சித்ரால் மாவட்டம்
சித்ரால் மாவட்டம் (Chitral District (உருது: ضِلع چترال) பாகிஸ்தான் நாட்டின் வடமேற்கில் அமைந்த கைபர் பக்துன்வா மாகாணத்தில் அமைந்துள்ளது. இதன் நிர்வாகத் தலைமையிட நகரம் சித்ரால் ஆகும். இம்மாவட்டம் 14,850 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டது. இம்மாவட்டத்தில் பேசப்படும் முக்கிய மொழிகள்உருது, பஷ்தூ மொழி,கோவார் மற்றும் கலாஷ் மொழிகள் ஆகும். 2017 பாகிஸ்தான் மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி, இம்மாவட்டத்தின் மொத்த மக்கள்தொகை 4,47,362 ஆகும்.
சித்ரால் மாவட்டம்
ضلع چترال | |
---|---|
மாவட்டம் | |
பாகிஸ்தானின் வடமேற்கில் உள்ள கைபர் பக்துன்வா மாகாணத்தில் அமைந்த சித்ரால் மாவட்டத்தின் அமைவிடம் | |
நாடு | பாக்கித்தான் |
மாகாணம் | கைபர் பக்துன்வா |
தலைமையிடம் | சித்ரால் |
நிறுவிய ஆண்டு | 1970 |
பரப்பளவு | |
• மாவட்டம் | 14,850 km2 (5,730 sq mi) |
மக்கள்தொகை | |
• மாவட்டம் | 4,47,362 |
• அடர்த்தி | 30/km2 (78/sq mi) |
• நகர்ப்புறம் | 49,794 |
• நாட்டுப்புறம் | 3,97,568 |
நேர வலயம் | ஒசநே+5 (பாகிஸ்தான் சீர் நேரம்) |
வருவாய் வட்டங்கள் | 6 |
இணையதளம் | www.khyberpakhtunkhwa.gov.pk |
மாவட்ட எல்லைகள்
தொகுசித்ரால் மாவட்டத்தின் கிழக்கில் கில்ஜித்-பல்டிஸ்தான் பகுதியும், வடக்கு மற்றும் மேற்கில் ஆப்கானிஸ்தானின் குனர் மாகாணம், படாக்சான் மாகாணம் மற்றும் நூரிஸ்தான் மாகாணமும், தெற்கில் கைபர் பக்துன்வா மாகாணத்தின் சுவாத் மாவட்டம் மற்றும் தீர் மாவட்டமும் எல்லைகளாக உள்ளது.[2]
மாவட்டப் பிரிவினை
தொகுநிர்வாக வசதிக்காக இம்மாவட்டம், 2018-இல் மேல் சித்ரால் மாவட்டம் மற்றும் கீழ் சித்ரால் மாவட்டம் என இரண்டாகப் பிரிக்கப்பட்டது.[3]
வரலாறு
தொகுசித்ரால் நகரத்தில் கிமு கி மு 1600 முதல் கி மு 500 முடிய காந்தார கல்லறை பண்பாடு நிலவியது. மேலும் சிந்துவெளி நாகரிகம் முதல் பாரசீக ஆட்சி காலங்களில் சித்ரால் நகரம் முக்கிய இடம் வகித்தது.[4][5]
மகாபாரதம் இதிகாசத்தில் கூறப்படும் தராதரர்கள் இப்பகுதியில் வாழ்ந்த மக்கள் ஆவார்.[6] சித்ரால் நகரம் காம்போஜ நாட்டின் முக்கியப் பகுதியாக இருந்தது என இந்துப் புராணங்கள் மற்றும் இதிகாசங்களில் கூறப்பட்டுள்ளது.[7]
கிமு 550 முதல் கிமு 330 முடிய சித்ரால் பகுதி, பாரசீக அகாமனிசியப் பேரரசின் தூர-கிழக்குப் பகுதியாக இருந்தது. சித்ராலி மொழி மற்றும் பண்பாடு பாரசீக அவெஸ்தான் மொழி மற்றும் சமஸ்கிருத மொழிகளில் அதிக தாக்கம் கொண்டிருந்தது.[8] கிபி 3ஆம் நூற்றாண்டில் கனிஷ்கர் சித்ரால் பகுதியை குசானப் பேரரசில் இணைத்தார். கனிஷ்கரின் ஆட்சியில் சித்ரால் பகுதியில் பல பௌத்த விகாரைகள், தூபிகள் நிறுவப்பட்டது.[9]
இப்பகுதியில் உள்ள பாறைக் கல்வெட்டுக் குறிப்புகளின் படி, சித்ரால் பகுதியானது கிபி 850 முதல் கிபி 1026 முடிய இந்து ஷாகி வம்சத்தின் 4வது மன்னர் ஆட்சியில் இருந்துள்ளது.[10]
கிபி 1571 முதல் 1947 முடிய சித்ரால் கட்டூர் வம்சத்தின் மன்னராட்சியில் இருந்தது.[11] 1947-முதல் சித்ரால் நகரம், பாகிஸ்தான் நாட்டின் சித்ரால் மாவட்டத்தின் தலைமையிடமாக உள்ளது.[12]
இம்மாவட்டம் கிபி 1895 வரை 1896 முதல் மன்னராட்சிப் பகுதியாக இருந்தது. பின்னர் பிரித்தானிய இந்தியாவிற்குட்பட்ட, சுதேசி சமஸ்தானமாக இருந்தது. ஆகஸ்டு 1947-இல் பாகிஸ்தான் நாடு உருவான போது பாகிஸ்தானுடன் இணைக்கப்பட்டது.[13]
நிர்வாகம்
தொகுஇம்மாவட்டம் சித்ரால் வருவாய் வட்டம் மற்றும் மாஸ்து வருவாய் வட்டம் என 2 வருவாய் வட்டங்களாகவும், 24 ஒன்றியக் குழுக்களாகவும் பிரிக்கப்பட்டுள்ளது.[14][15][16]
சுற்றுலா
தொகுஇதனையும் காண்க
தொகுகைபர் பக்துன்வா மாகாணத்தின் மாவட்டங்கள்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "DISTRICT AND TEHSIL LEVEL POPULATION SUMMARY WITH REGION BREAKUP: KHYBER PAKHTUNKHWA" (PDF). Pakistan Bureau of Statistics. 2018-01-03. Archived from the original (PDF) on 24 April 2018. பார்க்கப்பட்ட நாள் 2018-04-23.
- ↑ Cutherell, Danny. "Governance and Militancy in Pakistan's Chitral district" (PDF). Center for Strategic and International Studies. Archived from the original (PDF) on 2013-05-18. பார்க்கப்பட்ட நாள் 2021-02-16.
- ↑ "Upper Chitral gets status of separate district". dawn.com. 21 November 2018. https://www.dawn.com/news/1446854.
- ↑ Schug, Gwen Robbins; Walimbe, Subhash R. (2016-04-13). A Companion to South Asia in the Past (in ஆங்கிலம்). John Wiley & Sons. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-119-05547-1.
- ↑ "Mera Chitral: History of chitral". Mera Chitral. பார்க்கப்பட்ட நாள் 2020-02-01.
- ↑ Saklani, Dinesh
Under the Kushans, many Buddhist monuments were built around the area, mainly Buddhist stupas and monasteries. The Kushans also patronised Buddhist art, some of the finest examples of the image of Buddha were produced in the region under the Kushan rule.Prasad (1998). Ancient Communities of the Himalaya. Indus Publishing. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-7387-090-3.
{{cite book}}
: line feed character in|first=
at position 8 (help)CS1 maint: multiple names: authors list (link) - ↑ Proceedings and Transactions of the ... All-India Oriental Conference ... etc. 1933.
- ↑ Notes on Chitral. L.D. Scott. 1903.
- ↑ Gurdon's Report on Chitral. Gurdon. 1903.
- ↑ Khan, Hussain (June 2003). Chronicles of Early Janjuas. iUniverse. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-595-28096-4.
- ↑ "Chitral, a Study in Statecraft" (PDF). IUCN. பார்க்கப்பட்ட நாள் 2015-11-06.
- ↑ Osella, Filippo; Soares, Benjamin (2010). Islam, Politics, Anthropology. John Wiley & Sons. p. 58. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4443-2441-9.
- ↑ Marsden, Magnus (2010). "A tour not so grand: mobile Muslims in northern Pakistan". In Osella; Filippo; Soares; Benjamin (eds.). Islam, Politics, Anthropology. Chichester, England: Royal Anthropological Institute by Wiley-Blackwell. pp. 57–75, page 58. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4443-3295-7.
- ↑ Chitral National Reconstruction Bureau website பரணிடப்பட்டது 28 ஏப்பிரல் 2012 at the வந்தவழி இயந்திரம்
- ↑ "Pakistan: North West Frontier Province: District, Tehsil and Union Code Reference Map (MA518-pak-NWFP UCs A3-v01)" (PDF). Pakistan: United Nations Office for the Coordination of Humanitarian Affairs (OCHA). 1 July 2009. Archived from the original (PDF) on 13 November 2013.
- ↑ "List of Tehsils/Talukas with Respect to Their Districts". Statistics Division, Ministry of Economic Affairs and Statistics, Government of Pakistan. Archived from the original on 5 March 2010. பார்க்கப்பட்ட நாள் 16 பிப்ரவரி 2021.
{{cite web}}
: Check date values in:|access-date=
(help); Unknown parameter|=
ignored (help)