சா. கிருஷ்ணசுவாமி ஐயங்கார்
சாக்கோட்டை கிருஷ்ணசாமி ஐயங்கார் (ஏப்ரல் 15, 1871 – 26 நவம்பர் 1946) ஒரு இந்திய வரலாற்றாளர், ஆய்வாளர் மற்றும் திராவிடவியலாளர். இவரது வரலாற்று ஆராய்ச்சி முறை இந்திய தேசஞ்சார்ந்ததாக அமைந்திருந்தது. இவர் சென்னைப் பல்கலைக்கழகத்தின் இந்திய வரலாறு மற்றும் தொல்லியல் துறையின் தலைவராக பணியாற்றியவர் (1914 - 1929). பதின்மூன்று நூல்களும் பல ஆராய்ச்சிக் கட்டுரைகளும் எழுதியுள்ளார். தென்னிந்திய வரலாற்றை எழுதி உலகறியச் செய்தவர்.
எஸ். கிருஷ்ணசுவாமி ஐயங்கார் | |
---|---|
பிறப்பு | சாக்கோட்டை கிருஷ்ணசுவாமி ஐயங்கார் 15 ஏப்ரல் 1871 சாக்கோட்டை, சென்னை மாகாணம் |
இறப்பு | 26 நவம்பர் 1946 சென்னை, இந்தியா | (அகவை 75)
பணி | வரலாற்றாளர், கல்வியாளர், பேராசிரியர், நூலாசிரியர் |
வாழ்க்கைக் குறிப்பு
தொகுபிறப்பும் படிப்பும்
தொகுகிருஷ்ணசாமி அய்யங்கார் கும்பகோணத்துக்கு அருகிலுள்ள சாக்கோட்டைக் கிராமத்தில் பிறந்தார்.[1] இவரது 11 வது வயதில் இவருடைய தந்தை காலமானார்.[2] தனது பள்ளிப்படிப்பை கும்பகோணத்தில் முடித்துவிட்டு பெங்களூரில் தம் தமையனார் உதவியுடன் கல்வி பயின்றார். இவர் விரும்பி படித்தவை இயற்பியலும் கணிதமும். பள்ளியில் ஆசிரியர் பணியைச் செய்துகொண்டே சென்னைப் பல்கலைக்கழகத்தில் வரலாற்றில் இளங்கலை (1897) மற்றும் கணிதத்தில் முதுகலைப் (1899) பட்டம் பெற்றார்.[3][4] அடிக்கடி மாறுதல் ஆனபடியால் கணிதம் பயில்வதைத் தொடராமல் வரலாற்றுப் பாடத்தில் தம் ஆர்வத்தைச் செலுத்தினார்.
பணிகள்
தொகு- 1899 முதல் 1909 வரை பெங்களூரில் ஒரு கல்லூரியில் விரிவுரையாளராகப் பணிபுரிந்தார்.[3].
- 1900 ஆம் ஆண்டில் ஆசிரியராக இருந்தபோது 'உடையார்களின் கீழ் மைசூர் வரலாறு' என்னும் ஆய்வேட்டை மெட்ராஸ் ரெவ்யூ என்னும் இதழில் வெளியிட்டார். இதன் விளைவாக பெங்களூரு மையக் கல்லூரியில் வரலாற்று விரிவுரையாளராக அமர்த்தப்பட்டார்.
- 1904ல் இவர் ராயல் ஏஷியாட்டிக் சொஸைட்டியின் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[4][5]
- 1914 இல் சென்னைப் பல்கலைக் கழகம் இந்திய வரலாறு மற்றும் தொல்பொருள் ஆராய்ச்சித் துறையைத் தொடங்கியது. அத்துறைக்கு முதல் பேராசிரியராக, துறைத்தலைவராக கிருட்டிணசாமி அய்யங்கார் 1914ல் பதவியேற்று 1929 வரை பணிபுரிந்தார்.
- 1919 இல் கொல்கத்தா பல்கலைக் கழகப் பேராசிரியராக அமர்த்தப்பட்டார். அங்கு இவருக்கு மதிப்புறு முனைவர் பட்டம் கிடைத்தது. பல இதழ்களில் இந்திய வரலாறு குறித்த கட்டுரைகளை எழுதினார். இந்திய வரலாறு இதழின் பதிப்பாசிரியராகவும் இருந்தார்.
- 1921ல் ஷஃபாட் அகமத் கானால் ஆரம்பிக்கப்பட்ட ஜர்னல் ஆஃப் இண்டியன் ஹிஸ்டரி என்ற பத்திரிக்கையை எடுத்து நடத்தினார்.[6] ஆரம்பத்தில் பத்திரிக்கையை நடத்துவதில் பொருளாதாரச் சிக்கலிருந்ததால் கேரளாப் பல்கலைக்கழகம் அதனை ஏற்று நடத்துவதற்கு ஏற்பாடு செய்தார்.[6] ஆனால் கேரளப் பல்கலைக்கழகத்திடம் ஒப்படைப்பதற்கு முன்னதாகவே தரமான உலக வரலாற்றுப் பத்திரிக்கையாக அதை உயர்த்தியிருந்தார்.[6]
- 1928ல் அவருக்கு ராவ் பகதூர் பட்டம் வழங்கப்பட்டது[5]
- 1931 இல் நிகழ்ந்த முதல் இந்திய மாநாட்டுக்குத் தலைமை தாங்கினார்.
- கல்கத்தா பல்கலைக்கழகம் அவருக்கு கெளரவ முனைவர் பட்டம் வழங்கி பெருமைப்படுத்தியது.[4][5] . அவரைத் தொடர்ந்து கே. ஏ. நீலகண்ட சாஸ்திரி சென்னைப் பல்கலைக்கழகத்தின் இந்திய வரலாறு மற்றும் தொல்லியல் துறைத்தலைவராகப் பொறுப்பேற்றார்.
ஆராய்ச்சி முறை
தொகுதென்னிந்திய கல்வெட்டுக்கள் மற்றும் தொல்லியல் பற்றி ராபர்ட் செவல் எழுதிய புத்தகங்கள் கிருஷ்ணசாமி அய்யங்காரை விஜயநகர வரலாற்று ஆராய்ச்சியில ஈடுபாடு கொள்ளத் தூண்டியது.[3] 1920ல் விஜயநகர வரலாறு பற்றிய தலைசிறந்த படைப்புகளை இவர் வெளியிட்டார்.[3] இவரது ஆய்வுமுறை, செவல் மற்றும் இவருக்கு முந்தைய வரலாற்றாளர்களிலிருந்து வேறுபட்டிருந்தது. விஜயநகரப் பேரரசு உருவாகக் காரணமாக இருந்த இந்து-முஸ்லீம் மோதல்களையும் சண்டைகளையுமே இவரது ஆராய்ச்சி சார்ந்துள்ளது.[3] 1921ல் வெளிவந்த இவரது ஏன்ஷியன்ட் இந்தியா என்ற புத்தகத்தில் போசள அரசன் மூன்றாம் வீர வல்லாளன் தெற்கிலிருந்து முகமதியர்களைத் துரத்தியடிக்க மேற்கொண்ட முயற்சிகளாலும், இந்துக்களுக்காக நடத்திய சண்டைகளினால் (மதுரை சுல்தானகத்துடன்) அவரது வம்சமே முடிவுக்கு வந்தது என்றும் கூறியுள்ளார்.[7] இவரது கூற்றுக்களைக் கன்னட வரலாற்றாளர் பி. ஏ. சாலடூர், தெலுங்கு வரலாற்றாளர் என். வெங்கடரமணய்யாவும் ஆமோதிக்கின்றனர்.[8] கிருஷ்ணசாமி அய்யங்காரின் ஆய்வுமுறை தேசியவாதம் சார்ந்து அமைந்திருப்பதாக ஆ. இரா. வேங்கடாசலபதி கூறுகிறார். அவரது தென்னிந்திய வரலாற்று ஆராய்ச்சிப் புத்தகங்களில், தென்னிந்தியா இந்திய நாட்டின் பிறபகுதிகளுடன் நெருங்கிய தொடர்புடையாதாகவே காட்டப்பட்டுள்ளது. மேலும் தென்னிந்தியாவின் வரலாறும் நாகரீகமும் பரந்த இந்தியப் பாரம்பரியத்தின் அங்கங்களாகவே சித்தரிக்கப்பட்டுள்ளன.
களப்பிரர்கள் ஆட்சிக் காலம், சோழர் ஆட்சி முறை, பல்லவர் வரலாறு, விசய நகர வரலாறு ஆகியன இவருடைய ஆய்வுகளால் வெளிவந்தன. தென்னிந்தியப் பண்பாடு பற்றியும் எழுதினார். சங்க இலக்கியங்களைச் சான்றாகக் கொண்டு வரலாறு எழுதலாம் என்னும் முறையைக் கையாண்டார்.
எழுதிய நூல்கள்
தொகு- பண்டை இந்தியாவும் தென்னிந்திய வரலாறும் பண்பாடும்[9]
- இந்தியப் பண்பாட்டில் தென்னிந்தியாவின் பங்கு
- தென்னிந்தியாவும் இசுலாமியப் படையெடுப்பாளர்களும்
- வரலாற்றுப் பின்னணியில் மணிமேகலை [10]
- திருப்பதியின் வரலாறு
- விசய நகர வரலாற்றுச் சான்றுகள்
- சேரன் வஞ்சி
- Aiyangar, Sakkottai Krishnaswamy (1911). Ancient India. Luzac & Co.
- Sri Ramanujacharya:A Sketch of his life and times. G. A. Natesan. 1911.
{{cite book}}
:|first=
missing|last=
(help); Unknown parameter|coauthors=
ignored (help) - Aiyangar, Sakkottai Krishnaswamy (1914). A History of India. Longmans Green.
- Aiyangar, Sakkottai Krishnaswamy (1919). Sources of Vijayanagar History. University of Madras.
- Aiyangar, Sakkottai Krishnaswamy (1920). Early history of Vaishnavism in South India. University of Madras.
- Aiyangar, Sakkottai Krishnaswamy (1921). South India and her Muhammadan invaders. S.Chand.
- Aiyar, R. Sathyanatha (1924). History of the Nayaks of Madura. Oxford University Press.
{{cite book}}
: Unknown parameter|coauthors=
ignored (help) - Aiyangar, Sakkottai Krishnaswamy (1926). Hindu India from Original Sources. K & J. Cooper.
- செ. இராசநாயகம், C. (1926). Ancient Jaffna: being a research into the history of Jaffna from very early times to the Portuguese period.
{{cite book}}
: Unknown parameter|coauthors=
ignored (help) - Dikshitar, V. R. Ramachandra (1929). Hindu Administrative Institutions. University of Madras.
{{cite book}}
: Unknown parameter|coauthors=
ignored (help) - Sewell, Robert (1932). The Historical Inscriptions of Southern India (collected Till 1923) and Outlines of Political History. Diocesan Press.
{{cite book}}
: Unknown parameter|coauthors=
ignored (help) - Aiyangar, Sakkottai Krishnaswamy (1940). A history of Tirupathi. C. Sambaiah Pantulu.
- Aiyangar, Sakkottai Krishnaswamy (1940). Seran Vanji: Vanji, the Capital of the Cheras. Cochin Govt. Press.
- Aiyangar, Sakkottai Krishnaswmy (1941). Ancient India and South Indian History & Culture: Papers on Indian History and Culture; India to A.D. 1300. Oriental Book Agency.
- Aiyangar, Sakkottai Krishnaswamy (1931). Evolution of Hindu Administrative Institutions in South India.
{{cite book}}
: Cite has empty unknown parameter:|1=
(help)
மேற்கோள்கள்
தொகு- ↑ Ganganatha Jha Research Institute (1945). The Journal of the Ganganatha Jha Research Institute. p. 80.
- ↑ Subrahmanian, N. (1973). Historiography. Koodal publishers. p. 454.
- ↑ 3.0 3.1 3.2 3.3 3.4 Johnson, Gordon (1987). The New Cambridge History of India. Cambridge University Press. p. 4. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-521-26693-9, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-521-26693-2.
{{cite book}}
: Unknown parameter|coauthors=
ignored (help) - ↑ 4.0 4.1 4.2 Nalanda Year-book & Who's who in India. 1947. p. 431.
- ↑ 5.0 5.1 5.2 P. Kabadi, Waman (1935). Who's Who. Yeshanand & Co. p. 16.
- ↑ 6.0 6.1 6.2 Sreedharan, E. (2004). A Textbook of Historiography, 500 B.C. to A.D. 2000: 500 BC to AD 2000. Orient Blackswan. pp. 449. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-250-2657-6, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-250-2657-0.
- ↑ Johnson, Gordon (1987). The New Cambridge History of India. Cambridge University Press. p. 5. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-521-26693-9, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-521-26693-2.
{{cite book}}
: Unknown parameter|coauthors=
ignored (help) - ↑ Johnson, Gordon (1987). The New Cambridge History of India. Cambridge University Press. p. 6. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-521-26693-9, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-521-26693-2.
{{cite book}}
: Unknown parameter|coauthors=
ignored (help) - ↑ https://books.google.co.in/books/about/Ancient_India_and_South_Indian_History_C.html?id=WnZCAAAAYAAJ&redir_esc=y
- ↑ https://archive.org/details/manimekhalaiinit031176mbp
பிற சான்றுகள்
தொகு- தமிழக வரலாற்றறிஞர்கள்- நூல் இளங்கணி பதிப்பகம் சென்னை--15
- "வரலாறு கற்பித்தலில் புதுமைகள்" டாக்டா். வி. நடராஜன் (2014). வரலாற்று எழுத்தாண்மை. சாந்தா பப்ளிஷா்ஸ். pp. 105–106. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-93-81413-45-6.