சாங் எங்
சான் எங் (Zhang Heng, கிபி 78 – 139), ஒரு ஆன் பேரரசின் சீனப் பல்துறை அறிஞர். இவர் ஆனில் உள்ள நான்யாங்கைச் சேர்ந்தவர். இவர் கீழைய ஆன் பேரரசில் வாழ்ந்தார். இவர் இலியூயாங், சாங்காங் ஆகிய பெருநகரங்களில் கல்வி பயின்றார். இவர் சீன வானியலாளராகவும் கணிதவியலாளராகவும் அறிவியலாளராகவும் பொறியாளராகவும் திகழ்ந்துள்ளார். மேலும் இவர் ஒரு புதுமைபுனைவாளரும் புவிப்பரப்பியல் வல்லுனரும் நிலவரை வரலாற்றாளரும் ஓவியரும், கவிஞரும் அரசியலாளரும் இலக்கிய அறிஞரும் ஆவார்.
Zhang Heng 張衡 | |
---|---|
1955 இல் வெளியிடப்பட்ட சீன அஞ்சல் தலை | |
பிறப்பு | கிபி 78 நான்யாங், எய்னான், சீனா |
இறப்பு | கிபி 139 (அகவை 60–61) லுவோயாங், சீனா |
வாழிடம் | நான்யாங், சீனா |
துறை | வானியல், கணிதம், நில அதிர்வியல், நீரியக்கவியல், புவியியல், இனவரைவியல், இயந்திரப் பொறியியல், நாட்காட்டியியல், மீவியற்பியல், கவிதை |
அறியப்படுவது | நிலநடுக்கப் பதிவுக் கருவி, நீரியக்க விண்கோளம், பை கணக்கீடு, கவிதை, அண்டத்தின் வடிவம், நிலவு மறைப்பு, சூரிய கிரகணம் |
இவர் நான்யாங்கில் எளிய அரசு ஊழியராகப் பணியைத் தொடங்கியுள்ளார். பின்னர் தலைமை வானியலாளராகவும் அலுவலக ஊர்திக் காப்பலர்களின் செம்மலாகவும் பேரரசின் நாளோலக்க அரண்மனைக் காப்பாளராகவும் ஆகியுள்ளார. வரலாற்று, கால அட்டவணை சார்ந்த இவரது உறுதியான நிலைப்பாட்டால் பெருவரலாற்றாளராக மாறமுடியாதபடி எதிர்நிலை ஆளுமையாக்க் கருதப்படலானார். ஃஏன் பேரரசின் பேர்ரசர் இழ்சன்னுடனான, அதாவது அரண்மனையுடனான இவரது அரசியல் எதிர்ப்பு அரசவையில் இருந்து பதவி விலகச் செய்து ஃஎபேயில் உள்ள ஃஏயியான் ஆட்சியாளராகப் பணிபுரியவைத்த்து. இடையில் சிறிதுகாலம் சாங் நான்யாங் வீட்டுக்கு வந்துள்ளார். இவர் மீண்டும் கி.பி 138 இல் தலைநகரப் பணிக்கு அழைக்கப்பட்டுள்ளார். பிறகு இவர் கி.பி 139 இல் இறந்தார்.
சாங் தன் இயக்கவியல், பல்லிணைகள் பற்றிய அறிவைத் தன் பல புதுமைபுனைவுகளில் பயன்படுத்தினார். இவர் உலகின் முதல் நீரியக்க விண்கோளத்தை உருவாக்கி வானியல் ஆய்வுக்குப் பயன்படுத்தினார்;[1] புதிய தொட்டியைக் கூடுதலாக இணைத்து நீர்க்கடிகாரத்தை வளப்படுத்தினார்;[2] உலகின் முதல் நில அதிர்வளவியை உருவாக்கினார். இது 599 கி.மீ தொலைவில் உள்ள நில அதிர்வின் திசையைத் துல்லியமாக கட்டியது.[1][3][4] இவர் முந்தiய சீனப் பை மதிப்பை மேம்படுத்தினார். மேலும் தன் விண்மீன் அட்டவணையில் 2,500 விண்மீன்களை பதிவு செய்தார். இவர் நிலாவுக்கும் சூரியனுக்கும் உள்ள உறவைப் பற்றிய கோட்பாடுகளை வெளியிட்டார்: குறிப்பாக நிலாவின் கோளவியல்பையும் நிலாவின் ஒளி சூரிய ஒளியின் எதிர்பலிப்பே என்பத்தையும் நிலாவின் கலைகளையும் அதன் மறைந்த மறுபக்கத்தையும் நிலா, சூரிய ஒளிமறைப்புகளையும் பற்றியெல்லாம் விளக்கி விவரித்துள்ளார். இவர் தன் ஃபூ கவிதை, இழ்சி கவிதை ஆய்வுகட்காகப் பெயர்பெற்றவர். இவை பிற்கால எழுத்தாளர்களால் பேரளவில் அய்வு செய்யப்பட்டுள்ளன. இவர் தன் அறிவுக்காகவும் புலமைக்காகவும் பல தகைமைகளை இறப்புக்குப் பின்னர் பெற்றுள்ளார்; இவரது வானியற்பணிகள் இப்போது தாலமிக்கு நிகரானவையாகப் பாராட்டப்படுகின்றன (AD 86–161).
குறிப்புகள்
தொகுவெளி இணைப்புகள்
தொகு- Zhang Heng at Chinaculture.org பரணிடப்பட்டது 2007-02-03 at the வந்தவழி இயந்திரம்
- Zhang Heng at the University of Maine, USA பரணிடப்பட்டது 2008-07-08 at the வந்தவழி இயந்திரம்
- Zhang Heng at the University of St Andrews, Scotland
- The Early History of Seismology (to 1900) பரணிடப்பட்டது 2008-06-02 at the வந்தவழி இயந்திரம்
- Seismoscope - Research References 2012