சிட்னி இர்விங் சுமித்து

சிட்னி இர்விங் சுமித்து (Sidney Irving Smith)(பிப்ரவரி 18, 1843 நார்வே, மைனே - மே 6, 1926 நியூ ஹேவென், கனெக்டிகட்)[1] என்பவர் ஒரு அமெரிக்க ஐக்கிய நாட்டினைச் சார்ந்த விலங்கியல் நிபுணர் ஆவார் .

வாழ்க்கை

தொகு

சிட்னி சுமித்து, எலியட் சுமித்து மற்றும் இலாவினியா பார்டன் ஆகியோரின் மகன் ஆவார். இவரது மைத்துனர் அடிசன் எமரி வெரில் ஆவார். இவர் 1982 ஜூன் 29 அன்றுநியூ ஹேவென், கனெடிகட்டினைச் சார்ந்த சுமித்து யூஜினியா போகாஹொன்டாசு பார்பரை மணந்தார்.[1] இந்த இணையருக்குக் குழந்தைகள் இல்லை. மேலும் யூஜினியா மார்ச் 14, 1916 அன்று இறந்தார்.[1] சுமித் பரம்பரை கண் அழுத்த நோயினால்பாதிக்கப்பட்டார். 1906ஆம் ஆண்டு முதல் ஓரளவு பார்வைக் குறைபாடு ஏற்பட்டது. மேலும் இவர் இறப்பதற்கு சில ஆண்டுகளுக்கு முன்பு முற்றிலும் பார்வையினை இழந்தார்.[1] இவர் மே 6, 1926 அன்று தொண்டை புற்றுநோயால் இறந்தார்.[1]

கல்வியும் பணியும்

தொகு

தனது இளம் வயதின்போதே சுமித்து தான் வாழ்ந்த பகுதியில் உள்ள விலங்குகள் குறித்து தகவல்களைச் சேகரிக்க ஆரம்பித்தார். இவர் பூச்சிகளை அதிக அளவில் சேகரித்து வைத்திருந்தார்.[1] இவர் யேல் பல்கலைக்கழகத்தின் செல்பீல்டு அறிவியல் பள்ளியில் பயின்று 1867-ல் பிஎச். பி. பட்டம் பெற்றார். யேல் பல்கலைக்கழகம் இவருக்கு 1887-ல் எம். ஏ. பட்டம் வழங்கியது. இவர் யேலில் உதவியாளராக ஆரம்பத்தில் பணியாற்றத் துவங்கினார். ஆனால் 1875 முதல் 1906-ல் ஓய்வு பெறும்வரை பேராசிரியராக உறுப்பமைப்பு ஒப்புமையியல் துறையில் பேராசிரியராக பணியாற்றினார்.[1] இதன்பிறகு, சுமித்து யேலில் தகைசால் பேராசிரியராக பணியாற்றினார்.[1]

பூச்சியியல் நிபுணராகத் தனது பணியினைத் துவங்கிய சுமித், பல ஆண்டுகளாக மேய்ன் மற்றும் கனெடிகட்டின் மாநில பூச்சியியல் நிபுணராக இருந்தார்.[1] சுமித் ஆரம்பத்தில் ஓடுடைய கணுக்காலிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். அமெரிக்காவின் மீன் ஆணையத்துடன் பணிபுரிந்ததன் காரணமாகப் பெற்ற அனுபவம் காரணமாக இந்த ஆய்வினை மேற்கொண்டார். பல்வேறு களப் பயணங்களில் சுமித் பங்கேற்றார். சில பயணங்கள் வெர்ரில் அல்லது அகாசி லுயியுடன் இணைந்து மேற்கொள்ளப்பட்டது. 1871-ல் சுப்பீரியர் ஏரியில் நடந்த அமெரிக்காவின் ஏரி ஆய்வில் சுமித் தலைமை விலங்கியலாளராகப் பணியாற்றினார். மேலும் தூய ஜார்ஜ் பேங்கில் 1872-ல் ஐக்கிய அமெரிக்கத் தேசிய புவிப்பகுப்பளவுசார் அளவீடு பணியிலும் தலைமை தாங்கினார்.[1] 1884-ல், சுமித் தேசிய அறிவியல் கழக உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1]

புகழ்

தொகு

சுமித் 70க்கும் மேற்பட்ட ஆய்வு ஆவணங்களைத் தயாரித்தார்.[2] இவரது சேகரிப்புகள் இப்போது யேலில் உள்ள பீபாடி இயற்கை வரலாற்று அருங்காட்சியகத்திலும், இயற்கை வரலாற்றுக்கான தேசிய அருங்காட்சியகத்திலும் வைக்கப்பட்டுள்ளன.[2]

சிட்னி இர்விங் சுமித் பல சிற்றினங்களின் குறிப்பிடப்பட்ட பெயர்களின் மூலம் கௌரவிக்கப்பட்டார். இவை லெம்போசு சிமித்தீ, கோம்ஸ், 1905, மெட்டாபின்னேயசு சுமித்தீ (ஸ்கிமிட், 1924), ஆக்சியூரோசைடுலிசு சிமித்தீ கால்மன், 1912, பாண்டரூசு சுமித்தீ இரத்பர்ன், 1886 மற்றும் சைபோனெக்டெசு சுமீத்தீயானசு இரத்பன், 1908. [3]

சிட்னி இர்விங் சுமித்தால் பெயரிடப்பட்ட உயிரினங்கள்:

  • காலினெக்டெசு டானே சி. இ. சுமித்து, 1869
  • கார்டிசோமா கிராசம் சி. இ. சுமித்து, 1870
  • யூமுனிடா சி. இ. சுமித்து, 1883
  • யூமுனிடா பிக்டா சி. இ. சுமித்து, 1883
  • யூனெப்ரோப்சு சி. இ. சுமித்து, 1885
  • யூனெப்ரோப்சு பைர்டி சி. இ. சுமித்து, 1885
  • ஹெபடெல்லா சுமித்து வெரிலில், 1869
  • ஹைலெல்லா சி. இ. சுமித்து, 1874
  • மேக்ரோபிராக்கியம் ஒகியோன் சி. இ. சுமித்து, 1874
  • நியோமிசிசு அமெரிக்கானா (சி. இ. சுமித்து, 1873)
  • ஆர்கெஸ்டியா அகிலிசு சி. இ. சுமித்து, 1874
  • பராபகுரிடே சி. இ. சுமித்து, 1882
  • பாலிசெல்சு இசுகல்ப்டசு சி. இ. சுமித்து, 1880
  • யூகா பக்னாக்சு (சி. இ. சுமித்து, 1870)
  • சிப்போபின்னேயசு கர்த்தீ சுமித்து, 1869

மேற்கோள்கள்

தொகு
  1. 1.00 1.01 1.02 1.03 1.04 1.05 1.06 1.07 1.08 1.09 1.10 Addison Emery Verrill (1926). "Sidney Irving Smith". Science 64 (1646): 57–58. doi:10.1126/science.64.1646.57. பப்மெட்:17774467. Bibcode: 1926Sci....64...57V. https://archive.org/details/sim_science_1926-07-16_64_1646/page/n11. 
  2. 2.0 2.1 {{cite book}}: Empty citation (help)
  3. Hans G. Hansson. "Prof. Dr. Sidney Irving Smith". Biographical Etymology of Marine Organism Names. Göteborgs Universitet. Archived from the original on ஜனவரி 29, 2006. பார்க்கப்பட்ட நாள் May 31, 2011. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிட்னி_இர்விங்_சுமித்து&oldid=4174445" இலிருந்து மீள்விக்கப்பட்டது