சிபுரான்

மலேசியா, சரவாக் மாநிலத்தில் உள்ள நகரம்

சிபுரான் (மலாய் மொழி: Bandar Siburan; ஆங்கிலம்: Siburan Town) என்பது மலேசியா, சரவாக், செரியான் பிரிவு, சிபுரான் மாவட்டத்தில் உள்ள ஒரு நகரம். அத்துடன் சிபுரான் மாவட்டத்தின் நிர்வாக மையமும் ஆகும்.

சிபுரான்
Siburan Town
Bandar Siburan
சிபுரானில் உள்ள பள்ளிவாசல்
சிபுரானில் உள்ள பள்ளிவாசல்
சிபுரான் is located in மலேசியா
சிபுரான்
     சிபுரான்       மலேசியா
ஆள்கூறுகள்: 1°21′42″N 110°24′17″E / 1.361644°N 110.404600°E / 1.361644; 110.404600
நாடு மலேசியா
மாநிலம் சரவாக்
பிரிவுசெரியான் பிரிவு
மாவட்டம்சிபுரான் மாவட்டம்
நிர்வாக மையம்சிபுரான்
நேர வலயம்மலேசிய நேரம் ஒ.ச.நே + 08:00
அஞ்சல் குறியீடு
94200

இந்த நகரம் மாநிலத் தலைநகர் கூச்சிங்கிற்கு தெற்கே 30 கிலோமீட்டர் (19 மைல்) தொலைவில் அமைந்துள்ளது.

பொது

தொகு

சிபுரான் நகரம் தற்போது கூச்சிங் மாவட்டத்திற்கும் செரியான் மாவட்டத்திற்கும் இடையில் அமைந்துள்ள ஒரு புறநகர்ப் பகுதி ஆகும்.

சிபுரான் நகரம், செரியான் பிரிவின் கீழ் வருவதற்கு முன்பு, கூச்சிங் பிரிவின் மேற்பார்வையில் இருந்தது. 1980-ஆம் ஆண்டுகளில், சிபுரான் மாவட்டம், கூச்சிங் பிரிவில் ஒரு துணை மாவட்டமாக இருந்தது. 2021-ஆம் ஆண்டில் செரியான் பிரிவில் முழு மாவட்டமாக மாற்றம் கண்டது.[1]

சிபுரான் நகரத்தில் வசிக்கும் பெரும்பான்மையான மக்கள் பிடாயூ (Bidayuh) இனத்தவர்கள் ஆகும்.[2]

மேற்கோள்கள்

தொகு
  1. "Abang Johari: Siburan elevated to district, Balai Ringin sub-district". The Borneo Post. 27 November 2021 இம் மூலத்தில் இருந்து 20 June 2022 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20220620061450/https://www.theborneopost.com/2021/11/27/abang-johari-siburan-elevated-to-district-balai-ringin-sub-district/. 
  2. "Laman Web Pentadbiran Bahagian Serian". serian.sarawak.gov.my. Archived from the original on 1 February 2023. பார்க்கப்பட்ட நாள் 1 February 2023.

மேலும் காண்க

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிபுரான்&oldid=4082571" இலிருந்து மீள்விக்கப்பட்டது