சிக்கபானவாரா
சிக்கபானவாரா (Chikkabanavara) என்பது இந்தியாவின் கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் புறநகரில் உள்ள ஒரு சிற்றூர் ஆகும். [1] [2] இது கர்நாடகத்தின் பெங்களூர் நகர மாவட்டத்தின் பெங்களூர் வடக்கு வட்டதில் அமைந்துள்ளது. இது பெங்களூரில் எஞ்சியிருக்கும் பழமையான ஏரிகளில் ஒன்றைக் கொண்டிருக்கிறது. இந்த ஏரி பெங்களூர்-தும்கூர் தொடருந்து பாதையில் சிக்கபானவாரா தொடருந்து நிலையத்திலிருந்து வடக்ககே 1.5 கிமீ தொலைவில் அமைந்துள்ளது.
சிக்கபானவாரா | |
---|---|
பறநகர் | |
ஆள்கூறுகள்: 13°05′05″N 77°30′05″E / 13.084650°N 77.501410°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | கருநாடகம் |
மாவட்டம் | பெங்களூரு நகர மாவட்டம் |
வட்டம் | பெங்களூர் வடக்கு |
மக்கள்தொகை (2001) | |
• மொத்தம் | 5,229 |
மொழிகள் | |
• அதிகாரப்பூர்வமாக | கன்னடம் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இசீநே) |
அஞ்சல் குறியீட்டு எண் | 560090 |
மக்கள்தொகையியல்
தொகு2001[update] இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, சின்னபானவாரத்தின் மக்கள் தொகை 5209 ஆகும். இவர்களில் ஆண்களின் எண்ணிக்கை 2640 என்றும், பெண்களின் எண்ணிக்கை 2589 என்றும் உள்ளது.[1]
போக்குவரத்து
தொகுபேருந்து
தொகுபெங்களூர் மாநகர போக்குவரத்துக் கழகமானது இங்கிருந்து மெஜஸ்டிக், ஆர். கே மார்க்கெட் ஆகிய இடங்களுக்கு 250,253,254,248 ஆகிய எண் பேருந்துகளையும், கெங்கேரிக்கு - 502H எண் பேருந்தையும், கிருஷ்ணராஜபுரத்துக்கு (ஆர்.கே. புரம்) 502A, 507C எண் பேருந்துகளையும். பீன்யா, ஜலஹள்ளி ஆகியவற்றுக்கு 250,250AB, 220AC, எண் பேருந்துகளையும், விஜய்நகர் நோக்கி 250AC எண் பேருந்தையும் இயக்குகிறது.
தொடருந்து
தொகுஅருகிலுள்ள தொடருந்து நிலையம் சிக்கபானவார் சந்திப்பு தொடருந்து நிலையம், யஷ்வந்த்பூர் சந்திப்பு தொடருந்து நிலையம் 10 கிமீ தொலைவில் அமைந்துள்ளது.
வானூர்தி
தொகுகெம்பெகவுடா பன்னாட்டு வானூர்தி நிலையம் 38 கி.மீ தொலைவில் உள்ளது.
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 Village code= 2036900 "Census of India : Villages with population 5000 & above". Registrar General & Census Commissioner, India. Archived from the original on 2008-12-08. பார்க்கப்பட்ட நாள் 2008-12-18.
- ↑ "Yahoomaps India :". Archived from the original on 2008-12-18. பார்க்கப்பட்ட நாள் 2008-12-18. Chikkabanavara, Bangalore Urban, Karnataka