சரவணம்பட்டி

தமிழ்நாட்டின் கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்ப் பகுதி

சரவணம்பட்டி (ஆங்கில மொழி: Saravanampatti) என்பது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்திலுள்ள கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட ஒரு புறநகர்ப் பகுதி ஆகும். கோவை மாநகராட்சியின் ஒரு பகுதியாக சரவணம்பட்டி 2011 முதல் உள்ளது.[1] போக்குவரத்து நெரிசலை குறைக்க சரவணம்பட்டியில் இருவழி மேம்பாலம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.[2][3]

சரவணம்பட்டி
Saravanampatti
புறநகர்ப் பகுதி
சரவணம்பட்டி Saravanampatti is located in தமிழ் நாடு
சரவணம்பட்டி Saravanampatti
சரவணம்பட்டி
Saravanampatti
தமிழ்நாட்டில் சரவணம்பட்டியின் அமைவிடம்
ஆள்கூறுகள்: 11°05′24″N 76°59′52″E / 11.09000°N 76.99778°E / 11.09000; 76.99778
Country இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்கோயம்புத்தூர்
வட்டம்கோயம்புத்தூர் வடக்கு
மக்கள்தொகை
 • மொத்தம்32,920
மொழிகள்
 • அலுவல்தமிழ்
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
அஞ்சல் குறியீட்டு எண்
641035, 641049
தொலைபேசி இணைப்பு எண்91–422
வாகனப் பதிவுTN-38
மக்களவைத் தொகுதிகோயம்புத்தூர்
மாநிலச் சட்டப் பேரவைத் தொகுதிகவுண்டம்பாளையம்

மக்கள் வகைப்பாடு

தொகு

இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி[4] 17,643 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 52% ஆண்கள், 48% பெண்கள் ஆவார்கள். சரவணம்பட்டி மக்களின் சராசரி கல்வியறிவு 78% ஆகும். இதில் ஆண்களின் கல்வியறிவு 83%, பெண்களின் கல்வியறிவு 72% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியது. சரவணம்பட்டி மக்கள் தொகையில் 10% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.

கல்வி, தொழில்

தொகு

கோவையில் வேகமாக வளர்ந்து வரும் சுற்றுப்புறங்களில் சரவணம்பட்டியும் ஒன்றாகும். பீளமேடு, கீரணத்தம், விளாங்குறிச்சி, காளப்பட்டி போன்ற பகுதிகளில் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் சிலவும் இங்கு கிளைகளை அமைத்துள்ளன. மேலும், இங்கு குமரகுரு பொறியியல் கல்லூரி முதலான கோவையின் குறிப்பிடத்தக்க கல்லூரிகளும் பள்ளிகளும் அமைந்துள்ளன.

கோவை மெட்ரோ

தொகு

கோயம்புத்தூர் மெட்ரோ கணேசபுரத்திலிருந்து அன்னூர் அருகே சரவணம்பட்டி வழியாக சத்தி சாலை வழியாக காருண்யா நகர் 44 கிமீ வரை மெட்ரோ வழித்தடத்தை முன்மொழிந்துள்ளது.

மேற்கோள்கள்

தொகு
  1. "Corporation to have 28 more wards under its limit". The Times of India. பார்க்கப்பட்ட நாள் 14 April 2021.
  2. "Four new flyovers to come up in most congested areas". The Times of India. பார்க்கப்பட்ட நாள் 14 April 2021.
  3. "Industry demands infrastructure projects, Minister assures efforts to expedite airport expansion". The Hindu. பார்க்கப்பட்ட நாள் 14 April 2021.
  4. "Census of India 2011: Data from the 2011 Census, including cities, villages and towns (Provisional)". Census Commission of India. Archived from the original on 2004-06-16. பார்க்கப்பட்ட நாள் 2008-11-01.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சரவணம்பட்டி&oldid=4138436" இலிருந்து மீள்விக்கப்பட்டது