑ "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 2". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்பிரவரி 19, 2017.
- ↑ ஆன்மிக மலர் - தினமலர் சூன் 17 – 2017.