சரவாக் தயாக் மக்கள் கட்சி

சரவாக் மாநிலத்தில் இயங்கிய ஓர் அரசியல் கட்சி

சரவாக் தயாக் மக்கள் கட்சி (ஆங்கிலம்: Sarawak Dayak People's Party; மலாய்: Parti Bansa Dayak Sarawak) (PBDS) என்பது மலேசியா, சரவாக் மாநிலத்தில் இயங்கிய ஓர் அரசியல் கட்சியாகும். இந்தக் கட்சி சரவாக் தயாக்கு பூர்வீக மக்களைச் சார்ந்த ஓர் அரசியல் கட்சியாக உருவாக்கப்பட்டது.

சரவாக் தயாக் மக்கள் கட்சி
Sarawak Dayak People's Party
Parti Bansa Dayak Sarawak
砂拉越達雅黨
ڤرتي بنسا دايق سراوق
சுருக்கக்குறிPBDS
தலைவர்டேனியல் தாஜம் மிரி
(Daniel Tajem Miri)
நிறுவனர்லியோ மோகி
(Leo Moggie Irok)
தொடக்கம்17 சூலை1983
கலைப்பு21 அக்டோபர் 2004
பிரிவுசரவாக் தேசிய கட்சி
பின்னர்சரவாக் மக்கள் கட்சி (PRS)
மலேசிய தயாக் காங்கிரசு
புதிய சரவாக் தயாக் கட்சி
தலைமையகம்கூச்சிங், சரவாக்
தேசியக் கூட்டணிபாரிசான் நேசனல் (1983–2004)
கும்புலான் மாஜு (1987)
நிறங்கள்கருப்பு, வெள்ளை

1983-இல், டான்ஸ்ரீ டத்தோ அமர் லியோ மோகி அனாக் ஐரோக் (Datuk Amar Leo Moggie Irok) என்பவரால் உருவாக்கப்பட்ட இந்தக் கட்சி, சரவாக் தேசிய கட்சியில் இருந்து (SNAP) பிரிந்து சென்ற கட்சியாகும்.[1] இந்தக் கட்சி1987 சரவாக் மாநிலத் தேர்தலில் 15 இடங்களை வென்றது. அதன் பங்காளிக் கட்சியான சரவாக் மலேசிய மக்கள் சங்கம் (PERMAS) 5 இடங்களை மட்டுமே வென்றது.

பொது

தொகு

தலைமைத்துவ நெருக்கடியின் காரணமாக, முதலில் 2003-ஆம் ஆண்டிலும் இரண்டாவதாக 2004-ஆம் ஆண்டிலும் சரவாக் தயாக் மக்கள் கட்சி இரண்டு முறை கலைக்கப்பட்டது.

சரவாக் தயாக் மக்கள் கட்சியின் கலைப்பு, மேலும் இரண்டு புதிய கட்சிகளை உருவாக்க வழிவகுத்தது; ஒன்று சரவாக் மக்கள் கட்சி (PRS). சரவாக் மக்கள் கட்சி 2004-இல் பாரிசான் நேசனல் கூட்டணியுடன் சேர்வதற்கு அனுமதிக்கப்பட்டது. மற்றொரு கட்சியான மலேசிய தயாக் காங்கிரசு கட்சி (Malaysian Dayak Congress) (MDC) சங்கங்களின் பதிவாளரிடம்(RoS) பதிவு செய்யத் தவறிவிட்டது.[2]

மேலும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு

வெளி இணைப்புகள்

தொகு