கல்லறை எச் கலாச்சாரம்

கல்லறை எச் கலாச்சாரம் (Cemetery H culture) தற்கால இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளின் பஞ்சாப் மற்றும் வடமேற்கு எல்லைப்புற மாகாணப் பகுதிகளில் கி மு 1900 முதல் கி மு 1300 வரை செழித்திருந்த வெண்கல காலத்தை சேர்ந்த கலாச்சாரம் ஆகும். [1] கல்லறை எச் கலாச்சாரம், சிந்துவெளி, ஹரப்பா மற்றும் ஆரியக் குடியேற்றங்களுக்கு பிந்தியதாகும்.

ரிக் வேத கால ஆறுகளும்; பெயர்களும்; சுவத் கலாசாரம் மற்றும் கல்லறை எச் கலாச்சாரப் பகுதிகளின் பரப்புகள் பழுப்பு நிறத்தில் குறிக்கப்பட்டுள்ளது
கல்லறை எச் கலாச்சாரக் காலத்திய மட்பாண்டங்கள்

பெயர்க் காரணம்

தொகு

அரப்பாவில் எச் என்று குறித்த பகுதியில் கி மு 1900 – 1300க்கு இடைப்பட்ட காலத்திய கல்லறைகளை அகழ்வாராய்ச்சி செய்த போது அறியப்பட்டதால் இதற்கு கல்லறை எச் கலாச்சாரம் பெயராயிற்று.

கல்லறை எச் கலாச்சாரத்தின் சிறப்பம்சங்கள்

தொகு

எச் கல்லறைகளை அகழ்வாராய்ச்சி செய்த போது கிடைத்த மட்பாண்டங்களில் சூரியன், நட்சத்திரங்கள் மற்றும் கலைமான், மயில் போன்ற விலங்குகள் செந்நிற வர்ணத்தால் தீட்டப்பட்டிருந்தது. மேலும் கல்லறைகளில் கிடைத்த அணிகலன்கள், தானியங்களை ஆய்வு செய்த போது, அப்பகுதியில் வாழ்ந்த மக்களின் கலாச்சாரம் மற்றும் நாகரீகம் அறியப்பட்டது. எச் கல்லறை கலாச்சாரப் பகுதிகளில் நெல் முக்கிய பயிராகும். களிமண்னால் ஆன செங்கல்கள் பயன்படுத்தப்பட்டது. இறந்தவர்களின் சடலங்கள் மரப்பெட்டிகளில் அடக்கம் செய்யப்பட்டிருந்தது. [2]

இதனையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. M Rafiq Mughal Lahore Museum Bulletin, off Print, vol.III, No.2, Jul-Dec. 1990 [1] பரணிடப்பட்டது 2015-06-26 at the வந்தவழி இயந்திரம்
  2. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2009-10-30. பார்க்கப்பட்ட நாள் 2016-10-11. {{cite web}}: Unknown parameter |= ignored (help)

வெளி இணைப்புகள்

தொகு

ஆதாரங்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=கல்லறை_எச்_கலாச்சாரம்&oldid=4057352" இலிருந்து மீள்விக்கப்பட்டது