காவி நிற மட்பாண்டப் பண்பாடு

காவி நிற மட்பாண்டப் பண்பாடு (Ochre Coloured Pottery culture (OCP) வெண்கலக் காலத்தின் கிமு 2,000 ஆண்டில், கங்கைச் சமவெளியில், தற்கால பாகிஸ்தான் பஞ்சாப் இந்தியப் பஞ்சாப், இராஜஸ்தான் மற்றும் மேற்கு உத்தரப் பிரதேசம் பகுதிகளில் அறியப்பட்டது.[1] காவி நிற மட்பாண்டப் பண்பாடு, துவக்க வேதப் பண்பாட்டுடன் தொடர்புடையது எனக்கருதப்படுகிறது.

இந்தோ-ஈரானியர்களின் புலப்பெயர்கள் தொடர்புடைய தொல்லியல் பண்பாடுகள்
இரு காளைகளைப் பூட்டிய ஏரை ஓட்டும் பெண்ணின் செப்புச் சிற்பம், கௌசாம்பி, கிமு 2000 - 1750


இக்கால மட்பாண்டங்கள் பெரும்பாலும் காவி நிறத்தில் இருந்தது. சில நேரங்களில் கறுப்பு வர்ணம் பூசப்பட்ட பட்டைகள் மற்றும் வடிவங்களுடன் அலங்கரிக்கப்பட்டிருந்தது.

காவி நிற மட்பாண்டப் பண்பாட்டுக் காலம், செப்புக் கருவிகள் மற்றும் கலைப் பொருட்களுடன் மிகவும் தொடர்புடைய செப்புக் குவியல் பண்பாட்டுடன் மிகுந்த தொடர்புடையது.

காவிநிறப் பண்பாட்டுக் காலத்தில், நெல், பார்லி, கோதுமை, பருப்பு வேளாண்மை செய்தல் மற்றும் வீட்டு விலங்குகளான ஆடு, மாடுகள் மற்றும் குதிரைகளை மேய்த்தல், நாய்களை காவல் விலங்காக பராமரித்த கிராமிய நாகரீகம் ஆகும். காவி நிற பண்பாட்டு காலத்திய கிராமப்புற வீடுகள் வேலித்தட்டி மற்றும் உடைந்துபோன பொருட்களால் மூடப்பட்டிருந்தன. செம்பு, சுடுமண்ணால் செய்யப்பட்ட விலங்கு மற்றும் மனித உருவ கலைப்பொருட்கள் வீடுகளை அலங்கரித்தன.[2]

சிந்துவெளியின் பிந்தைய அரப்பாவிற்கும், காவி நிற மண்பாண்ட பண்பாட்டுக் களத்திற்கும் எந்தவித தொடர்பும் இல்லை எனத் தொல்லியல் அறிஞர்கள் கருதுகிறார்கள். [3]

காவி நிற மட்பாண்டப் பண்பாடு, வட இந்தியாவின் செப்புக் காலத்தின் முடிவிலும், இரும்புக் காலத்தின் கருப்பு மற்றும் சிவப்பு மட்பாண்டப் பண்பாடு மற்றும் சாம்பல் வண்ண ஓவியம் தீட்டப்பட்ட மட்பாண்டப் பண்பாட்டிற்கும் இடையேயும் விளங்கியது.

இதனையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. Upinder Singh (2008), A History of Ancient and Early Medieval India From the Stone Age to the 12th Century, p.216
  2. U. Singh (2008), pp.216-218
  3. U. Singh (2008), pp.216-217
  • Yule, P. (1985), Metalwork of the Bronze Age in India, Munich: C.H. Beck, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 3-406-30440-0
  • Yule, P.; Hauptmann, A.; Hughes, M. (1992) [1989], The Copper Hoards of the Indian Subcontinent: Preliminaries for an Interpretation, Jahrbuch des Römisch-Germanischen Zentralmuseums Mainz, pp. 36, 193–275, பன்னாட்டுத் தர தொடர் எண் 0076-2741
  • Gupta, S.P. (ed.) (1995), The lost Sarasvati and the Indus Civilization, Jodhpur: Kusumanjali Prakashan {{citation}}: |first= has generic name (help)
  • Sharma, Deo Prakash (2002), Newly Discovered Copper Hoard, Weapons of South Asia (C. 2800-1500 B.C.), Delhi: Bharatiya Kala Prakashan
  • Yule, Paul (2014), A New Prehistoric Anthropomorphic Figure from the Sharqiyah, Oman, in: ‘My Life is like the Summer Rose’ Maurizio Tosi e l’Archeologia come modo de vivere, Papers in Honour of Maurizio Tosi on his 70th Birthday, Oxford: BAR Intern. Series 2690