சார்லஸ் டிக்கின்ஸ்

(சார்லசு டிக்கன்சு இலிருந்து வழிமாற்றப்பட்டது)

சார்லஸ் ஜான் ஹஃபாம் டிக்கென்ஸ் (Charles Dickens, 7 பெப்ரவரி 1812 - 9 ஜூன் 1870) விக்டோரியா காலத்தைச் சேர்ந்த மிகவும் புகழ் பெற்ற ஆங்கிலப் புதின எழுத்தாளர்களில் ஒருவரும், தீவிரமான சமூகப் பரப்புரையாளரும் ஆவார். மிகவும் வறியவராக வாழ்க்கையைத் தொடங்கியவர். அது அவரது எழுத்துக்களிலும் எதிரொலித்தது. இவரது டேவிட் காப்பர்ஃபீல்டு, ஆலிவர் டுவிஸ்ட் போன்ற புதினங்கள் (நாவல்கள்) உலகப் புகழ் பெற்றவை.

சார்லஸ் டிக்கின்ஸ்
சார்லஸ் டிக்கின்ஸ்
சார்லஸ் டிக்கின்ஸ்
பிறப்புசார்லஸ் ஜான் ஹஃபாம் டிக்கின்ஸ்
(1812-02-07)பெப்ரவரி 7, 1812
இங்கிலாந்து பொர்ட்ஸ் மௌத், இங்கிலாந்து
இறப்புசூன் 9, 1870(1870-06-09) (அகவை 58)
இங்கிலாந்து காட்ஸ் இல் பிளேஸ், இகம் கெண்ட், இங்கிலாந்து
தொழில்புதின எழுத்தாளர்
குறிப்பிடத்தக்க படைப்புகள்ஒலிவர் டுவிஸ்ட், ஒரு கிறிஸ்துமஸ் கரோல், இரண்டு நகரங்களில் கதை, டேவிட் காப்பர்ஃபீல்ட்
கையொப்பம்

திறனாய்வாளர்களான ஜார்ஜ் கிஸ்ஸிங், ஜி. கே. செஸ்ட்டர்ட்டன் ஆகியோர், டிக்கென்சினது உரைநடைத் திறன், தனித்துவமான, திறமையான ஆளுமை கொண்ட பாத்திரங்களைத் தொடர்ச்சியாக உருவாக்கும் திறமை, அவரது ஆற்றமிக்க சமூக உணர்வு என்பவற்றுக்குச் சான்றளித்துள்ளனர். ஆனால், சக எழுத்தாளர்களான, ஜார்ஜ் ஹென்றி லூயிஸ், ஹென்றி ஜேம்ஸ், வெர்ஜீனியா வூல்ப் ஆகியோர், உணர்ச்சிவசப்பட்ட தன்மை, நம்பமுடியாத நிகழ்வுகள், இயற்கைக்கு மாறான பாத்திரப் படைப்புக்கள் என்பவற்றுக்காக அவரது ஆக்கங்களைக் குறை கூறியுள்ளனர்.

டிக்கென்சின் புதினங்களினதும், சிறுகதைகளினதும் புகழ் காரணமாக அவை தொடர்ச்சியாக அச்சேறி வருகின்றன. டிக்கென்சின் பல புதினங்கள் தொடக்கத்தில் சஞ்சிகை போன்றவற்றில் தொடராக வெளிவந்தவை. இது அக்காலத்தில் பெரிதும் விரும்பப்பட்ட ஒரு வடிவமாக இருந்தது. எனினும், அக்காலத்துத் தொடர்கதை எழுத்தாளர்கள் பலரைப்போல, டிக்கென்ஸ், வெளியிடத் தொடங்கு முன்னரே புதினம் முழுவதையும் எழுதி முடிப்பதில்லை. இவர், வெளிவரும் ஒழுங்கில் பகுதி பகுதியாகவே புதினங்களை எழுதினார். இந்த முறை, ஒவ்வொரு வெளியீட்டையும் வாசித்து முடித்ததும் அடுத்த வெளியீட்டை எதிர்பார்த்திருக்கும் ஆவலைத் தூண்டும்படி எழுத வசதியானது.

சார்லசு டிக்கின்சு அடக்கம் செய்ய விரும்பிய இடம். உரோச்சட்டர் ஆலயத்தின் முன்னால் இந்த நினைவிடம் பதிக்கப்பட்டுள்ளது.

தாக்கங்கள்

தொகு

ஹொனோரே டி பால்சாக், மிகுவேல் டி செர்வாண்டெஸ், விக்டர் ஹியூகோ, வாஷிங்டன் இர்விங், வில்லியம் ஷேக்ஸ்பியர்

ஆரம்ப வருடங்கள்

தொகு
 
சார்லஸ் டிக்கின்ஸ் பிறந்த இடம், 393 வணிகச் சாலை, போர்ட்ஸ்மவுத்
 
2 ஆர்டனஸ் டெரேஸ், சாத்தம்,டிக்கின்ஸ் வாழ்ந்த வீடு 1817 – மே 1821[1]

சார்லஸ் ஜான் ஹூஃபாம் டிக்கின்ஸ், பிப்ரவரி 7, 1812 அன்று, 1 மைல் எண்ட் டெரேஸ் (இப்போது 393 வணிகச் சாலை), போர்ட்ஸியா தீவில் (போர்ட்ஸ்மவுத்), ஜான் டிக்கன்ஸ் (1785-1851) மற்றும் எலிசபெத் டிக்கன்ஸ் (née பாரோ, 1789-1863) ஆகியயோரின் எட்டு குழந்தைகளில் இரண்டாவது குழந்தையாக பிறந்தார். அவரது தந்தை கடற்படை அலுவலகத்தில் ஒரு எழுத்தராக இருந்தார் மற்றும் தற்காலிகமாக அந்த மாவட்டத்தில் இருந்தார். சார்லஸ் அவர்களுக்கு ஒரு வழிகாட்டியாக செயல்பட அவரது கடற்படை தலைவர் அவர்களைக் கிறிஸ்டோபர் ஹூஃபாம் கேட்டுக் கொண்டார்.[2] கடற்படை தலைவர் பன்முகம் கொண்டவராக மேலாளராகவும் மற்றும் ஒரு நிறுவனத் தலைவராகவும் இருந்திருக்கிறார். ஹூஃபாம் பவுல் டொம்பாய்க்கு உத்வேகம் அளித்தாக கருதப்படுகிறது, இவர் டிக்கின்ஸின் பெயர்பெற்ற டொம்பாபே அண்ட் சன் (1848) இல் ஒரு கப்பல் நிறுவனத்தின் உரிமையாளர்.[2]

1815 ஆம் ஆண்டு சனவரி மாதம் ஜான் டிக்கின்ஸ் லண்டனுக்குத் திரும்ப அழைக்கப்பட்டார், மேலும் அவரது குடும்பம் நோட்ஃபோக் தெரு, பிட்ஸ்ரோவியாவிற்கு மாற்றப்பட்டது. சார்லஸ்க்கு நான்கு வயது இருந்தபோது, அவரது குடும்பம் ஷெர்னெஸ்ஸிற்கு மாற்றப்பட்டனர், அங்கிருந்து சாத்தம், கென்ட் என்ற இடத்திற்குச் சென்றனர். சார்லஸ் அங்கு 11 வயது வரை கழித்தார். அவரது ஆரம்பகால வாழ்க்கையானது "மிகவும் சிறியதாகவும், எளிமையானதாகவும், குறிப்பாக ஒரு விசயத்தை பற்றிய பொறுப்புகளை எடுத்துக்கொள்ளும் பையனாக" இருந்திருக்கிறார்.[3]

சார்லஸ் வெளிப்புறங்களிலும் தனது நேரத்தை செலவழித்தார் ஆனாலும் உற்சாகத்துடன் வாசித்தார், குறிப்பாக போக்கிரிகளின் துணிகர செயல்கள் அடங்கிய நாவல்களான டோபியாஸ் ஸ்மோல்ட் மற்றும் ஹென்றி ஃபீல்டிங், ராபின்சன் க்ரூஸோ மற்றும் கில் பிளஸ் ஆகியோரின் நாவல்களை வாசித்தார். அரேபிய நைட்ஸ் மற்றும் எலிசபெத் இன்ச்பால்ட்ஸின் சேகரிக்கப்பட்ட பெர்சஸ் ஆகியவற்றை அவர் மீண்டும் மீண்டும் வாசித்து மகிழ்ந்தார்.[4] அவர் குழந்தை பருவத்தின் நினைவுகளை தக்கவைத்துக் கொண்டார், மக்களிடமும் சம்பவங்களிடமிருந்தும் ஒரு சிறந்த நினைவூட்டல் அவர் தனது எழுத்துக்களில் பயன்படுத்தினார்.[5] அவரது தந்தை கடற்படை அலுவலகத்தில் ஒரு எழுத்தராக பணிபுரிந்த ஒரு சில ஆண்டுகளில் அவருக்கு தனிப்பட்ட கல்வியும், பிறகு வயதான பெண் நடத்திய பள்ளியில் பின்னர் சாத்தம்மில் வில்லியம் கில்ஸ் நடத்திய ஒரு பள்ளியில் பயின்றார்.[6]

பத்திரிகை மற்றும் ஆரம்ப நாவல்கள்

தொகு

1832 ஆம் ஆண்டில், 20 வயதில், டிக்கின்ஸ் ஆற்றல் மிக்கவராகவும் தன்னம்பிக்கையுடனும் இருந்தார்.[7] அவர் பலகுரல் வித்தைகள் மற்றும் பிரபலமான பொழுதுபோக்குகளை அனுபவித்து மகிழிந்தார், அவர் தான் எதிர்காலத்தில் எப்படி வரவேண்டும் என்ற் ஒரு தெளிவான, குறிப்பிட்ட உணர்வைக் கொண்டிருக்கவில்லை, மேலும் அவருக்கு புகழ் வேண்டுமென்றும் அறிந்திருந்தார். அவரது ஆர்வம் நாடகத்துறைக்குள் அவரை இழுத்தது- அவர் கேரிக் நாடகக் குழுவில் ஒரு ஆரம்ப உறுப்பினராக ஆனார் [8] - அவர் கோவென்ட் கார்டனில் ஒரு நடிப்புத் தேர்வுக்கு சென்றார், மேலாளர் ஜார்ஜ் பார்ட்லி மற்றும் நடிகர் சார்லஸ் கெம்பல் ஆகியோர் அவரது நடிப்பை பார்த்து மதிப்பிட வேண்டியிருந்தது.[9] இந்தத் தேர்விற்காக டிக்கின்ஸ், நகைச்சுவை நடிகர் சார்லஸ் மேத்யூஸைப் கவனித்து பின்பற்ற முடிவு செய்திருந்தார், ஆனால் இறுதியில் அவர் உடல் நல்க்குறைவின் காரணத்தால் இந்தத் தேர்வை தவறவிட்டார். அவருக்கு வேறொரு சந்தர்ப்பமும் கிடைத்தது ஆனால் இந்த வாய்ப்புக்கு முன்னால், எழுத்தாளர் என்று அவர் தனது வாழ்க்கையைத் தொடங்கி விட்டார். 1833 ஆம் ஆண்டில் லண்டன் மாதாந்திர பத்திரிகைக்கு அவரது முதல் கதை "(A Dinner at Poplar Walk) ஒரு பிரபல நடைபாதை கடையில் இரவு விருந்து" சமர்ப்பித்திருந்தார்.[10] அவரது தாயாரின் சகோதரர் வில்லியம் பாரோ, அவரை நாடாளுமன்றத்தின் கண்ணாடி (The Mirror of Parliament) இதழில் பணியமர்த்தினார், 1832 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் முதன்முறையாக ஹவுஸ் ஆஃப் காமன்ஸ் நிறுவனத்தில் பணியாற்றினார். அவர் ஃபர்னைவல்ஸ் இன்னில் அறைகளை வாடகைக்கு எடுத்து அரசியல் பத்திரிகையாளராக பணிபுரிந்தார், நாடாளுமன்ற விவாதங்கள் குறித்த செய்திகளை அளித்தார், மற்றும் அவர் மார்னிங் க்ரோனிக்காக தேர்தல் பிரச்சாரங்களை நடத்த பிரிட்டன் முழுவதும் பயணித்தார். அவருடைய பத்திரிகை அனுபவங்களை, பருவ இதழ்களில் ஓவியங்கள் வடிவில், 1836 இல் (Boz) போஸ் என்ற புனைப்பெயரில் அவரது முதல் தொகுப்பை உருவாக்கி வெளியிடப்பட்டது: போஸ்- ஒரு குடும்பப் புனைப்பெயராக இருந்ததால், அவர் சில ஆண்டுகளுக்கு அதே பெயரை தனது புனைப்பெயராக பயன்படுத்தினார்.[11][12] டிக்கின்ஸ், "மோசே" என்ற புனைப்பெயரிடமிருந்து வெளிப்படையாகத் போஸ் பெயரை தத்தெடுத்தார், இது அவருடைய இளைய சகோதரர் ஆகஸ்டஸ் டிக்கன்ஸ் கொடுத்தது, இது ஆலிவர் கோல்ட்ஸ்மித் இன் தி விகார் ஆஃப் வேக்ஃபீல்ட் கதையில் வரும் ஒரு கதாபாத்திரத்தின் பெயர். தலை ஓசையிலிருந்து உச்சரிக்கும்போது, "மோசே" போஸ் என அழைக்கப்படும் "போஸ்" ஆனார். அவரது இலக்கிய வாழ்க்கை முழுவதும் பத்திரிகைகளுக்காக அவர் பங்களித்து இருந்தார். சனவரி 1835 இல் மார்னிங் குரோனிக்கல் இதழில் இசை விமர்சகர் ஜார்ஜ் ஹோகார்ட் தலைமையின் கீழ் ஒரு மாலை பதிப்பை வெளியிட்டது. தெரு ஓவியங்கள் வரைவதில் பங்களிப்பதற்காக டிக்கின்ஸ்சை ஹோகார்ட் அழைத்தார் மற்றும் டிக்கின்ஸ் தனது புல்ஹாம் வீட்டிற்கு ஒரு வழக்கமான பார்வையாளராக ஆனார். டிக்கின்ஸ்சின் தனது கதாநாயகனான வால்டர் ஸ்காட்டுடன் ஹோகார்ட் கொண்ட நட்பால் உற்சாகமடைந்தார், மேலும் ஹோகார்தின் மூன்று மகள்கள் - ஜோர்ஜினா, மேரி, மற்றும் பத்தொன்பது வயது கேத்தரின் ஆகியோரின் நட்பையும் பெற்று மகிழ்ந்தார்.

ஆன்மீகப் பார்வை

தொகு

ஒரு இளைஞனாக டிக்கின்ஸ் ஒழுங்கமைக்கப்பட்ட மதத்தின் சில அம்சங்களுக்கு ஒரு விரக்தியை வெளிப்படுத்தினார். 1836 ஆண்டில், ஒரு ஞாயிற்றுக்கிழமை அன்று மூன்று தலைவர்கள் என்ற தலைப்பில் ஒரு துண்டுப் பிரசுரத்தில், ஞாயிற்றுக்கிழமைகளில் விளையாட்டுகளை தடை செய்வதற்கான ஒரு திட்டத்தை எதிர்த்து, மகிழ்ச்சிக்கான மக்களின் உரிமைகளை பாதுகாக்க போராடினார்.

"உங்கள் தேவாலயங்களை பாருங்கள்- குறைந்த சபை மற்றும் குறைவான வருகை. மக்கள் பரிதாபகரமாகவும் முரட்டுத்தனமாகவும் வளர்ந்து, தேவாலயத்தின் நம்பிக்கையின் மீது வெறுப்படைந்து வருகின்றனர், அத்தகைய ஒவ்வொரு ஏழு நாளைக்கு ஒருமுறை மக்களின் விருப்பங்களை தடை செய்கிற விசுவாசத்தால் வெறுக்கப்படுகிறார்கள். மக்கள் தேவாலயங்களுக்கு வெளியே தங்களின் உணர்வுகளை வெளிப்படுத்துகிறார்கள் மேலும் தேவாலயங்களை தவிர்க்கவும் செய்கிறார்கள். அதனால் ஞாயிற்றுக்கிழமை தெருக்களுக்கு வாருங்கள், மேலும் சுற்றியுள்ள எல்லாவற்றிற்கும் மேலாகச் செயல்படும் கடுமையான மனச்சோர்வைக் கவனியுங்கள்" என்று அந்த துண்டுப் பிரசுரத்தில் எழுதியிருந்தார்.

மரணம்

தொகு

1870 ஆம் ஆண்டு சூன் மாதம் 8 ஆம் தேதி, எட்வின் ட்ரோட் மீதான ஒரு முழு நாள் வேலைக்குப் பிறகு டிக்கின்ஸ் இருதய தசை அடைப்பு ஏற்பட்டது. அவர் ஒருபோதும் சுயஉணர்வைப் பெறவில்லை, அடுத்த நாள் அவர் உயிர் பிரிந்தது, அவர் மரணம் மடைந்தார். டிக்கின்ஸ் உண்மையிலேயே பெக்காமில் இருப்பதாக சுயசரிதை எழுத்தாளரான கிளாரி டோமலின் பரிந்துரைத்தார். டிக்கின்ஸ் இருதய தசை அடைப்பால் பாதிக்கப்பட்டபோது, அவருடைய மனைவி எல்லென் டெர்னானும் அவளது வேலைக்காரிகளும் அவரை காட்ஸ் ஹில்லுக்கு அழைத்துச் சென்றனர், அதனால் அவர்களது உறவு பற்றிய உண்மையை பொது மக்களுக்கு தெரியாது. ரோச்செஸ்டர் தேவாலயத்தில் "மலிவான, அசையாத, தனிப்பட்ட முறையில்" இரகசியமாக புதைக்கப்பட வேண்டும் என்ற டிக்கின்ஸ் விருப்பதிற்கு மாறாக, அவரை வெஸ்ட்மினிஸ்டர் அபேயின் பொயட்ஸ் கார்னரில் அடக்கம் செயதனர். இறுதி சடங்கில் அச்சிடப்பட்ட ஒரு கட்டுரையில் பின்வருமாறு வாசகம் உள்ளது: "சார்லஸ் டிக்கின்ஸ் நினைவாக, தனது 58 வது அகவையில் 9 சூன் 1870 அன்று, ராச்செஸ்டர், கென்ட் அருகிலுள்ள தனது இல்லத்தில் டிக்கின்ஸ் (இங்கிலாந்தின் மிகவும் பிரபலமான எழுத்தாளர்) இறந்தார். அவர் ஏழைகள், துன்பங்கள் மற்றும் ஒடுக்கப்பட்டவர்கள் ஒரு அனுதாபியாக இருந்தார் மற்றும் அவருடைய இறப்பு மூலம், இங்கிலாந்தின் மிகப்பெரிய எழுத்தாளர்களில் ஒருவர் உலகில் இழக்கப்படுகிறார்." அவருடைய கடைசிச் சொற்கள்: "நிலத்தின் மேல்", அவரது அண்ணியார் ஜோர்ஜினாவின் வேண்டுகோளுக்கு இணங்க அவரது உடல் நல்லடக்கம் செய்யப்படுகிறது.

ஞாயிற்றுக்கிழமை, 19 ஜூன் 1870, டிக்கின்ஸ் நல்லடக்கம் முடிந்த ஐந்து நாட்களுக்கு பின்னர், டீன் ஆர்தர் பென்ரின் ஸ்டான்லி ஒரு நினைவறிக்கையை வெளியிட்டார். "இருண்ட காட்சிகளை கையாள்வதிலும் மற்றும் மிகவும் இழிந்த பாத்திரங்களை கையாள்வதிலும், மேதையாக மற்றும் தூய்மையாக இருக்க முடியும் என்பதற்கு டிக்கின்ஸ் ஒரு உதாரணமாக இருந்தார், இப்போது அவர் நம்மோடு இல்லை என்று துக்க நாள் நினைவு கூறப்பட்டது.

பின்பற்றுவோர்

தொகு

டி. கொராகேசன் போய்ல், ஃபியோடர் டொஸ்தோவ்ஸ்கி, ஜார்ஜ் கிஸ்ஸிங், தாமஸ் ஹார்டி, ஜான் இர்விங், எட்கார் அலன் போ, டாம் வோல்ஃப், ஜி. கே. செஸ்டர்ட்டன், ஜார்ஜ் ஆர்வெல், ரே பிராட்பரி

வெளி இணைப்புகள்

தொகு
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Charles Dickens
என்பதில் ஊடகங்கள் உள்ளன.


மேற்கோள்கள்

தொகு
  1. Simon Callow, Charles Dickens and the Great Theatre of the World, p.9
  2. 2.0 2.1 West, Gilian. "Huffam and Son." Dickensian 95, no. 447 (Spring, 1999): 5–18.
  3. Forster 2006, ப. 13.
  4. Simon Callow, Charles Dickens and the Great Theatre of the World, p.7
  5. Ackroyd 1990, ப. 22–24:29–30.
  6. Ackroyd 1990, ப. 41.
  7. Callow, p.48
  8. Claire Tomalin, The Invisible Woman, p.7
  9. Claire Tomalin, the Invisible Woman, p.76
  10. Patten 2001, ப. 16–18.
  11. Ackroyd 1990, ப. 174–176.
  12. Glancy 1999, ப. 6.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சார்லஸ்_டிக்கின்ஸ்&oldid=3480725" இலிருந்து மீள்விக்கப்பட்டது