சிரோம் இந்திரா
சிரோம் இந்திரா(Chirom Indira)என்று அழைக்கப்படும் க்ஷேத்ரிமாயும் இந்திரா தேவி ஓர் இந்திய தொழிலதிபர், வடிவமைப்பாளர் மற்றும் சமூக சேவகர் ஆவார்.
சிரோம் இந்திரா | |
---|---|
பிறப்பு | மணிப்பூர் |
தேசியம் | இந்தியர் |
பணி | ஆடை வடிவமைப்பாளர் |
வாழ்க்கை
தொகுசிரோம் தேவி மணிப்பூரின் மேற்கு இம்பால் மாவட்டத்தில் பிறந்தார். இவருடன் பிறந்த ஆறு குழந்தைகளில், இவர் முதலில் பிறந்தவர். [1] இவர் அரசியல் அறிவியலில் பட்டதாரி ஆவார். இவர் குவாஹாட்டியில் உள்ள இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஹார்டுவேர் டெக்னாலஜியில் நெசவுத் தொழிலை படித்தார். மேலும் இவரது முதல் வேலை 1994 இல் கோஎன்கா நூற்பு ஆலையில் (GOENKA) இருந்தது.
2003 ஆம் ஆண்டு இவர், தனது கணவருடன் சேர்ந்து கைத்தறி உற்பத்திப் பொருட்களுக்கான ஏற்றுமதி நிறுவனத்தை தொடங்கினார். [2]
2015 ஆம் ஆண்டில், ஜவுளி அமைச்சகம் இவரது பணியை அங்கீகரித்தது. மேலும், கைத்தறி தயாரிப்புகளின் வடிவமைப்பு மேம்பாட்டிற்கான தேசிய விருதைப் பெற்ற முதல் இந்தியர் என்ற பெருமையைப் பெற்றார். [3]
சர்வதேச மகளிர் தினத்தன்று சிரோம் தேவிக்கு கைத்தறி நெசவுத் துறையில் பங்களித்ததற்காக நாரி சக்தி விருது வழங்கப்பட்டது [4] [3] புது தில்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் ( ராஷ்டிரபதி பவன் ) குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இந்த விருதை வழங்கினார், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் மேனகா சஞ்சய் காந்தி ஆகியோரும் கலந்து கொண்டனர். அந்த ஆண்டு இவருடன் சேர்த்து, சுமார் 30 பேர் மற்றும் ஒன்பது நிறுவனங்கள் கௌரவிக்கப்பட்டனர், பங்குபெற்ற அனைவரும் விருதுடன், பரிசு தொகையாக தலா $ 100,000 பெற்றனர். [5] [6] அன்றைய தினம் கௌரவிக்கப்பட்ட மற்றொரு நபர், ஜவுளித்துறையில் சிறந்து விளங்கிய மது ஜெயின் ஆவார். [7] அந்த விருதின் அதே நாளில், பதினைந்து பெண்கள் வுமன் டிரான்ஸ்ஃபார்மிங் இந்தியா விருதைப் பெறுவதற்கான பரிந்துரைகள் திறக்கப்பட்டன. அதில் இவரது பெயர் பரிந்துரைக்கப்பட்டது. மேலும், அந்த ஆண்டின் பிற்பகுதியில் அந்த விருது வழங்கப்பட்டது. [1]
2018 ஆம் ஆண்டளவில் இவர் 1992 இல் உருவாக்கப்பட்ட "அனைத்திந்திய கைத்தறி வாரியத்தின்" [1] உறுப்பினர் ஆனார். இருப்பினும் 2020 இல் வாரியம் கலைக்கப்பட்டது, ஏனெனில் அந்த திட்டம் போதுமான அளவு பலனளிக்கவில்லை. [8]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 "Kshetrimayum Indira Devi of Manipur conferred Women Transforming India Award 2018 by NITI Aayog & United Nations India | Times Of Manipur %". 2018-12-17. Archived from the original on 2021-01-18. பார்க்கப்பட்ட நாள் 2024-03-23.
- ↑ "Chirom Indira Promoter of Manipuri Handlooms products". e-pao.net. பார்க்கப்பட்ட நாள் 2021-01-15.
- ↑ 3.0 3.1 "Manipur's Chirom Indira awarded Nari Shakti Puraskar 2017". NORTHEAST NOW (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-01-15.
- ↑ "Nari Shakti Puraskar - Gallery". narishaktipuraskar.wcd.gov.in. Archived from the original on 2021-01-14. பார்க்கப்பட்ட நாள் 2021-01-13.
- ↑ "On International Women's Day, the President conferred the prestigious Nari Shakti Puraskars to 30 eminent women and 9 distinguished Institutions for the year 2017". pib.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2021-01-14.
- ↑ "International Women's Day: President Kovind honours 39 achievers with 'Nari Shakti Puraskar'". The New Indian Express. Archived from the original on 2021-01-14. பார்க்கப்பட்ட நாள் 2021-01-08.
- ↑ "Madhu Jain Honoured by Ministry of Textiles' Award for Special Recognition in Textile Sector - Times of India". The Times of India (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-01-16.
- ↑ "Why was the All India Handloom Board dissolved?". The Indian Express (in ஆங்கிலம்). 2020-09-05. பார்க்கப்பட்ட நாள் 2021-01-15.