காந்தார கல்லறை பண்பாடு

காந்தார கல்லறை பண்பாடு அல்லது சுவத் பண்பாடு (Gandhara grave culture or Swat culture) கி மு 1600 முதல் கி மு 500 முடிய தற்கால பாகிஸ்தான் மற்றும் ஆப்கானித்தான் நாட்டின் காந்தாரம் மற்றும் சுவத் பகுதிகளில் செழிப்பாக விளங்கியது. இப்பகுதிகளில் இந்தோ ஆரிய மக்கள் குடியேறிய அடையாளங்களை, இப்பகுதியின் உள்ளூர் கலாச்சாரத் தொடர்ச்சியின் வாயிலாக அறியமுடிகிறது.

ரிக் வேத கால ஆறுகளுடன் (பழுப்பு நிறம்), சிந்து ஆற்றின் வடமேற்கில் காந்தாரம் மற்றும் சுவத்தில் கல்லறைக் கலாச்சாரப் பகுதிகள் (இளம் சிவப்பு நிறம்)
நடு அசியாவின் அன்ட்ரோனோவோ பண்பாட்டுப் பகுதிகள் (சிவப்பு நிறம்); அதன் தென் கிழக்கில் இந்தோ ஆரிய மக்களின் குடியேற்றப் பகுதிகள்
காந்தர கல்லறைப் பண்பாட்டு காலத்திய முதுமக்கள் தாழி

அமைவிடம் & இயல்புகள்

தொகு

தற்கால ஆப்கானித்தான் நாட்டின் காந்தாரம் மற்றும் பாகிஸ்தான் நாட்டின் கீழ் சுவத் சமவெளி மற்றும் பஞ்சகோரா சமவெளிகளும், தென்கிழக்கில் தக்சசீலா, தெற்கில் கோமல் ஆற்றங்கரை வரையிலும் துவக்க கால சுவத் கலாச்சாரம் எனப்படும் காந்தாரக் கல்லறை கலாச்சாரம் பரவியிருந்தது.

சுடுமண்னால் ஆன விலங்கு வடிவங்கள், ஆடை அணிகலன்கள் மற்றும் உணவு தானியங்களை இறந்தவர்களின் சடலங்களை மட்பாண்டங்களில் வைத்து புதைத்து வைத்திருந்தனர். இங்குள்ள கல்றைகளில் கிடைத்த இம்மட்பாண்டங்களில் புள்ளிகளால் வடிவமைக்கப்பட்ட பிற பொருட்களும் மற்றும் ஒரு குதிரைக் கல்லறையும் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இந்தோ ஆரியர்களின் வருகை

தொகு

சுவத்தில் கண்டெடுக்கப்பட்ட காந்தார கல்லறை கலாச்சார காலத்தில் பயன்படுத்திய மட்பாண்டங்கள், தெற்கு நடு ஆசியாவிலும், பாரசீகத்தின் மேட்டு நிலங்களிலும் பயன்படுத்திய மட்பாண்டங்களுடன் சமகாலத்தியவை என கண்டறியப்பட்டுள்ளது. மேலும் துவக்க கால இந்தோ ஆரிய மக்கள் பேசிய இந்தோ ஆரிய மொழிகளையும், அவர்களின் குடியேற்றத்தையும் ஆராயும் போது, இந்தியத் துணைகண்டத்தில் [1], ஆரியர்கள் நடு ஆசியாவின் பாக்திரியா மற்றும் மார்கியானா பகுதிகளிலிருந்து குடியேறியவர்களாக தொடர்புறுத்தப்படுகிறது.

வரலாற்று ஆய்வாளர் கோச்சரின் கூற்றுபடி, சிந்துவெளி நாகரீக காலத்திற்குப் பின்னர் மீதமிருந்த உள்ளூர் மக்களுடன் இந்தோ ஆரியர்கள் திருமண உறவுகள் வைத்துக் கொண்டதன் மூலம் இந்தோ ஆரியரிகளின் கலாச்சாரம், சிந்துவெளி நாகரீக பண்பாட்டுடன் இணைந்து வேத கால கலாச்சாரம் வளர்ந்ததாகக் கருதுகிறார். [1]

கலாச்சாரத் தொடர்ச்சி

தொகு

பாக்திரியாவின் வெங்கல காலத்திய கலாச்சாரமும், காந்தாரக் கல்லறை கலாச்சாரமும் ஒன்றல்ல என வரலாற்று அறிஞர் அஸ்கோ பார்போலா வாதிடுகிறார்.[2]

காந்தார கல்லறைக் கலாசாரமும் அதன் புதிய பங்களிப்புகளும் அதன் முற்காலத்திய கலாசாரத் தொடர்ச்சியே ஆகும் என துசா எனும் வரலாற்று ஆய்வாளர் கருதுகிறார்.[3] அஸ்கோ பார்போல காந்தார கலாச்சாரத்திலும், துவக்ககால ஹரப்பா (கி மு 3200–2600) கலாச்சாரத்திலும் பயன்படுத்திய மட்பாண்டங்கள், நகைகள், முத்திரைகள், விலங்குகளின் எலும்புகள், ஓவியங்கள் முதலியவைகள் ஒன்றாக காணப்படுவதாகக் கூறுகிறார். மேலும் இந்தியத் துணைக்கண்டம், நடு ஆசியா மற்றும் பாரசீக பீடபூமிகளுக்கிடையே தொடர் வணிகம் நடைபெற்றதாக கூறுகிறார். [4]

உள்ளூர் கலாச்சார தொடர்ச்சி தொடர்பான கருத்துகளை முன்னிறுத்தும் கென்னடி என்ற அறிஞர் காந்தாரக் கல்லறை கலாசார காலத்திய மக்கள், சுவத் பகுதிக்கு தெற்கில் இருந்த மெஹெர்கர் மக்களுடன் உயிரியல் ரீதியான தொடர்பு கொண்டவர்கள் என வாதிடுகிறார்.[5] கென்னடியின் கூற்றை மறுத்து, யலினா இ. குஷ்மினியா என்பவர், காந்தார கல்லறைக் கலாசாரத்தின் எச்சங்கள், சில நடு ஆசியா பகுதி மக்களின் பண்பாட்டுடன் ஒத்து வருதாக கருதுகிறார்.[6]

காந்தாரக் கல்லறைக் கலாச்சாரம், தற்கால கிர்கிஸ்தானின் பெஷ்கண்ட் [7] மற்றும் தஜிக்கிஸ்தானின், வாக்ஸ் [7] கலாச்சாரங்களுடன் தொடர்புடைவை அல்ல அண்டோனினி , [8] ஸ்டாக்குல் மற்றும் பிற அறிஞர்களும் வாதிடுகிறார்கள். தொல்லியல் அகழ்வாய்வு, மற்றும் கல்லறை ஆய்வுகளுக்கு எதிராக, காந்தாராக் கலாச்சாரமும், நடு ஆசியாவின் பெஷ்கண்ட் மற்றும் வாக்ஸ் கலாசாரங்களும் வேறானவை என யலனா யெபிமொவ்னா குஷ்மொவ்னா (Yelena Yefimovna Kuzmina) என்ற அறிஞர் வாதிடுகிறார்.[9]

இதனையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 Kochhar 2000, ப. 185-186.
  2. Parpola 1993, ப. 54.
  3. Tusa 1977, ப. 690-692.
  4. Asko Parpola, Study of the Indus Script, May 2005 p. 2f.
  5. Kenneth A.R. Kennedy. 2000, God-Apes and Fossil Men: Palaeoanthropology of South Asia Ann Arbor: University of Michigan Press. p. 339.
  6. "The origin of the Indo-iranians, volume 3" Elena E. Kuz'mina p. 318
  7. 7.0 7.1 Bryant 2001.
  8. Antonini 1973.
  9. E. Kuz'mina, "The origin of the Indo-Iranians, volume 3" (2007)

ஆதார நூற்பட்டியல்

தொகு
  • Bryant, Edwin (2001), The Quest for the Origins of Vedic Culture, Oxford University Press, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-19-513777-9
  • Kochhar, Rajesh (2000), The Vedic People: Their History and Geography, Sangam Books {{citation}}: Invalid |ref=harv (help)
  • Müller-Karpe, Hermann (1983), Jungbronzezeitlich-früheisenzeitliche Gräberfelder der Swat-Kultur in Nord-Pakistan, Beck, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 3406301541
  • Parpola, Asko (1993), "Margiana and the Aryan Problem", International Association for the Study of the Cultures of Central Asia Information Bulletin 19:41-62
  • Tusa, Sebastiano (1977), "The Swat Valley in the 2nd and 1st Millennia BC: A Question of Marginality", South Asian Archaeology 6:675-695

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=காந்தார_கல்லறை_பண்பாடு&oldid=4043926" இலிருந்து மீள்விக்கப்பட்டது