சினி ஏரி

மலேசியா பகாங் மாநிலத்தில் ஒரு நன்னீர் ஏரி

சினி ஏரி (மலாய்: Tasik Chini; ஆங்கிலம்: Chini Lake); என்பது மலேசியா, பகாங் மாநிலத்தில், பெக்கான் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு நன்னீர் ஏரி. 12 சின்ன ஏரிகளைக் கொண்ட சினி ஏரி, தீபகற்ப மலேசியாவில் இரண்டாவது பெரிய நன்னீர் ஏரியாகும்[1]

சினி ஏரி
சினி ஏரி is located in மலேசியா
சினி ஏரி
சினி ஏரி
அமைவிடம்பெக்கான், பகாங், மலேசியா
ஆள்கூறுகள்3°26′N 102°55′E / 3.433°N 102.917°E / 3.433; 102.917
பூர்வீக பெயர்Chini Lake Error {{native name checker}}: parameter value is malformed (help)
முதன்மை வெளியேற்றம்சினி ஆறு
வடிநில நாடுகள்மலேசியா
மேற்பரப்பளவு12,565 ஏக்கர்கள் (5,085 ha)

பகாங் மாநிலத் தலைநகரான குவாந்தான் நகரில் இருந்து 85 கி.மீ. தொலைவில் உள்ளது. சினி ஏரி ஒரு பண்டைய கெமர் நகரத்தின் தளமாக இருக்கலாம் என்று வரலாற்று ஆசிரியர்கள் சிலர் நம்புகின்றனர்.[2]

தீபகற்ப மலேசியாவின் கிழக்குக் கரை மலைத் தொடரில் சினி ஏரி அமைந்து உள்ளது. இதன் சகோதர ஏரி என்று அழைக்கப்படும் பெரா ஏரி; சினி ஏரியில் இருந்து 50 கி.மீ. தொலைவில் உள்ளது.[1]

அமைவு தொகு

சினி ஏரியில் இருந்து வெளியேறும் சினி ஆறு; சில கிலோ மீட்டர்கள் கடந்து பகாங் ஆற்றில் கலக்கிறது.

கோடைக் காலங்களில் ஏரியின் ஆழத்தை பராமரிக்க சினி ஆற்றில் அணைகள் கட்டப்பட்டன. இருப்பினும், இந்த அணைகள் ஏரியின் இயற்கைச் சூழலை சீர்குலைக்கின்றன. உயர்ந்த நீர்மட்டம் காரணமாக அதன் கரையில் உள்ள மரங்கள் இறந்து விடுகின்றன.

பாரம்பரிய வழிகளில் பழங்குடியினர் தொகு

சினி ஏரி, தீபகற்ப மலேசியாவில் உள்ள யுனெஸ்கோ உயிர்க்கோள நிலைத் தளங்களில் (UNESCO Biosphere Reserve) ஒன்றாகும். மற்றொன்று கிழக்கு மலேசியாவில் உள்ள குரோக்கர் தேசியப் பூங்கா (Crocker Range National Park) ஆகும்.[3]

ஏரியின் கரைகளில், குறிப்பாக கம்போங் குமும் (Kampung Gumum) எனும் கிராமத்தில் ஜக்குன் பழங்குடியினர் அதிக அளவில் உள்ளனர். அவர்கள் இன்னும் தங்கள் பழைய பாரம்பரிய வழிகளில் வாழ்கிறார்கள். இவர்களிடம் இருந்து மர வேலைப்பாட்டுக் கைவினைப் பொருட்களும் மற்றும் ஊதுகுழல்களும் கிடைக்கின்றன.[2]

தாவரங்கள் - விலங்கினங்கள் தொகு

சினி ஏரி; 138 வகையான தாவரங்கள், 300 வகையான உயிரினங்கள், மற்றும் 144 வகையான நன்னீர் மீன்கள் ஆகியவற்றுக்குத் தாயகமாக விளங்குகிறது. இந்த ஏரி பன்முகப்படுத்தப்பட்ட பசுமையான வெப்பமண்டல வனப் பகுதியை கொண்டுள்ளது.

ஆகஸ்டு மற்றும் செப்டம்பர் மாதங்களுக்கு இடையில், ஆயிரக் கணக்கான வெள்ளை மற்றும் இளஞ்சிவப்பு தாமரை மலர்களுடன் மிதக்கும் ஒரு தோட்டமாகவே இந்த ஏரி மாறி விடுகிறது.

மாசுபடும் சுற்றுச்சூழல் தொகு

சினி ஏரியின் கரையில் வசிக்கும் ஒராங் அஸ்லி பழங்குடி மக்கள், ஏரி மாசுபட்டு வருவதாகப் புகார் செய்கின்றனர்.[4] ஒராங் அஸ்லி கிராமத்தின் சமூகத் தலைவர் தோக் பத்தின் அவாங் அலோக் (Tok Batin Awang Alok) கூறுகையில்: மரம் வெட்டுதல் மற்றும் தாது சுரங்க நடவடிக்கைகள் மாசுபாட்டை உருவாக்குகின்றன; மற்றும் உள்ளூர்வாசிகளுக்குப் பிரச்சினைகளை ஏற்படுத்துகின்றன என்று கூறுகிறார்.[5]

ஏரியில் குளிக்கும் குழந்தைகளுக்கு அரிப்பு ஏற்படுகிறது. ஏரியில் பிடிக்கப்படும் மீன்களும் சாப்பிட முடியாத நிலையில் உள்ளன.

ஒராங் அஸ்லி மக்கள் தொகு

ஒராங் அஸ்லி மக்கள் பாரம்பரிய மருத்துவத்தில் பயன்படுத்தப்படும் வேர்களைச் சேகரிக்க அந்தப் பகுதிகளுக்கு செல்ல முடியாத நிலை; அத்துடன் அந்தப் பகுதிகள் சுரங்கத் தொழில்களுகாக மூடப்பட்டு உள்ளன எனும் புகார்களும் வெளிவருகின்றன.[4]

காட்சியகம் தொகு

மேற்கோள்கள் தொகு

மேலும் காண்க தொகு

மலேசிய ஏரிகளின் பட்டியல்

"https://ta.wikipedia.org/w/index.php?title=சினி_ஏரி&oldid=3428047" இருந்து மீள்விக்கப்பட்டது