சித்ரால் இராச்சியம்
சித்ரால் இராச்சியம் ('Chitral state) (உருது: چترال and ریاست چترال) 1947 இந்திய விடுதலைக்கு முன்னர் பிரித்தானிய இந்தியாவின் கீழிருந்த 562 சுதேச சமஸ்தானங்களில் ஒன்றாகும்.இதன் தலைநகரம் சித்ரால் நகரம் ஆகும். இந்த இராச்சியம் இந்து குஷ் மலையில் 7,708 m (25,289 ft) உயரத்தில் இருந்தது. இது தற்கால பாகித்தான் நாட்டின், ஆப்கானித்தான் எல்லைப்பகுதியில் அமைந்த கைபர் பக்துன்வா மாநிலத்தின் சித்ரால் மாவட்டப் பகுதிகளைக் கொண்டிருந்தது. இதன் ஆட்சியாளர்களுக்கு பிரித்தானிய இந்தியாவின் அரசு, 11 துப்பாக்கிக் குண்டுகள் முழுங்கி மரியாதை செய்தனர்.
ریاست چترال | |||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|
1320–1969 | |||||||||
நிலை | சுதேச சமஸ்தானம் | ||||||||
தலைநகரம் | சித்ரால் | ||||||||
அரசாங்கம் | முடியாட்சி | ||||||||
மெஹ்தர் | |||||||||
வரலாறு | |||||||||
• தொடக்கம் | 1320 | ||||||||
• ராயீஸ் வம்சம் | 1320 | ||||||||
• கடூர் வம்சம் | 1571 | ||||||||
1885 | |||||||||
1919 | |||||||||
1969 | |||||||||
| |||||||||
தற்போதைய பகுதிகள் | சித்ரால் மாவட்ட்ம், கைபர் பக்துன்வா மாகாணம், பாகிஸ்தான் | ||||||||
சித்ரால் | |||||
சுதேச சமஸ்தானம் பாகிஸ்தான் | |||||
| |||||
கொடி | |||||
பாகிஸ்தானில் சித்ரால் இராச்சியத்தின் அமைவிடம் | |||||
தலைநகரம் | சித்ரால் | ||||
அரசு | முடியாட்சி | ||||
வரலாறு | |||||
• | நிறுவப்பட்டது | 14 ஆகஸ்டு 1947 | |||
• | Disestablished | 28 சூலை 1969 |
வரலாறு
தொகு1320-இல் ராயீஸ் வம்சத்தவர்களால் நிறுவப்பட்ட சித்ரால் இராச்சியம், பின்னர் 1571-ஆம் ஆண்டு முதல் கடூர் வம்சத்தவர்களால் ஆளப்பட்டது. 1885-ஆம் ஆண்டில், பிரித்தானிய இந்தியாவின் ஆட்சியாளர்கள் கொண்டுவந்த துணைப்படைத் திட்டத்தை ஏற்ற சித்ரால் இராச்சியத்தினர், ஆண்டுதோறும் ஆங்கிலேயர்களுக்கு திறை செலுத்தி சுதேச சமஸ்தானமாக ஆட்சி செய்தனர். இது பிரித்தானிய இந்தியாவின் வடமேற்கு எல்லைப்புற மாகாணத்தில் செயல்பட்டது. சித்ரால் இராச்சிய மன்னர்களுக்கு பிரித்தானிய இந்தியா அரசு, 11 துப்பாக்கிக் குண்டுகள் முழுங்கி மரியாதை செய்தனர். 1947-இல் இந்திய விடுதலைக்குப் பின்னர், 1969-ஆம் ஆண்டில் சித்திரால் இராச்சியம் மேற்கு பாக்கித்தானில் உள்ள வடமேற்கு எல்லைப்புற மாகாணத்தில் அமைந்த சித்ரால் மாவட்டத்துடன் இணைக்கப்பட்டது. பின்னர் கைபர் பக்துன்வா மாகாணத்தில் சித்திரால் மாவட்டம் இணைக்கப்பட்ட பின்னர் 2018-ஆம் ஆண்டில் சித்ரால் மாவட்டம் மேல் சித்ரால் மாவட்டம் மற்றும் கீழ் சித்ரால் மாவட்டம் என இரண்டாகப் பிரிக்கப்பட்டது.
ஆட்சியாளர்கள்
தொகுகதோர் வம்ச ஆட்சியாளர்கள்:
- இரண்டாம் ஷா அப்சல் 1838
- மூன்றாம் முக்தார்ரம் ஷா கடோர் 1854
- அமானுல் முல்க் 1856
- அப்சல் உல் முல்க் 1892
- செர் அப்சல் 1892
- நிஜாம் உல் முல்க் மெக்தர் 1892
- அமீர் உல் முல்க் 1895
- சூஜா உல் முல்க் 1895
- நசீர் உல் முல்க் 1936
- முசாபர் உல் முல்க் 1943
- சையிப் உர் ரகுமான் 1949
- முகமது சையிப் உல் முல்க் நசீர் 1954
வடமேற்கு எல்லைப் பகுதி மன்னராட்சி அரசுகள்
தொகு- அம்பு இராச்சியம் (Amb State)
- தீர் இராச்சியம் (State of Dir)
- புல்ரா இராச்சியம (Phulra princely state)
இதனையும் காண்க
தொகு- வடமேற்கு எல்லைப்புற மாகாணம் (1901-2010)
- கைபர் பக்துன்வா மாகாணம்
- சித்ரால் தேசிய பூங்கா
- சித்ரால் அருங்காட்சியகம்
- துணைப்படைத் திட்டம்
- சுதேச சமஸ்தானம்
- இந்திய மன்னராட்சி அரசுகளின் பட்டியல்
- சுதேச சமஸ்தானங்களின் இணைப்பு ஒப்பந்தம்
- பிரித்தானிய இந்தியாவின் வணக்கத்திற்குரிய சுதேச சமஸ்தானங்கள்
- தி இம்பீரியல் கெசட்டியர் ஆப் இந்தியா
மேற்கோள்கள்
தொகுமேலும் படிக்க
தொகு- Pastakia, Firuza (2004). Chitral: A Study in Statecraft (1320–1969) (PDF). Peshawar, Pakistan: IUCN Pakistan. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9789698141691. இணையக் கணினி நூலக மைய எண் 61520660. பார்க்கப்பட்ட நாள் 2016-10-05.
- History of Chitral: An Outline
- Tarikh-e-Chitral
- Chitral States Judicial System
- Tribes of the Hindoo Koosh by John Biddulph
வெளி இணைப்புகள்
தொகு