மேக்ரோபிராக்கியம் ஒகியோன்
மேக்ரோபிராக்கியம் ஒகியோன் Macrobrachium ohione | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
துணைத்தொகுதி: | கிறஸ்டேசியா
|
வகுப்பு: | மலக்கோஸ்டிரக்கா
|
வரிசை: | |
உள்வரிசை: | கரிடியே
|
குடும்பம்: | |
பேரினம்: | |
இனம்: | மே. ஒகியோன்
|
இருசொற் பெயரீடு | |
மேக்ரோபிராக்கியம் ஒகியோன் எசு. ஐ. சுமித், 1874 | |
வேறு பெயர்கள் [1] | |
|
மேக்ரோபிராக்கியம் ஒகியோன் (Macrobrachium ohione), பொதுவாக ஓகியோ இறால் அல்லது ஓகியோ நதி இறால் என அழைக்கப்படுகிறது. இது மெக்சிகோ வளைகுடா மற்றும் வட அமெரிக்காவின் அத்திலாந்திக்குப் பெருங்கடல் வடிநிலம் முழுவதும் உள்ள ஆறுகளில் காணப்படும் நன்னீர் இறால் இனமாகும். இது வட அமெரிக்க இறால்களில் நன்கு அறியப்பட்ட நன்னீர் இறால் ஆகும்.[2] மேலும் இது பொதுவாக வணிக மீன்பிடித்தலுக்குத் தூண்டில் மீனாகப் பயன்படுத்தப்படுகிறது.[3]
விளக்கம்
தொகுமேக்ரோபிராக்கியம் ஒகியோன் சிறிய நீலப் புள்ளிகளுடன் வெளிர் சாம்பல் நிறத்தில் காணப்படும். இதன் உடல் நீளம் 10 cm (4 அங்) ஆகும். இதன் முதல் இரண்டு இணைக் கால்களில் நகங்கள் காணப்படுகின்றன. இரண்டாவது இணைக் கால் முதல் இணைக் கால் களைவிட பெரியது. தலைக்கூர்நீட்சி வளைந்து காணப்படும். இதில் 13 பற்கள் வரை காணப்படும்.[4]
பரவல்
தொகுஇவை வட அமெரிக்காவின் அத்திலாந்திக் கடற்கரையில் வட கரொலைனாவிலிருந்து புளோரிடா வரையிலும், மிசூரியின் தெற்கு முனையிலிருந்து லூசியானா வரை மேற்கு பகுதியிலும் இந்தச் சிற்றினம் காணப்படுகின்றது.[4] இதன் பொதுவான பெயர் ஓகையோ இறால் என இருந்தபோதிலும், இது ஓகையோ ஆற்றில் காணப்படுவதில்லை. 1930 வரை, இது ஓகையோ ஆற்றில் காணப்பட்டது. இந்தியானாவின் கேனல்டனில் எடுக்கப்பட்ட வகை மாதிரிகள் மற்றும் மிசிசிப்பி ஆற்றில் அதன் வரம்பு வடக்கே செயின்ட் லூயிஸ், மிசோரி வரை காணப்பட்டது. அணைகள், நீர்நிலைகளுக்கு இடையேயான நீர் பரிமாற்றம் மற்றும் பிற மனித நடவடிக்கைகள் ஆகியவை இதன் பரவல் குறைவதற்குக் காரணமாகக் கருதப்படுகிறது.[5]
மே 2001 இல், இல்லினாய்ஸின் ஜோப்பாவில் உள்ள ஓகையோ ஆற்றில் இரண்டு மாதிரிகள் கண்டுபிடிக்கப்பட்டன. இதன் மூலம் கடந்த 50 ஆண்டுகளில் முதல் முறையாக இந்த சிற்றினம் இதன் வரம்பிற்குத் திரும்புகின்றன அல்லது முந்தைய மாதிரி முறைகள் பயனற்றவை என்பதைத் தெரிவிக்கின்றது.[6]
இனப்பெருக்கம்
தொகுபிற மேக்ரோபிராக்கியம் சிற்றினங்களைப் போலவே, ஓகையோ இறால்களும் ஆம்பிட்ரோமசு வகையின ஆகும். இதன் இளம் உயிரிகள் வளர்வதற்கு உப்பு நீர் தேவை. உப்புநீரில் வளரும் இளம் உயிரிகள் பின்னர் நன்னீருக்குச் செல்கின்றன. அடைகாக்கும் பெண் இறால்கள் இளம் உயிரிகளின் பயண நேரத்தைக் குறைப்பதற்காக, முட்டைகள் பொரிக்கும் முன்னர் ஆற்றின் கழிமுக பகுதியினை நோக்கி நகரக்கூடும். 2008ஆம் ஆண்டு லூசியானா பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில், மே. ஒகியோன் இளம் உயிரிகள் நன்னீரில் ஐந்து நாட்கள் வரை உயிர்வாழும் திறன் கொண்டவை என்று கண்டறியப்பட்டது. இதற்குப் பிறகு, அவை உப்புநீரிற்குச் சென்று அடுத்த நிலைக்குச் செல்லும். இளம் உயிரிகளின் போக்கினை அணைகள் மற்றும் மனிதனால் அமைக்கப்பட்ட பிற தடைகள் தடுக்கின்றன. ஓகையோ நதி இறால் கிட்டத்தட்ட ஓகையோ ஆற்றில் இல்லாததற்கு முதன்மைக் காரணமாக இது இருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் இந்த ஆய்வின் மூலம் முடிவு செய்தனர்.[5]
மேற்கோள்கள்
தொகு- ↑ De Grave, Sammy (2011). "Macrobrachium ohione (Smith, 1874)". WoRMS. World Register of Marine Species. பார்க்கப்பட்ட நாள் January 12, 2012.
- ↑ "From the river to the sea and back again - amazing migrations of the river shrimp Macrobrachium ohione" (PDF). Lagniappe (Louisiana State University) 32 (3). March 1, 2008. http://www.seagrantfish.lsu.edu/pdfs/lagniappe/2008/03-01-2008.pdf.
- ↑ "From River to Sea and Back Again: Amphidromous migrations of the river shrimp Macrobrachium ohione". University of Louisiana at Lafayette. பார்க்கப்பட்ட நாள் April 16, 2010.
- ↑ 4.0 4.1 Wenner, Elizabeth. "Ohio Shrimp" (PDF). South Carolina Department of Natural Resources. Archived from the original (PDF) on மே 5, 2010. பார்க்கப்பட்ட நாள் April 16, 2010.
- ↑ 5.0 5.1 Rome, Nicholas E.; Conner, Sara L.; Bauer, Raymond T.. "Delivery of hatching larvae to estuaries by an amphidromous river shrimp: tests of hypotheses based on larval moulting and distribution" (PDF). Freshwater Biology 54 (9): 1924–1932. doi:10.1111/j.1365-2427.2009.02244.x. http://www.laseagrant.org/urop/Rome.pdf.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ Poly, William J.; Wetzel, James E. (2002). "The Ohio Shrimp, Macrobrachium ohione (Palaemonidae), in the Lower Ohio River of Illinois" (PDF). Transactions of the Illinois State Academy of Science 95 (1): 65–66. http://www.il-acad-sci.org/transactions_pdf_files/9507.pdf. பார்த்த நாள்: 2010-04-16.