சாமூத்திரி கோபுரம்

கேரளாவிலுள்ள ஒரு கோபுரம்

சாமூத்திரி கோபுரம் (Samoothiri Tower) என்பது தென்னிந்தியாவின் கோழிக்கோடு நகரத்தில் அமையவுள்ள ஒரு பல மாடிக் கோபுரம் ஆகும். மலபாரின் சுற்றுலாத் துறைக்கான தகவல் மையமாக இந்த கோபுரம் கட்டப்படும். சாமூத்திரி கோபுரம் 62 மீ உயரம் கொண்டதாக இருக்கும். முதல் இரண்டு தளங்களில் ஒரு வரலாற்று அருங்காட்சியகமும் 14 ஆவது அடுக்கில் ஒரு பார்வைக் கூடம் இருக்கும். பார்வைக் கூடத்திலிருந்து முழு நகரத்தின் பரந்த காட்சிகளையும் கண்டு அனுபவிக்க முடியும்.[1]

சாமூத்திரி கோபுரம்
Samoothiri Tower
கோழிக்கோடு
கோபுரம்
சாமூத்திரி கோபுரம் Samoothiri Tower is located in கேரளம்
சாமூத்திரி கோபுரம் Samoothiri Tower
சாமூத்திரி கோபுரம்
Samoothiri Tower
இந்தியாவின் கேரளாவில் அமைவிடம்
ஆள்கூறுகள்: 11°15′N 75°46′E / 11.25°N 75.77°E / 11.25; 75.77
நாடு இந்தியா
மாநிலம்கேரளம்
மாவட்டம்கோழிக்கோடு
மொழிகள்
 • Officialமலையாளம், ஆங்கிலம்
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)

சாமூத்திரி கோபுரம் கோழிக்கோட்டின் புகழ்பெற்ற ஆட்சியாளர்களான சாமூத்திரியின் பெயரால் அழைக்கப்படுகிறது. குங்காலி மரக்கார் என்ற பெயரில் உள்ள தோட்டத்துடன் இந்த கோபுரம் இரட்டையாக அமைக்கப்படும். மேலும் அருகில் உள்ள மனஞ்சிரா சதுக்கத்தில் இருந்து நிலத்தடி அணுகலையும் கொண்டிருக்கும்.

கட்டிடத்தின் வடிவமைப்பு அங்கீகரிக்கப்பட்டு, கேரள அரசு கோபுரத்திற்கு அனுமதி அளித்துள்ளது.[2]

இவற்றையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=சாமூத்திரி_கோபுரம்&oldid=3814946" இலிருந்து மீள்விக்கப்பட்டது