சிபுரான் மாவட்டம்

மலேசியாவின் சரவாக் மாநிலத்தில் உள்ள மாவட்டம்

சிபுரான் மாவட்டம் (மலாய் மொழி: Daerah Siburan; ஆங்கிலம்: Siburan District) என்பது மலேசியா, சரவாக், செரியான் பிரிவில் உள்ள ஒரு மாவட்டம். இந்த மாவட்டத்தின் நிர்வாக மையமாக சிபுரான் நகரம் (Siburan) விளங்குகிறது.[1]

சிபுரான் மாவட்டம்
Siburan District
சரவாக்
சிபுரான் நகரம்
சிபுரான் நகரம்
சிபுரான் மாவட்டம் is located in மலேசியா
சிபுரான் மாவட்டம்
     சிபுரான் மாவட்டம்       மலேசியா
ஆள்கூறுகள்: 1°15′42.68″N 110°20′17.62″E / 1.2618556°N 110.3382278°E / 1.2618556; 110.3382278
நாடு Malaysia
மாநிலம் சரவாக்
பிரிவுசெரியான் பிரிவு
மாவட்டம்சிபுரான் மாவட்டம்
நிர்வாக மையம்சிபுரான் நகரம்
பரப்பளவு
 • மொத்தம்359.7 km2 (138.9 sq mi)
மக்கள்தொகை (2015)
 • மொத்தம்72,148
 • அடர்த்தி200/km2 (520/sq mi)
நேர வலயம்மலேசிய நேரம் (ஒசநே+8)

1980-ஆம் ஆண்டுகளில், சிபுரான் மாவட்டம், கூச்சிங் பிரிவில் ஒரு துணை மாவட்டமாக இருந்தது. 2021-ஆம் ஆண்டில் செரியான் பிரிவில் முழு மாவட்டமாக மாற்றம் கண்டது. இந்த மாவட்டத்தில் வசிக்கும் பெரும்பான்மையான மக்கள் பிடாயூ (Bidayuh) இனத்தவர்கள் ஆகும்.[2]

பொது தொகு

சிபுரான் மாவட்டம் ஏறக்குறைய 359.7 சதுர கி.மீ. பரப்பளவைக் கொண்டுள்ளது. மாவட்டத்தின் நிர்வாக நகரம் சிபுரான் ஆகும். 2015-ஆம் ஆண்டு புள்ளி விவரங்களின்படி, சிபுரான் மாவட்டத்தில் வசிக்கும் மக்களின் எண்ணிக்கை 72,148 பேர்.

சிபுரான் மாவட்டத்தின் தலைநகரமான சிபுரான் நகரம், சரவாக் மாநிலத்தின் தலைநகரமான கூச்சிங் மாநகரத்திற்கு தெற்கே, ஏறக்குறைய 30 கி.மீ. (19 மைல்) தொலைவில் அமைந்துள்ளது.

மேற்கோள்கள் தொகு

  1. "Abang Johari: Siburan elevated to district, Balai Ringin sub-district". The Borneo Post. 27 November 2021 இம் மூலத்தில் இருந்து 20 June 2022 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20220620061450/https://www.theborneopost.com/2021/11/27/abang-johari-siburan-elevated-to-district-balai-ringin-sub-district/. 
  2. "Laman Web Pentadbiran Bahagian Serian". serian.sarawak.gov.my. Archived from the original on 1 பிப்ரவரி 2023. பார்க்கப்பட்ட நாள் 1 February 2023. {{cite web}}: Check date values in: |archive-date= (help)

மேலும் காண்க தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=சிபுரான்_மாவட்டம்&oldid=3929859" இலிருந்து மீள்விக்கப்பட்டது