சாயாஜி ராவ் கெய்க்வாட் நூலகம்

பனாரசு இந்து பல்கலைக்கழகத்தின் முதன்மை நூலகம்

சாயாஜி ராவ் கெய்க்வாட் நூலகம் என்பது மத்திய நூலகம் (Sayaji Rao Gaekwad Library) என்றும் அழைக்கப்படுகிறது. இது இந்தியாவில் உத்தரப் பிரதேசத்தில் உள்ள வாரணாசியில் உள்ள பனாரசு இந்து பல்கலைக்கழகத்தின் முதன்மை நூலகமாகும். இந்நூலகம் 1917-ல் நிறுவப்பட்டது. இது இந்தியாவில் உள்ள கையெழுத்துப் பிரதிகளின் ஆய்வில் பட்டியலிடப்பட்டுள்ளது. நூலகத்தின் தற்போதைய கட்டிடம் 1931-ல் இலண்டனில் நடந்த வட்டமேசை மாநாட்டிலிருந்து திரும்பிய பிறகு, பல்கலைக்கழகத்தின் நிறுவனர் பண்டித மதன் மோகன் மாளவியாவின் ஆலோசனையின் பேரில், சாயாஜி ராவ் கெய்க்வாட்டின் நன்கொடையுடன் 1941-ல் பிரித்தானிய அருங்காட்சியகத்தின் வடிவத்தில் கட்டப்பட்டது. 1875 முதல் 1939 வரை பரோடா மாநிலத்தின் மகாராஜா, தனது மாநிலம் முழுவதும் நூலகங்களை நிறுவுவதில் பெயர் பெற்றவர்.[1]

சாயாஜி ராவ் கெய்க்வாட் நூலகம்
(மத்திய நூலகம்)
பனாரசு இந்துப் பல்கலைக்கழக மைய நூலகம்
நாடுஇந்தியா
தொடக்கம்1917
அமைவிடம்பனாரசு இந்து பல்கலைக்கழகம், வாரணாசி

இது 2003-ல் நிறுவப்பட்ட இந்தியச் சுவடிகள் இயக்கம் எனும் தேசிய இயக்கத்தின் கீழ் நியமிக்கப்பட்ட 'கையெழுத்து பாதுகாப்பு மையமாகவும்' செயல்படுகின்றது.[2]

வரலாறு

தொகு

பனாரசு இந்து பல்கலைக்கழக நூலகம் பேராசிரியர் பி. கே. தெலாங் தன்னுடைய தந்தை தந்தை நீதிபதி காசிநாத் திரிம்பக் தெலாங்கின் நினைவாக வழங்கிய நன்கொடைத் தொகுப்பிலிருந்து 1917ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. கமாச்சாவில் உள்ள மத்திய இந்துக் கல்லூரியின் தெலாங் மண்டபத்தில் இவரது சேகரிப்பு வைக்கப்பட்டது. 1921-ல் நூலகம் கலைக் கல்லூரியின் மத்திய மண்டபத்திற்கும் (தற்போது கலைப் பீடம்) பின்னர் 1941-ல் இதன் தற்போதைய கட்டிடத்திற்கும் மாற்றப்பட்டது. பல்கலைக்கழகத்தின் நிறுவனர் பண்டித மதன் மோகன் மாளவியாவின் ஆலோசனையின் பேரில், இலண்டனில் உள்ள பிரித்தானிய அருங்காட்சியகத்தின் மாதிரியில், பரோடா மகாராஜா சாயாஜிராவ் கெய்க்வாட் III நன்கொடையுடன் இந்த நூலகம் நிறுவப்பட்டது.

1931ஆம் ஆண்டில், பல்வேறு மூலங்களிலிருந்து நன்கொடைகள் மூலம் சுமார் 60,000 தொகுதிகள் நூலகத்திலிருந்தது. நூலகத்திற்குத் தனிப்பட்ட மற்றும் குடும்ப சேகரிப்பு நன்கொடையாக வழங்கும் போக்கு 1940களின் பிற்பகுதியில் தொடர்ந்தது. இதன் விளைவாக 18ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த புத்தகங்கள் மற்றும் பத்திரிகைகளின் தனித்துவமான பகுதிகள் இங்கு உள்ளன. இதில் தில்லியின் லாலா சிறீராம், வார்தாவின் ஜம்னாலால் பஜாஜ், ரூர்மல் கோயங்கா, படுக் நாத் சர்மா, தாகூர் குடும்ப சேகரிப்பு, நேரு குடும்ப சேகரிப்பு ஆகியவற்றின் தனிப்பட்ட மற்றும் குடும்ப சேகரிப்பு நன்கொடைகளும் அடங்கும்.[1][3]

பனாரசு இந்து பல்கலைக்கழக நூலக அமைப்பானது மத்திய நூலகம் மற்றும் 3 நிறுவன கிளை நூலகங்கள், 8 ஆசிரிய நூலகங்கள், 25 துறை நூலகங்கள் என 13 லட்சத்துக்கும் அதிகமான தொகுதிகளைக் கொண்டு மாணவர்கள், ஆசிரியர்கள், ஆராய்ச்சியாளர்கள், தொழில்நுட்பப் பணியாளர்கள் என பதினான்கு பீடங்களில் பணியாற்றுபவர்களுக்குச் சேவையாற்றுகிறது. இப்பல்கலைக்கழகத்தில் 126 பாடத் துறைகள் உள்ளன.[4]

2009ஆம் ஆண்டில், நூலகத்தில் நுண்ணிழை ஒளியியல் மூலம் வலையமாக்கும் செய்யப்பட்டது. மே 2009-ல், 32,913 புத்தகங்கள் மின் வடிவில் கிடைக்கப்பெற்றன. மேலும் 2,107 இதழ்கள் இணையம் மூலம் அணுகப்பட்டன.[5] மத்திய நூலகத்தில் கையெழுத்துப் பிரதிகளை எண்ணிம மயமாக்கும் பணி மே 2010க்குள் நிறைவடைந்தது. இதன்பிறகு இவை இணையத்திலும் கிடைக்கச் செய்யப்பட்டன.[6] பின்னர் அக்டோபரில், 'தகவல் அறியும் உரிமை மற்றும் நூலகங்கள்' என்ற தலைப்பில் இரண்டு நாள் தேசிய கருத்தரங்கு நூலகத்தில் நடைபெற்றது.[7]

அக்டோபர் 2010-ல், நூலகம், புது தில்லியின் இந்தியச் சுவடிகள் இயக்கத்துடன் இணைந்து, நூலகத்தில் கையெழுத்துப் பாதுகாப்பு குறித்த தேசியப் பட்டறையை நடத்தியது.[8][9]

தொகுப்புகள்

தொகு

கையெழுத்துப் பிரதி சேகரிப்பில் பல பண்டைய நூல்கள் இங்கு உள்ளன.[10]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 "Banaras Hindu University, Central Library (Varanasi, India)". University of Chicago. 3 March 2009. Archived from the original on 9 மார்ச் 2012. பார்க்கப்பட்ட நாள் 5 பிப்ரவரி 2023. {{cite web}}: Check date values in: |access-date= and |archive-date= (help)
  2. Manuscript Conservation Centres பரணிடப்பட்டது 6 மே 2012 at the வந்தவழி இயந்திரம் National Mission for Manuscripts.
  3. "Education: THE CENTRAL LIBRARY". Varanasi Official website. Archived from the original on 7 சனவரி 2011.
  4. History/Genesis: Central Library BHU
  5. "Free internet service at BHU library". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 10 July 2009 இம் மூலத்தில் இருந்து 2012-03-08 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20120308235829/http://articles.timesofindia.indiatimes.com/2009-07-10/varanasi/28154270_1_free-internet-service-library-users-central-library. 
  6. "BHU south campus library to go digital". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 17 May 2010 இம் மூலத்தில் இருந்து 2012-03-08 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20120308235847/http://articles.timesofindia.indiatimes.com/2010-05-17/varanasi/28302322_1_barkachha-rajiv-gandhi-south-campus-central-library. 
  7. "New building inaugurated at BHU". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 8 October 2009 இம் மூலத்தில் இருந்து 2012-03-08 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20120308235854/http://articles.timesofindia.indiatimes.com/2009-10-08/varanasi/28083438_1_centre-of-food-science-dp-singh-central-library. 
  8. "National workshop at Central Library". 19 October 2010 இம் மூலத்தில் இருந்து 2012-03-08 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20120308235836/http://articles.timesofindia.indiatimes.com/2010-10-19/varanasi/28269193_1_workshop-review-meeting-banaras-hindu-university. 
  9. "Workshop on manuscripts concludes". 24 October 2010 இம் மூலத்தில் இருந்து 2012-03-08 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20120308235840/http://articles.timesofindia.indiatimes.com/2010-10-24/varanasi/28255670_1_rare-manuscripts-central-library-rare-documents. 
  10. Kapoor, Punkhuri (11 September 2015). "A treasure trove of rare manuscripts - Times of India". The Times of India.

வெளி இணைப்புகள்

தொகு