சான் பியாசே

சுவிஸ் நாட்டு உளவியலாளர்

ஜீன் பியாஜே (Jean Piaget) (பிரெஞ்சு மொழி: [ʒɑ̃ pjaʒɛ]; 9 ஆகத்து 1896 – 16 செப்டம்பர் 1980) ஒரு சுவிட்சர்லாந்து நாட்டைச் சார்ந்த உளவியலாளரும் அறிவாய்வியலறிஞரும் ஆவார். இவர் குழந்தையின் வளர்ச்சிசார் நிலைகள் குறித்த கொள்கைகளுக்காக நன்கறியப்பட்டவர். அறிதிறன் வளர்ச்சி கருத்தியல் கொள்கைகள் மற்றும் அறிவாய்வியல் பார்வை ஆகியவை இணைந்து மரபுசார் அறிவாய்வியல் என அழைக்கப்படுகிறது.

சான் பியாசே
1968 இல் மிக்சிகன் பல்கலைக் கழகத்தில் பியாஜே
பிறப்புஜீன் வில்லியம் ஃப்ரிட்சு பியாஜே
(1896-08-09)9 ஆகத்து 1896
நியூசடால், சுவிட்சர்லாந்து
இறப்பு16 செப்டம்பர் 1980(1980-09-16) (அகவை 84)
ஜெனீவா, சுவிட்சர்லாந்து
துறைவளர்ச்சிசார் உளவியல், அறிவாய்வியல்
கல்வி கற்ற இடங்கள்நியூசடால் பல்கலைக்கழகம்
அறியப்படுவதுஆக்கவியல் கோட்பாடு (கற்றல் கருத்தியல்), மரபுசார் அறிவாய்வியல், அறிதிறன் வளர்ச்சிக் கோட்பாடு, பொருட்களின் நிலைப்புத்தன்மை, தன்மையச் சிந்தனை
தாக்கம் 
செலுத்தியோர்
இம்மானுவேல் கான்ட், என்றி பெர்க்சன்,[1] பியரி ஜானெட், ஆல்பிரெட் பினே, தியோடர் சைமன், சபினா ஸ்பியல்ரெய்ன், ஜேம்ஸ் மார்க் பால்ட்வின்[2]
பின்பற்றுவோர்ஸ்லோமோ வோல்ப், பார்பெல் இன்கெல்டர்,[3][4] ஜெரோம் புருணர்[5] லாரன்ஸ் கோல்பெர்க்,[6] இராபர்ட் கெகன்,[7] ஹோவர்ட் கார்ட்னர்,[8] தாமஸ் குன்,[9] செய்மெளர் பாபெர்ட்,[10] லீ வைகாட்ஸ்கி,[11][12] ஜோர்டான் பீ்ட்டர்சன், ஜான் ஃபிளாவெல்]]

பியாஜே குழந்தைகளின் கல்விக்கு மிகுந்த முக்கியத்துவம் வழங்கினார். சர்வதேசக் கல்விச் செயலகத்தின் இயக்குநராக இருந்த அவர் 1934 ஆம் ஆண்டில், "கல்வி மட்டுமே திடீரென அல்லது படிப்படியாக மாறச்சாத்தியமுள்ள சீர்குலைவுகளிலிருந்து நமது சமுதாயங்களைக் காப்பாற்றும் வல்லமை கொண்டது" என்று பிரகடனம் செய்தார்.[13] இவரது குழந்தை வளர்ச்சிக் கருத்தியல் கோட்பாடானது பணிமுன் கல்வியியல் பயிற்சிகளில் கற்பதற்கு அதிகமாகப் பரிந்துரைக்கப்படுகிறது. கல்வியாளர்கள் தொடர்ந்து ஆக்கவியல் சார் கருத்தியலைக் கற்றல் - கற்பித்தல் முறைகளில் உள்ளடக்கி உருவாக்கம் தருகின்றனர்.

பியாஜே ஜெனீவா பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றிய பொழுது, 1955 ஆம் ஆண்டில் ஜெனீவாவில் மரபுசார் அறிவாய்வியலுக்கான சர்வதேச மையம் ஒன்றை ஏற்படுத்தினார். மேலும், அந்த மையத்தின் இயக்குநராக தனது இறப்பு வரை (1980) பணியாற்றினார்.[14] இந்த மையத்தில் நடந்த கண்டுபிடிப்புகள் மற்றும் கூட்டு முயற்சிகள் அவற்றின் தாக்கங்கள் ஆகியவற்றின் காரணமாக "ஸ்காலர்லி" இதழில் "பியாஜேயின் தொழிற்சாலை" எனக் குறிப்பிட்டது.[15]

தனிப்பட்ட வாழ்க்கை

தொகு

பியாஜே சுவிட்சர்லாந்தில் நியூசடால் எனுமிடத்தில் 1896 ஆம் ஆண்டு பிறந்தார். நியூசடால் பல்கலைக்கழகத்தில் இடைக்கால இலக்கியத்தைக் கற்றுத் தந்த பேராசிரியர் ஆர்தர் பியாஜே மற்றும் ரெபேக்கா ஜாக்சன் ஆகியோரின் மூத்த மகனாவார். பியாஜே உயிரியல் மற்றும் இயற்கை உலகைப் பற்றிய ஆர்வத்தை வளர்த்துக் கொண்ட துறுதுறுப்பான குழந்தையாக வளர்ந்தார். இவருக்குத் தொடக்க காலத்தில் விலங்கியலில் இருந்த ஆர்வம் 15 வயதில் மெல்லுடலிகள் பற்றிய இவரால் வெளியிடப்பட்ட கட்டுரைகளால், விலங்கியல் துறையில் இருந்தவர்களிடம் புகழைத் தேடித் தந்தது.[16] உயர்நிலைக் கல்விக்குப் பிறகு, பியாஜே நியூசடால் பல்கலைக்கழகத்தில் விலங்கியலைப் படிக்கச் சென்றார். பியாஜே, இயற்கையறிவியலில் தனது ஆய்வியல் நிறைஞர் பட்டத்தை 1918 ஆம் ஆண்டில் முடித்தார். அதே ஆண்டில் பியாஜே கார்ல் யங் மற்றும் பவுல் யூஜின் பிளீயூலர் ஆகியோரிடம் ஒரு பருவத்திற்கு உளவியலை சூரிக் பல்கலைக்கழகத்தில் கற்றார். இந்தக் காலகட்டத்தில் பியாஜே உளப்பகுப்பாய்வில் ஆழமான ஆர்வத்தை வளர்த்துக் கொண்டார். இதற்கு அடுத்த ஆண்டில் அவர் பிறழ்நிலை உளவியலை பாரீசில் சார்போனில் படித்தார்.[17]

தொழில் வாழ்க்கை வரலாறு

தொகு

ஆரி பெய்லின் ஜீன் பியாஜேயின் கருத்தியல் ஆய்வுத் திட்டத்தை நான்கு நிலைகளில் நிகழ்ந்துள்ளதாகக் குறிப்பிடுகிறார்.[18] அவை,  :

  1. சமூகவியல் வளர்ச்சி மாதிரி,
  2. அறிவு வளர்ச்சி தொடர்பான உயிரியல் மாதிரி,
  3. அறிவு வளர்ச்சி தொடர்பான கருத்தியல் மாதிரியின் நீட்சி,
  4. உருவகச் சிந்தனை பற்றிய ஆய்வு

விளைவாக உருவான கருத்தியல் கட்டமைப்புகள் ஒன்றுக்கொன்று போதுமான அளவு வேறுபட்டு உள்ளன. அவை வேறுபட்ட "பியாஜேயியன்" கோட்பாடுகளால் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன. மிகவும் சமீபத்தில், ஜெரெமி பர்மேன் பெய்லினுக்குப் பின்வருமாறு பதிலளித்தார். உளவியல் பக்கமாக பியாஜே திரும்பியதற்கு முன்னதான காலகட்டத்தை சேர்க்க வேண்டும் என்றார். அதை பியாஜேயின் பூஜ்ய காலகட்டம் எனக் குறிப்பிட வேண்டும்.[19]

அறிதிறன் வளர்ச்சி தொடர்பான பியாஜேயின் கோட்பாடு

தொகு

அறிதல் திறன் வளர்ச்சி பின்வரும் நான்கு படிநிலைகளில் நடைபெறுவதாக பியாஜே கூறுகிறார். அவை,

  1. புலன் இயக்கப் பருவம் (0 - 2 ஆண்டுகள்)
  2. மனச்செயல்பாட்டுக்கு முந்தைய பருவம் (2 - 7 ஆண்டுகள்)
  3. கண்கூடாகப் பார்ப்பதைக் கொண்டு சிந்திக்கும் பருவம் (7 - 12 ஆண்டுகள்)
  4. முறையான மனச்செயல்பாட்டுப் பருவம் (12 ஆண்டுகளுக்கு மேல்)

புலன் இயக்கப் பருவம்

தொகு

குழந்தைகள் உலகத்தை தங்களின் இயக்கம் மற்றும் உணர்வுகள் மூலம் அனுபவிக்கிறார்கள். இந்தப் பருவத்தில் குழந்தைகள் மிகவும் தன்னைச் சார்ந்து இருக்கிறார்கள். அதாவது, அவர்களால் மற்றவர்களுடைய பார்வையிலிருந்து உலகத்தை உணர முடியாது.

மனச்செயல்பாட்டுக்கு முந்தைய பருவம்

தொகு

குழந்தைகள் இந்தப் பருவத்தில் காரண, காரிய தொடர்பை புரிந்து கொள்ள இயலாத நிலையில் உள்ளனர். அவர்களின் மனத்தால் தகவல்களைக் கையாள முடியாது. இந்த கட்டத்தில் குழந்தைகளிடம் பாவணை விளையாட்டுகள் அதிகரிக்கிறது.

கண்கூடாகப் பார்ப்பதைக் கொண்டு சிந்திக்கும் பருவம்

தொகு

சிந்தனையும், அறிதல் திறனும் மேலும் உயர்நிலைக்கு உயர்த்தப்படும். குழந்தைகள் ஒரே நேரத்தில் பொருட்களின் பண்புகள் பற்றி ஒரே நேரத்தில் சிந்திக்க இயலும். பொருட்களின் மாறாத்தன்மையை அறிந்து கொள்ள முடியும். முன்-பின் மாற்றங்களை நன்கு உணர முடிகிறது.

முறையான மனச்செயல்பாட்டுப் பருவம்

தொகு

இந்தப் பருவத்தில் நேரே எதிரில் இல்லாதவை பற்றியும், புலன் தொடர்பற்றவை பற்றியும் சிந்திக்க முடியும். எதிர்காலத்தில் ஏற்படக்கூடியவைகள் பற்றியும் சிந்திக்க இயலும். கருத்துக்களைப் பிறர் நோக்கிலிருந்து சிந்திக்க இயலும்.

மேற்கோள்கள்

தொகு
  1. Pass, Susan (2004) Parallel Paths to Constructivism: Jean Piaget and Lev Vygotsky, Information Age Publishing. p. 74. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1593111452
  2. Piaget, J. (1982). Reflections on Baldwin [interview with J. J. Vonèche]. In J. M. Broughton & D. J. Freeman-Moir (Eds.), The cognitive developmental psychology of James Mark Baldwin. Norwood, NJ: Ablex. pp. 80–86. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0893910430
  3. Inhelder, B. (1989). Bärbel Inhelder [Autobiography] (H. Sinclair & M. Sinclair, Trans.). In G. Lindzey (Ed.), A History of Psychology in Autobiography. Vol. VIII. pp. 208–243. Stanford, CA: Stanford University Press.
  4. Tryphon, A., & Vonèche, J. J. (Eds.). (2001). Working with Piaget: Essays in honour of Bärbel Inhelder. Hove, East Sussex, UK: Psychology Press.
  5. Bruner, J. S. (1983). In search of mind: Essays in autobiography. New York: Harper & Row.
  6. Kohlberg, L. (1982). "Moral development". In J. M. Broughton & D. J. Freeman-Moir (Eds.), The cognitive developmental psychology of James Mark Baldwin: Current theory and research in genetic epistemology. pp. 277–325. Norwood, NJ: Ablex. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0893910430
  7. Kegan, Robert (1994). In Over Our Heads. Cambridge, MA: Harvasrd University Press. p. 29. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780674445888
  8. Gardner, H. (2008). "Wrestling with Jean Piaget, my paragon. What have you changed your mind about?". Edge.org. Archived from the original on 2016-10-19. பார்க்கப்பட்ட நாள் 2016-10-17. {{cite web}}: Unknown parameter |= ignored (help)
  9. Burman, J. T. (2007). "Piaget no "remedy" for Kuhn, but the two should be read together: Comment on Tsou's "Piaget vs. Kuhn on scientific progress"". Theory & Psychology 17 (5): 721–732. doi:10.1177/0959354307079306. 
  10. Papert, S (March 29, 1999). "Child Psychologist: Jean Piaget". Time 153: 104–107. https://archive.org/details/sim_time_1999-03-29_153_12/page/104. 
  11. Piaget, J (1979). "Comments on Vygotsky's critical remarks". Archives de Psychologie 47 (183): 237–249. http://psycnet.apa.org/record/1982-23321-001. 
  12. Piaget, J (2000). "Commentary on Vygotsky's criticisms of Language and Thought of the Child and Judgement and Reasoning in the Child (L. Smith, Trans.)". New Ideas in Psychology 18 (2–3): 241–259. doi:10.1016/s0732-118x(00)00012-x.  (Original work published 1962.)
  13. Munari, Alberto (1994). "JEAN PIAGET (1896–1980)". Prospects: the quarterly review of comparative education XXIV (1/2): 311–327. doi:10.1007/bf02199023. http://www.ibe.unesco.org/fileadmin/user_upload/archive/publications/ThinkersPdf/piagetf.pdf. 
  14. "About Piaget". Jean Piaget Society. Archived from the original on 24 ஆகஸ்ட் 2019. பார்க்கப்பட்ட நாள் 17 October 2016. {{cite web}}: Check date values in: |archive-date= (help); Unknown parameter |= ignored (help)
  15. Burman, J. T. (2012). "Jean Piaget: Images of a life and his factory". History of Psychology 15 (3): 283–288. doi:10.1037/a0025930. பன்னாட்டுத் தர தொடர் எண்:1093-4510. 
  16. "Jean Piaget", Biography. Accessed 28 February 2012
  17. https://www.biography.com/people/jean-piaget-9439915
  18. Beilin, H. (1992). "Piaget's enduring contribution to developmental psychology". Developmental Psychology 28 (2): 191–204. doi:10.1037/0012-1649.28.2.191. https://archive.org/details/sim_developmental-psychology_1992-03_28_2/page/191. 
  19. Burman, J. T. (2011). "The zeroeth Piaget". Theory & Psychology 21 (1): 130–135. doi:10.1177/0959354310361407. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=சான்_பியாசே&oldid=3929697" இலிருந்து மீள்விக்கப்பட்டது