சியாம் ரங்கீலா

இந்திய நகைச்சுவை நடிகர் மற்றும் அரசியல்வாதி

சியாம் ரங்கீலா (Shyam Rangeela) சியாம் சுந்தர் என்பது இவரது இயற்பெயராகும். இவர் இந்திய நாட்டின் இராசத்தான் மாநிலம் அனுமன்கர் பகுதியைச் சேர்ந்த இந்திய நகைச்சுவை நடிகர் மற்றும் அரசியல்வாதி ஆவார். இவர் 1994 ஆம் ஆண்டு ஆகத்து மாதம் 25 ஆம் தேதியன்று பிறந்தார்.

சியாம் ரங்கீலா
பிறப்புசியாம் சுந்தர்
25 ஆகத்து 1994 (1994-08-25) (அகவை 30)
அனுமான்காட் மாவட்டம், இராசத்தான், இந்தியா
தேசியம்இந்தியன்
மற்ற பெயர்கள்ரங்கீலா
பணிநகைச்சுவை நடிகர்

ஆரம்பகால வாழ்க்கை

தொகு

ரங்கீலா 1994 ஆம் ஆண்டு ஆகத்து மாதம் 25 ஆம் தேதியன்று இந்திய மாநிலமான இராசத்தான் மாநிலத்தில் உள்ள அனுமன்கர் மாவட்டத்தின் பிலிபங்கா நகரத்தின் மனக்தேரி கிராமத்தில் பிறந்தார். இவரது தந்தை ஜவகர்லால் ஒரு விவசாயி ஆவார். 2013 ஆம் ஆண்டில் இந்த கிராமத்தை விட்டு வெளியேறி ஒரு புதிய கிராமத்திற்கு குடிபெயர்ந்தார். ரங்கீலாவின் குடும்பம் தற்போது சிறீ கங்காநகரின் ரைசிங் நகரின் மோகமாவாலா கிராமத்தில் வசித்து வருகின்றனர். இவர் ஒரு இந்து குடும்பத்தைச் சேர்ந்தவர் ஆவார். எட்டாம் வகுப்பு வரை சியாமின் கல்வி மனக்தேரி கிராமத்திலும், பின்னர் பன்னிரண்டாம் வகுப்பு வரை சூரத்கரிலும் படித்தார். அதன்பிறகு, இவர் 2012 ஆண்டு முதல் 2015 ஆம் ஆண்டு வரை இராசத்தான் மாநிலம் செய்ப்பூரில் அனிமேசன் படிப்பை மேற்கொண்டார்.[1]

நகைச்சுவை வாழ்க்கை

தொகு

ரங்கீலா தி கிரேட் இந்தியன் லாப்டர் சேலஞ்சில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் இந்திய தேசிய காங்கிரசு தலைவர் ராகுல் காந்தி பிரதிபலித்து நடித்தபோது அனைவரின் கவனத்தை ஈர்த்தார். நீதிபதி அக்சய் குமாரிடமிருந்து நின்று கைதட்டினை பெற்றார். இருப்பினும் அது ஒருபோதும் நிகழ்ச்சியில் ஒளிபரப்பப்படவில்லை. அதற்கு முன்பு, இவர் செய்ப்பூரில் உள்ள ஒரு நிறுவனத்தில் நிகழ்ச்சிகளை நிகழ்த்தினார். மேலும் அரசியல்வாதிகளைப் பின்பற்றினார்.[2]

அரசியல் வாழ்க்கை

தொகு

ரங்கீலா 2022 ஆம் ஆண்டு மே மாதத்தில் ஆம்ஆத்மி கட்சியில் சேர்ந்தார். இவரது நகைச்சுவை 'மிகவும் அரசியல்' என்பதால் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் அவரை மீண்டும் மீண்டும் நிராகரிப்பதாகக் கூறி தொடர்ச்சியான ட்வீட்டுகளைப் பகிர்ந்து கொண்டனர்.[3]

இவர் 2024 ஆம் ஆண்டு இந்திய பொதுத் தேர்தலில் வாரணாசி தொகுதியில் இருந்து சுயேட்சை வேட்பாளராக போட்டியிடவிருந்தார்.எனினும் அவரது நியமனத்தை இந்திய தேர்தல் ஆணையம் நிராகரித்தது.[4]

மேற்கோள்கள்

தொகு
  1. Kohli, Karnika (26 October 2017). "Star Plus Drops Telecast of Comedian Mimicking Modi on 'Great Indian Laughter Challenge' – The Wire". thewire.in. பார்க்கப்பட்ட நாள் 22 February 2018.
  2. "Comedian mimics Narendra Modi and Rahul Gandhi, gets standing ovation from Akshay Kumar on Laughter Challenge. Watch video". http://www.hindustantimes.com/tv/comedian-mimics-narendra-modi-and-rahul-gandhi-gets-standing-ovation-from-akshay-kumar-on-laughter-challenge-watch-video/story-sRPvgz2egL0Yu9BBMe4rvM.html. 
  3. Mukherjee, Deep (10 May 2022). "Shyam Rangeela Part II: As AAP leader in The Great Indian Political Challenge". The Indian Express. பார்க்கப்பட்ட நாள் 15 December 2023.
  4. "Comedian Shyam Rangeela to fight against PM Modi in Varanasi". India Today (in ஆங்கிலம்). 2024-05-02. பார்க்கப்பட்ட நாள் 2024-05-02.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சியாம்_ரங்கீலா&oldid=4135989" இலிருந்து மீள்விக்கப்பட்டது