சாம்பல் கதிர்க்குருவி

சாம்பல் கதிர்க்குருவி
Prinia socialis
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
சிசுடிகோலிடே[2]
பேரினம்:
பிரினா
இனம்:
பி. சோசியாலிசு
இருசொற் பெயரீடு
பிரினா சோசியாலிசு
(சைக்சு, 1832)
சாம்பல் கதிர்க்குருவி பரம்பல்
வேறு பெயர்கள்

பர்னேசியா சோசியாலிசு

சாம்பல் கதிர்க்குருவி (ஆங்கில பெயர்: Ashy Prinia, Ashy Wren-Warbler), (உயிரியல் பெயர்: பிரினா சோசியாலிசு) ஒரு சிறிய வகைப் பறவையாகும்.

பரம்பல்

தொகு

இவை இந்தியத் துணைக்கண்டத்தில் வாழும் பறவையாகும். இந்தியா, நேபாளம், வங்காளதேசம், பூட்டான், இலங்கை, மேற்கு பர்மா ஆகிய நாடுகளில் காணப்படுகின்றன. நகர்புற தோட்டங்களில் வாழும் இவற்றை, இதனுடைய சிறிய அளவு, வேறுபாடான நிறம், செங்குத்தான வால் என்பனவற்றைக் கொண்டு எளிதில் இனங்காணலாம். தென் பகுதி பறவைகள் பின்புறத்தே சிவப்பு கலந்த பழுப்பு நிறத்தைக் கொண்டு காணப்படும்.[3]

விவரம்

தொகு

இக்குருவிகளின் உடல் நீளம் 13 முதல் 41 செ.மீ. வரை காணப்பௌம். இப்பறவைகள் குறுகிய வட்ட வடிவ சிறகினையும் கருப்பு புள்ளிகள் கொண்ட மஞ்சள்-வெள்ளை நிற நீண்ட வாலையும் உடையன. பொதுவாக வால் மேல் நோக்கியவாறு நேராக இருக்கும். இவற்றின் அலகுகள் சிறியதும் கருப்பு நிறமுடையதுமாகும். தலையின் மேற்பகுதி சாம்பல் நிறமும், பின்புறம் சிவப்பு கலந்த பழுப்பாக காணப்படும்.

பரவலும், உறைவிடமும்

தொகு

இவை உலர்ந்த பரந்த மேய்ச்சல் நிலங்களிலும், திறந்த கானகங்களிலும், குறுங்காடுகளிலும், நகர்ப்புற தோட்டங்களிலும் காணப்படும். இந்தியாவிலுள்ள உலர் பாலைவனங்களில் இவை காணப்படுவதில்லை. இலங்கையில் தாழ் பிரதேசங்களில் காணப்படும். இவை 1600 மீ மலைப் பிரதேசங்களிலும் காணப்படும்.[4]

பழக்கமுறையும் சூழலியலும்

தொகு

இது ஒரு பூச்சிகளை உண்டு வாழும் பறவையாகும். இது இரு வகையான ஒலியை எழுப்பக் கூடியது. வேகமாகப் பறக்கும்போது இதன் இறக்கைகள் ஒருவித ஒலியை எழுப்பும்.[5] இவற்றின் கூடுகள் நிலத்தை அண்மித்ததாக குறுங்காடுகளில் அல்லது நீண்ட புற்களில் காணப்படும். இவை 3 முதல் 5 முட்டைகளை இடும்.

படங்கள்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "Prinia socialis". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2008. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம். 2008.
  2. Alström, P; Ericson, PG; Olsson, U; Sundberg, P; Per G.P. Ericson, Urban Olsson & Per Sundberg (Feb 2006). "Phylogeny and classiWcation of the avian superfamily Sylvioidea". Molecular Phylogenetics and Evolution 38 (2): 381–397. doi:10.1016/j.ympev.2005.05.015. பன்னாட்டுத் தர தொடர் எண்:1055-7903. பப்மெட்:16054402. 
  3. பறவைகளைக் கொண்டாடுவோம் தி இந்து தமிழ் 9 மே 2015
  4. Ali, S. & S. D. Ripley (1997). Handbook of the Birds of India and Pakistan. Volume 8 (2 ed.). New Delhi: Oxford University Press. pp. 55–60.
  5. Rasmussen, P. C. & J. Anderton (2005). Birds of South Asia: The Ripley Guide. Smithsonian Institution & Lynx Edicions. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 84-87334-67-9.

பிற மூலங்கள்

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Prinia socialis
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சாம்பல்_கதிர்க்குருவி&oldid=3769659" இலிருந்து மீள்விக்கப்பட்டது