சரோஜினி நாயுடு மகளிர் கல்லூரி
குறிக்கோளுரை | ஸ்வஸ்மாய் ஸ்வல்பம் சமாஜாய சர்வஸ்வம் |
---|---|
வகை | இளங்கலை மற்றும் முதுகலை பிரிவுடன் கூடிய பொது பட்டக் கல்லூரி |
உருவாக்கம் | 1956 |
சார்பு | மேற்கு வங்காள மாநில பல்கலைக்கழகம் |
முதல்வர் | முனைவர் ஊர்மிளா உகில் |
அமைவிடம் | 30, ஜெசோர் சாலை , , , 700028 , 22°37′36″N 88°25′04″E / 22.6266261°N 88.4177518°E |
வளாகம் | நகர்ப்புறம் |
இணையதளம் | கல்லூரி இணையதளம் |
சரோஜினி நாயுடு மகளிர் கல்லூரி என்பது 1956 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டதும் மேற்கு வங்காளத்தின் கொல்கத்தா டம் டம்மில் இயங்கிவருவதுமான ஒரு மகளிர் கல்லூரியாகும். கலை மற்றும் அறிவியல் பிரிவுகளில் இளங்கலை படிப்புகளையும், வங்காளம் மற்றும் ஆங்கிலத்தில் முதுகலை படிப்புகளும் பயிற்றுவிக்கப்படும் இக்கல்லூரி, மேற்கு வங்காள[1] மாநில பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. சுதந்திர போராட்ட வீரரும் வங்காள மொழிக் கவிஞருமான சரோஜினி நாயுடுவினை பெருமைப்படுத்தி நினைவுகூரும் வகையில் கல்லூரிக்கு இப்பெயர் வைக்கப்பட்டுள்ளது.
வரலாறு
தொகுஇந்த சரோஜினி நாயுடு மகளிர் கல்லூரி 1956 ஆம் ஆண்டில் அப்போதைய மேற்கு வங்க முதலமைச்சர் டாக்டர் பிதன் சந்திர ராய் அவர்களால் முந்தைய கிழக்கு பாக்கித்தானில் இருந்து (தற்போது வங்காளதேசம்) கொல்கத்தாவிலும் அதைச் சுற்றியும் குடியேறிய பெண் அகதிகளின் கல்வி மற்றும் அதிகாரமளித்தலுக்கான கல்வி நிறுவனமாக நிறுவப்பட்டது. இக்கல்லூரியின் முதல் முதல்வர் புகழ்பெற்ற சுதந்திர போராட்ட வீரரும் தத்துவஞானியுமான ரிஷி அரவிந்தாவின் மருமகள் திருமதி லத்திகா கோஷ் ஆவார்.[2]
துறைகள்
தொகுஅறிவியல் பிரிவு
தொகு- புவியியல்
- வேதியியல்
- இயற்பியல்
- கணிதம்
- தாவரவியல்
- விலங்கியல்
- மானுடவியல்
- மூலக்கூறு உயிரியல்
- உளவியல்
- உணவு மற்றும் ஊட்டச்சத்து
- சுற்றுச்சூழல் அறிவியல்
- கணினி பயன்பாடு
கலை மற்றும் வணிகப்பிரிவு
தொகு- பெங்காலி
- ஆங்கிலம்
- சமஸ்கிருதம்
- வரலாறு.
- அரசியல் அறிவியல்
- தத்துவம்
- பொருளாதாரம்
- உளவியல்
- சமூகவியல்
- ஹிந்தி
- கல்வி
- உடற்கல்வி
- வணிகம்
அங்கீகாரம்
தொகுஇந்த மகளிர் கல்லூரியானது பல்கலைக்கழக மானியக் குழுவினால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது[3]. தேசிய மதிப்பீடு மற்றும் அங்கீகார கவுன்சிலால் (என்ஏஏசி) நான்காவது சுழற்சியில் (16-01-2016) ஏ தரமதிப்பீடு (2.89 சிஜிபிஏ) பெற்று அங்கீகாரம் பெற்றுள்ளது.
மேலும் காண்க
தொகு- இந்தியாவில் கல்வி
- மேற்கு வங்காளத்தில் உள்ள கல்லூரிகளின் பட்டியல்
- மேற்கு வங்காளத்தில் கல்வி