சின்ன புனல்வாசல்

சேலம் மாவட்டத்தில் உள்ள சிற்றூர்

சின்ன புனல்வாசல் ( Chinnapunalvasal ) என்பது இந்திய ஒன்றியம், தமிழ்நாட்டின், சேலம் மாவட்டம், தலைவாசல் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட ஒரு சிற்றூர் ஆகும். இது புனல்வாசல் ஊராட்சிக்கு உட்பட்டது.

சின்ன புனல்வாசல்
சிற்றூர்
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்சேலம்
மொழிகள்
 • அதிகாரப்பூர்வமாகதமிழ்
நேர வலயம்ஒசநே+5:30 (இசீநே)
அஞ்சல் குறியீட்டு எண்
636116

அமைவிடம்

தொகு

இந்த ஊரானது மாவட்ட தலைநகரான சேலத்துக்கு கிழக்கே 71 கிலோமீட்டர் தொலைவிலும், தலைவாசலில் இருந்து 10 கிலோமீட்டர் தொலைவிலும், மாநிலத் தலைநகரான சென்னையில் இருந்து 281 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது.[1]

சின்ன புனல்வாசல் ஏரி

தொகு

இந்த ஊரில் அமைந்துள்ள ஏரியானது உயிரினங்களின் இயற்கை புகலிடமாக உள்ளது. இந்த ஏரியில் பாம்புத்தாரா, சிறிய அரிவாள் மூக்கன், சின்ன நீர்க்காகம், இந்திய நீர்காகம், சின்னக் கொக்கு, இராக்கொக்கு முதலான பறவைகள் ஏரியில் வளர்ந்துள்ள கருவேல மரங்களில் நூற்றுக்கணக்கில் இனப்பெருக்கம் செய்கின்றன. மாலை வேளையில் இங்கு உள்ள மரங்களில் ஏராளமான உண்ணிக்கொக்குகள் வந்து அடைகின்றன. வலசை வாத்துகளும் குறிப்பிடதக்க எண்ணிக்கையில் வந்து செல்கின்றன.[2]

மேற்கோள்கள்

தொகு
  1. "Chinnapunalvasal Village". www.onefivenine.com. பார்க்கப்பட்ட நாள் 2023-06-26.
  2. "இயற்கைப் புகலிடங்களின் வரிசையில் சேருமா சேலம்?". Hindu Tamil Thisai. 2023-06-03. பார்க்கப்பட்ட நாள் 2023-06-26.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சின்ன_புனல்வாசல்&oldid=3744807" இலிருந்து மீள்விக்கப்பட்டது