சாலியம்

கேரளாவிலுள்ள ஒரு கிராமம்

சாலியம் (Chaliyam) என்பது இந்திய மாநிலமான கேரளாவின் கோழிக்கோடு மாவட்டத்தில் சாலியாற்றின் (பேப்பூர் ஆறு) கரையோரத்தில் அமைந்துள்ள ஒரு கிராமமாகும். சாலியம் ஒரு தீவை உருவாக்குகிறது. இது வடக்கில் சாலியாறு, தெற்கில்கடலுண்டி ஆறு, கிழக்கில் கொனோலி கால்வாய் ஆகியவற்றால் சூழப்பட்டுள்ளது. இது பேப்பூர் துறைமுகத்திற்கு எதிரே அமைந்துள்ளது. சாலியம் (பேப்பூர் தொடர் வண்டி நிலையம்) சென்னை தொடர் வண்டிபாதையின் தென்மேற்கு முனையமாக இருந்தது. கைகளையும் கால்களையும் கயிறுகளால் கட்டிக்கொண்டு சாலியாற்றின் ஏழு கி.மீ தூரத்தை கடந்து கின்னஸ் உலக சாதனைகள் படைத்த முகம்மது ஆதில் இப்பகுதியைச் சேர்ந்தவர்.[1]

சாலியம்
கிராமம்
சாலியம் என்ற பெயரில் தவறாக பெயரிடப்பட்ட பேப்பூர் தொடர்வண்டி நிலையம்.
சாலியம் என்ற பெயரில் தவறாக பெயரிடப்பட்ட பேப்பூர் தொடர்வண்டி நிலையம்.
சாலியம் is located in கேரளம்
சாலியம்
சாலியம்
கேராளாவில் அமைவிடம்
ஆள்கூறுகள்: 11°09′21″N 75°48′30″E / 11.15592°N 75.80824°E / 11.15592; 75.80824
நாடுஇந்தியா
மாநிலம்மாவட்டம்
வட்டம்கோழிக்கோடு
வட்டார ஒன்றிய அலுவலகம்கோழிக்கோடு
தொலைபேசி இணைப்பு எண்0495
அஞ்சல் குறியீடு673301
மக்களவைத் தொகுதிகோழிக்கோடு

வரலாறு தொகு

கேரளத்தில் முதன்முதலில் நிறுவப்பட்ட பள்ளிவாசல்களின் சாலியமும் ஒன்று என்று நம்பப்படுகிறது. இந்த பாரம்பரியத்தின் படி, இசுலாமியச் சட்டத்தின் நீதிபதி தாகி உத்-தினின் பள்ளிவாசல் இங்கு முதலில் நிறுவப்பட்டது. [2] இப்னு பதூதா 14 ஆம் நூற்றாண்டில் இந்த ஊரை பார்வையிட்டதாக தெரிகிறது. அவர் குடியேற்றத்தை விவரிக்கிறார்: "நான் அடுத்ததாக சாலியாத் நகரத்திற்கு வந்தேன். அங்கு சாலியத்டை உருவாக்குகிறார்கள். எனவே அவர்கள் இப்பெயரைப் பெற்றனர். இது ஒரு சிறந்த நகரம். . . " [3]

தொடர்வண்டிப் பாதை தொகு

கேரளாவில் முதல் தொடர்வண்டிப் பாதை 1861 ஆம் ஆண்டில் திரூர் முதல் சாலியம் வரை தானூர், பரப்பனங்காடி, வள்ளிக்குன்னு, கடலுண்டி வழியாக அமைக்கப்பட்டது. [4]

பிற நாட்டவர் தொகு

சில ஆதாரங்கள் சாலியத்தில் யூதக் குடியேற்றங்கள் (12 மற்றும் 13 ஆம் நூற்றாண்டுகள்) இருந்ததைக் குறிக்கின்றன. [5]

போர்த்துகீசிய ஆளுநர் நுனோ டா சுன்காவுக்கும் கோழிக்கோடு சமுத்திரிக்கும் இடையிலான சமாதான ஒப்பந்தத்தின்படி, 1531இல் சாலியத்தில் ஒரு போர்த்துகீசிய கோட்டை கட்டப்பட்டது. சாலியம் கோட்டை இறுதியில் 1571இல் கோழிக்கோடு இராச்சியப் படைகளால் முற்றுகையிடப்பட்டு அழிக்கப்பட்டது. இந்த நேரத்தில் கோட்டையின் பொறுப்பாளராக அட்டைடு என்ற ஒரு போர்த்துகீசிய அதிகாரி இருந்தார். [6] [7]

பாரம்பரியமாக துறைமுகங்களிலும், கப்பல்துறைகளிலும் பணிபுரியும் கலாசி என்பவர்கள் அதிகளவில் வசிக்கின்றனர். [8]

 
சாலியம் துறைமுகம்
 
மருத்துவ பண்புகள் நிறைந்த தாவரவியல் ஆய்வு மையாமன "மலபார் தோட்டம்", சாலியம்.

மேலும் காண்க தொகு

படத் தொகுப்பு தொகு

மேற்கோள்கள் தொகு

  1. "10-year-old boy swims hands and legs tied". பார்க்கப்பட்ட நாள் 2021-06-26.
  2. William Logan. Malabar: District Manual, Volume 1 Asian Educational Services, 1887
  3. William Logan. Malabar: District Manual, Volume 1 Asian Educational Services, 1887
  4. "ആ ചൂളംവിളി പിന്നെയും പിന്നെയും...". Mathrubhumi. 17 June 2019 இம் மூலத்தில் இருந்து 30 நவம்பர் 2020 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20201130082010/https://www.mathrubhumi.com/malappuram/specials/50-years-of-malappuram/kerala-first-railway-line-tirur-to-beypore-1.3880175. 
  5. Jewish Virtual Library
  6. K. M. Panikkar. A History of Kerala 1498-1801. pp. 102
  7. William Logan. Malabar: District Manual, Volume 1 Asian Educational Services, 1887
  8. K. M. Panikkar. A History of Kerala 1498-1801. pp. 102
"https://ta.wikipedia.org/w/index.php?title=சாலியம்&oldid=3577181" இலிருந்து மீள்விக்கப்பட்டது