சர்குல்
சர்குல் (Sarhul) என்பது இந்தியாவின் சார்க்கண்டு மாநிலத்தில் கொண்டாடப்படும் வசந்த விழாவாகும். சுக்ல பக்ஷத்தில் சித்திரை மாதத்தின் 3வது நாள் முதல் அனுமன் ஜெயந்தி வரை மூன்று நாட்கள் திருவிழா கொண்டாடப்படுகிறது. இத்திருவிழாவின் போது, கிராம பூசாரி பஹன் கிராமத்தின் நல்வாழ்வுக்காகச் சூரியன், கிராம தெய்வம் மற்றும் மூதாதையருக்குப்பூக்கள், பழங்கள், சாதிலிங்கம், சேவல் மற்றும் தபன் (மதுபானம்) ஆகியவற்றை சர்ணத்தில் பலி கொடுக்கிறார். அப்போது உள்ளூர் வாசிகள் குங்கிலியம் மரத்தின் பூக்களை பிடித்துக்கொண்டு நடனமாடுகிறார்கள். இது புதிய ஆண்டின் தொடக்கத்தின் அடையாளமாக அனுசரிக்கப்படுகிறது.[1][2][3] பாரம்பரியத்தின் படி, இது பூமிக்கும் சூரியனுக்கும் இடையிலான திருமணத்தையும் குறிக்கிறது.[4] இது குருக் மற்றும் சதான் மக்களால் கொண்டாடப்படும் முக்கியமான பண்டிகையாகும்.[5] குருக்களில் இது காடி ('பூ') என்று குறுக்ஸ் மொழியில் அழைக்கப்படுகிறது.
இது பூமிஜ் மக்கள், முண்டா மத்தியில் ஹடி போங்கா என்று அழைக்கப்படுகிறது.[6] ஹோ மக்கள் மற்றும் சந்தாலிகள் மக்களிடையே இது பஹா பராப் என்று அழைக்கப்படுகிறது.[7]
சொற்பிறப்பியல்
தொகுசர்குல் என்பது நாக்புரி திருவிழாவின் பெயர். சர் அல்லது சாராய் என்பது நாக்புரியில் உள்ள குங்கிலிய மரத்தை (சோரியா ரோபசுதா) குறிக்கிறது. ஹல் என்றால் 'கூட்டு', 'தோப்பு' என்றும் பொருள். இது குங்கிலியம் மூலம் இயற்கையைக் கொண்டாடுவதைக் குறிக்கிறது.[8]
மாற்று விளக்கங்கள்:
• ஹல் என்பது 'புரட்சி' என்பதைக் குறிக்கலாம், இது குங்கிலியப் பூக்கள் மூலம் புரட்சி என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. [9]
• சார் என்றால் ஆண்டு மற்றும் ஹல் என்றால் ஆரம்பம். இது ஒரு புதிய ஆண்டின் தொடக்கத்தைக் குறிக்கிறது எனவும் பொருள் கொள்ளப்படுகிறது.[10]
திருவிழா
தொகுஇத்திருவிழாவில் மக்கள் சர்ணா எனப்படும் காப்புக்காடுகள் உள்ள வழிபாட்டுத் தளத்தில் வழிபாடு செய்கின்றனர். இந்த நாளில் உழுவது தடைசெய்யப்பட்டுள்ளது. பண்டிகைக்கு ஒரு நாள் முன்னதாக மக்கள் விரதம் இருப்பார்கள். இளைஞர்கள் அருகிலுள்ள காட்டிலிருந்து குங்கிலியம் பூக்களைச் சேகரிப்பதுடன், நண்டு மற்றும் மீன்களைப் பிடிக்கிறார்கள். திருவிழாவின் போது மக்கள் தோல் எனும் ஒரு வகை மத்தளம், நாகரா, மதல் உள்ளிட்ட இசைக்கருவிகளை இசைத்துக்கொண்டு சர்ணாவுக்குச் செல்கின்றனர். இங்கு இவர்கள் குங்கிலிய மரத்தை வணங்குகிறார்கள். குங்கிலிய மரத்தின் பூக்களைப் பக்தர்கள் தெய்வங்களுக்குப் படைக்கின்றனர். லயா அல்லது பூஜார் என்று அழைக்கப்படும் கிராம பூசாரியான பகன், கிராமத்தின் நன்மைக்காகப் குங்கிலிய பூக்கள், பழங்கள், சாதிலிங்கம், மூன்று சேவல்கள் மற்றும் தபன் (மதுபானம்) ஆகியவற்றினை கிராம தெய்வத்திற்குக் காணிக்கையாகக் கொடுப்பார். சூரியன், கிராம தெய்வங்கள் மற்றும் மூதாதையர்களுக்காகப் பகன் வெவ்வேறு நிறமுடைய மூன்று சேவல்களைப் பலியிடுகிறார். பகன் சர்னாவில் தண்ணீர் பானையை வைத்து அடுத்த ஆண்டு வானிலை பற்றி முன்னறிவிப்பு செய்வார். பகன் கிராம மக்களுக்குக் குங்கிலிய மரத்தின் பூக்களைப் பிரசாதமாக விநியோகிக்கிறார். மக்கள் தங்கள் வீட்டில் உள்ள மூதாதையர்களின் ஆன்மாக்களை வணங்கி, வெவ்வேறு உணவுகளைச் சமைத்து பிறர்க்கு வழங்கி உண்பார்கள். முன்னோர்களின் ஆன்மாக்களுக்கு உணவு அளித்த பிறகே உணவு உண்கின்றனர். பின்னர் இவர்கள் பாடுகிறார்கள். தோல், நகரா மற்றும் மந்தர் இசைக்கருவிகளை இசைத்து தாளத்திற்கேற்ப நடனமாடுவார்கள். மேலும் அரிசி பீயர் ஹாண்டியாவையும் குடிக்கிறார்கள்.[7][11][10]
1961ஆம் ஆண்டு முதல் கும்லாவில் சர்குல் திருவிழாவில் ஊர்வலம் நடத்தப்படுகிறது. இதற்கு முன், இத்தகைய ஊர்வலம் இல்லை. மக்கள் சர்னாஸ்தாலுக்கு அருகில் நடனம் மட்டுமே ஆடினார்கள்.[7] நகர்ப்புறத்தில், நடுத்தர வர்க்க பழங்குடி ஆர்வலர்கள் பிராந்திய அடையாளத்தைக் குறிக்கும் வகையில் இயற்கை திருவிழா சாகுலை மீண்டும் கொண்டாடுகின்றனர். அதே நேரத்தில் கிராமப்புறங்களில் தெய்வங்களுக்கு நன்றி செலுத்துவதற்காக இது கொண்டாடப்படுகிறது.[12]
இந்தியாவில் தொடர்புடைய திருவிழாக்கள்
தொகுஇந்தியா முழுவதும் புத்தாண்டாகப் பல பண்டிகைகள் கொண்டாடப்படுகின்றன. இவற்றில் சில திருவிழாக்கள் பின்வருமாறு:
- பஹா பராப், ஹோ மற்றும் சந்தாலிகள் மக்கள்
- அசாமில் ரோங்காலி பிஹு
- இந்தியாவின் பஞ்சாபில் வைசாகி
- இந்தியாவின் மேற்கு வங்கத்தில் பகேலா பைசாக்
- கேரளாவில் சித்திரை விசு
- தமிழ்நாட்டில் தமிழ்ப் புத்தாண்டு
மேற்கோள்கள்
தொகு- ↑ "All You Need to Know About the Festival Celebrated in Jharkhand". https://www.news18.com/news/lifestyle/sarhul-2022-all-you-need-to-know-about-the-festival-celebrated-in-jharkhand-4935917.html.
- ↑ "झारखंड में मनाया जा रहा है प्रकृति का पर्व सरहुल, झूम रहे हैं लोग". https://zeenews.india.com/hindi/india/bihar-jharkhand/jharkhand/jharkhand-the-festival-of-nature-is-being-celebrated-in-jharkhand-concrete-arrangements-have-been-made/1142537.
- ↑ "सरहुल पर अनूठी परंपरा... झारखंड के इस गांव में खौलते तेल में हाथ डालकर बनाए जाते हैं पकवान". https://www.jagran.com/jharkhand/ranchi-unique-tradition-on-sarhul-in-jharkhand-festival-dishes-are-prepared-by-putting-hands-in-boiling-oil-jagran-special-22595616.html.
- ↑ "'सरहुल' पर प्रकृति के रंग में रंग गया झारखंड, हर जगह निकल रही विशाल शोभा यात्राएं". https://zeenews.india.com/hindi/india/bihar-jharkhand/jharkhand/sarhul-festival-celebration-start-on-jharkhand-photos-and-video-viral/1142806.
- ↑ Manish Ranjan. JHARKHAND GENERAL KNOWLEDGE 2021. Prabhat Prakashan. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9789354883002.
- ↑ "साल वृक्ष की पूजा कर मांगी सुख-समृद्धि". Dainik Jagran (in இந்தி). பார்க்கப்பட்ட நாள் 2022-08-19.
- ↑ 7.0 7.1 7.2 "आज मनाया जा रहा है प्रकृति पर्व सरहुल, जानें पूजा विधि और इसका महत्व". https://www.prabhatkhabar.com/live/sarhul-2022-live-updates-date-importance-and-sigificance-of-tribal-festival-sarhul-parv-ki-shubhkaamnaein-sry-tvi.
- ↑ Anupam Purty (10 April 2013). "SARHUL- Festival of the Mundas'". issuu. p. 20. பார்க்கப்பட்ட நாள் 4 April 2022.
- ↑ "सरहुल का अर्थ, सरहुल में केकड़ा का महत्व" இம் மூலத்தில் இருந்து 2023-02-04 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20230204011554/https://www.ujjwalpradesh.com/utility/sarhul-festival-2022-meaning-of-sarhul-when-celebrates-where-celebrated-importance-of-pooja/.
- ↑ 10.0 10.1 "Sarhul Festival 2022 - April 04 (Monday)". 4 April 2022. https://www.festivalsofindia.in/Sarhul-Festival. பார்த்த நாள்: 4 April 2022.
- ↑ "धरती के विवाह के रुप में आज आदिवासी समुदाय मना रहा है सरहुल, 9 प्रकार की सब्जियां बनाने का है रिवाज". 4 April 2022. https://www.prabhatkhabar.com/state/jharkhand/ranchi/sarhul-2022-jharkhand-tribal-community-is-celebrating-marriage-of-sun-earth-there-is-a-custom-to-make-9-types-of-vegetables-srn. பார்த்த நாள்: 4 April 2022.
- ↑ In the Shadows of the State: Indigenous Politics, Environmentalism, and Insurgency in Jharkhand, India. பார்க்கப்பட்ட நாள் 7 April 2022.