சாமராசநகர் மாவட்டம்

கர்நாடகத்தில் உள்ள மாவட்டம்
(சாமராஜநகர் மாவட்டம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

சாமராசநகர் மாவட்டம் இந்தியாவின் கர்நாடக மாநிலத்திலுள்ள 31 நிர்வாக மாவட்டங்களுள் ஒன்றாகும். இதன் தலைமையகம் சாமராச நகரத்தில் உள்ளது.[1]

சாமராசநகர் மாவட்டம்
மேலிருந்து கடிகார திசையில்: எம்எம் ஹில்ஸ் , ஹிமாவத் கோபாலசுவாமி பெட்டா கோவில், தலக்காடு காவேரி , பிஆர் ஹில்ஸ் , ஒகேனக்கல் அருவி
நாடு இந்தியா
பகுதிதென்னிந்தியா
மாநிலம்கருநாடகம்
பிரிவுமைசூர் கோட்டம்
தலைநகரம்சாமராசநகர்
அரசு
 • துணை ஆணையர்சாருலதா சோமல் ,இ.ஆ.ப
பரப்பளவு
 • மொத்தம்5,100 km2 (2,000 sq mi)
மக்கள்தொகை
 • மொத்தம்10,20,791
நேர வலயம்ஒசநே+5:30 (இ.சீ.நே)
இணையதளம்https://chamrajnagar.nic.in/en/

மாவட்ட நிர்வாகம்

தொகு

இம்மாவட்டம் 5 வருவாய் வட்டங்கள், 130 கிராம ஊராட்சி மற்றும் 927 கிராமங்கள் கொண்டது.[2]

  1. சாமராஜநகரா வட்டம்
  2. கொள்ளெகாலா வட்டம்
  3. குண்டல்பேட்டெ வட்டம்
  4. யலந்தூர் வட்டம்
  5. ஹன்னூர் வட்டம்

மக்கள் தொகை பரம்பல்

தொகு

2011ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி, இம்மாவட்டத்தின் மக்கள் தொகை 1,020,791 ஆகும். அதில் 512,231 ஆண்கள் மற்றும் 508,56 பெண்கள் உள்ளனர்.பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 993 பெண்கள் வீதம் உள்ளனர். சராசரி எழுத்தறிவு 61.43 %ஆகும். இம்மாவட்ட மக்களில் இந்து சமயத்தினர் 92.29 %, இசுலாமியர் 4.62 % , கிறித்தவர்கள் 2.17 %, பௌத்தர்கள் 0.48 %மற்றும் பிறர் 0.42% ஆக உள்ளனர்.[3]

போக்குவரத்து

தொகு

இவற்றையும் பார்க்கவும்

தொகு

வெளி இணைப்புகள்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2014-11-29.
  2. Talukas, Panchayats and Villages of Chamrajnagar District
  3. Chamarajanagar District - Population 2011
"https://ta.wikipedia.org/w/index.php?title=சாமராசநகர்_மாவட்டம்&oldid=4116698" இலிருந்து மீள்விக்கப்பட்டது