சாமுண்டி

இந்தியத் தமிழ் மொழித் திரைப்படம் (1992)

சாமுண்டி (Samundi) மனோஜ் குமார் இயக்கி 1992 ஆம் ஆண்டு வெளியான தமிழ் திரைப்படமாகும். ஆர்.சரத்குமார், கனகா, கவுண்டமணி, மன்சூர் அலிகான் மற்றும் பலர் நடித்துள்ளனர். மொகன்நடராஜன் மற்றும் வி. சண்முகம் இப்படத்தை தயாரித்தனர். தேவாவால் இசை அமைக்கப்பட்ட இப்படம், 18 செப்டம்பர் 1992 அன்று வெளியானது.[1]

சாமுண்டி
இயக்கம்மனோஜ் குமார்
தயாரிப்புமோகன் நடராஜன்
வி. ஷண்முகம்
கதைமனோஜ்குமார்
சிவராம் காந்தி (வசனம்)
இசைதேவா
நடிப்புசரத்குமார்
கனகா
ஒளிப்பதிவுஉட்பல்
படத்தொகுப்புநெப்போலியன்
கலையகம்சிறீ இராச காளியம்மன் நிறுவனம்
வெளியீடுசெப்டம்பர் 18, 1992 (1992-09-18)
ஓட்டம்140 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நடிகர்கள்

தொகு

கதைச்சுருக்கம்

தொகு

சாமுண்டி ( ஆர். சரத்குமார் ), அவரது தாயார் (வரலட்சுமி) மற்றும் அவரது சகோதரி லட்சுமி ( சங்கீதா ) ஆகியோர் ஒரு சிறிய கிராமத்தில் தங்கள் புதிய வீட்டிற்கு குடி வந்தனர். பொன்னுத்தாயி ( கனகா ), ஒரு துணி துவைக்கும் பெண், சாமுண்டி குடும்பத்தைப் பார்த்து அனுதாபப்படுகிறாள், இறுதியில் சாம்முண்டியை காதல் செய்கிறாள். ராஜாங்கம் ( மன்சூர் அலி கான் ) மற்றும் அவரது சகோதரர் (உதை பிரகாஷ்) கிராமவாசிகளுக்கு இடையே பயங்கரவாதத்தை பரப்பினார்கள். ஒரு நாள், கோவில் மணிகள் மற்றும் திருவிழாவின் துவக்கம் சாமுண்டியை ஒரு முரட்டுத்தனமானவனாக ஆட்டிப்படைக்கிறது. கோபத்தின் காரணத்தை பொன்னுத்தாயி கேட்க, சாமுண்டி தனது துயரமான கடந்த காலத்தைப் பற்றி அவரிடம் சொல்கிறார்.

கடந்த காலத்தில், சாமுண்டி அவரது சகோதரி ராசாத்திக்கு திருமண ஏற்பாடு செய்து, கோயிலுக்கு அழைத்துச் சென்றார். அங்கு, அவர் சில குண்டர்களுடன் மோதினார். மோதலில், ராசாதி ஏரிக்குள் தள்ளப்பட்டு மூழ்கடிக்கப்பட்டார். திருமணம் தடைப்பட்டதால், சாமுண்டி குடும்பம் தனது கிராமத்தை விட்டு சென்றது.

ராஜாங்கத்தின் அடி ஆட்களின் தொந்தரவை தாங்கிக்கொள்ள முடியாமல், அவர்களைத் துன்புறுத்துகிறார் சாமுண்டி. கிராமவாசிகள் பின்னர் சாமுண்டியை பாராட்டினார்கள். சாமுண்டியின் திருமணத்தில், ராஜாங்கத்தின் உத்தரவின் கீழ் உள்ள ஒரு பொலிஸ் அதிகாரி, அப்பாவி சாமுண்டிவை கைது செய்கிறார். கிராம மக்களின் அழுத்தத்திற்குப் பின்னர் சாமுண்டி விடுதலை செய்யப்படுகிறார். ராஜாங்கத்தின் வீட்டினுள் கோபத்தில் சாமுண்டி நுழைந்த போது, தன் தங்கை விதவையாக உயிருடன் இருப்பதை கண்டு வியந்துபோகிறார். தங்கையை யார் காப்பாற்றியது? அவள் விதவையாக யார் காரணம்? போன்ற கேள்விகளுக்கு விடைகாணுதலே மீதிக் கதையாகும்.

இப்படத்தின் இசையமைப்பாளர் தேவா ஆவார். 6 பாடல்களையும் எழுதியவர் கவிஞர் வாலி.[2]

ட்ராக் பாடல் பாடகர் (கள்) காலம்
1 ஏத்துங்கடி கே.எஸ். சித்ரா 4:46
2 கண்ணுல பாலை எஸ்.பி. பாலசுப்ரமணியம் , கே.எஸ். சித்ரா 5:09
3 கும்மனும் எஸ். ஜானகி 4:50
4 மண்ணை தொட்டு எஸ்.பி. பாலசுப்ரமணியம் 4:13
5 முத்து நகை எஸ்.பி. பாலசுப்ரமணியம், எஸ். ஜானகி 5:24
6 கதவை சாத்து எஸ்.பி. பாலசுப்ரமணியம், எஸ். ஜானகி 4:43

தயாரிப்பு

தொகு

கோயம்புத்தூர் அருகே உள்ள கோபிசெட்டிபாளையம் என்ற சிறிய நகரத்தில் படப்பிடிப்பு நடந்தது. இது சின்ன தம்பி திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு பிரபலமானது.[3]

விமர்சனம்

தொகு

"இந்தத் திரைப்படத்தில் புதிதாக எதுவும் இல்லை என்றும், பார்வையாளர்களை தொடர்ந்து அமர்ந்து பார்க்கவைக்க தவறவிட்டதாகவும்" விமர்சனங்கள் வந்தன. எதிர்மறையான விமர்சனங்கள் எழுந்தாலும், 100 நாட்கள் ஓடியது என்பது குறிப்பிடத்தக்கது.[4][5]

மேற்கோள்கள்

தொகு
  1. "Samundi (1992) Tamil Movie". spicyonion.com. பார்க்கப்பட்ட நாள் 2013-12-23.
  2. "Chaamundi : Tamil Movie". hummaa.com. பார்க்கப்பட்ட நாள் 2013-12-23.
  3. Ayyappa Prasad (1992-08-28). Gobi glamour catching. p. 7. https://news.google.com/newspapers?nid=P9oYG7HA76QC&dat=19920828&printsec=frontpage. பார்த்த நாள்: 2013-12-23. 
  4. Rings a bell. https://news.google.com/newspapers?nid=P9oYG7HA76QC&dat=19920925&printsec=frontpage. பார்த்த நாள்: 2013-12-23. 
  5. Run-of-the-mill fare. https://news.google.com/newspapers?nid=P9oYG7HA76QC&dat=19930101&printsec=frontpage. பார்த்த நாள்: 2013-12-23. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=சாமுண்டி&oldid=3659986" இலிருந்து மீள்விக்கப்பட்டது