சிர்க்கோனியம்(III) புரோமைடு

வேதிச் சேர்மம்

சிர்கோனியம்(III) புரோமைடு (Zirconium(III) bromide) என்பது ZrBr3 மூலக்கூற்று வாய்ப்பாட்டுடன் கூடிய ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும்.

சிர்க்கோனியம்(III) புரோமைடு
zirconium(III) bromide
Ball-and-stick model of a polymer chain of face-sharing octahedra in the crystal structure of zirconium(III) bromide
Ball-and-stick model of the packing of polymer chains in the crystal structure of zirconium(III) bromide
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
சிர்க்கோனியம் முப்புரோமைடு
இனங்காட்டிகள்
24621-18-9 Y
ChemSpider 8185694
InChI
  • InChI=1S/3BrH.Zr/h3*1H;/q;;;+3/p-3
    Key: YRDBVAQLYFVSFE-UHFFFAOYSA-K
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 10010115
  • Br[Zr](Br)Br
பண்புகள்
Br3Zr
வாய்ப்பாட்டு எடை 330.94 g·mol−1
தோற்றம் கருப்பு
கட்டமைப்பு
படிக அமைப்பு அறுகோணம்
புறவெளித் தொகுதி P63/mcm, No. 193
Lattice constant a = 6.728 Å, c = 6.299 Å
படிகக்கூடு மாறிலி
தொடர்புடைய சேர்மங்கள்
ஏனைய எதிர் மின்னயனிகள் சிர்க்கோனியம்(III) குளோரைடு, சிர்க்கோனியம்(III) அயோடைடு
ஏனைய நேர் மின்அயனிகள் தைட்டானியம்(III) புரோமைடு, ஆஃபினியம்(III) புரோமைடு
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

தயாரிப்பு

தொகு

தைட்டானியம், சிர்க்கோனியம் மற்றும் ஆஃபினியம் ஆகியவற்றின் கிட்டத்தட்ட அனைத்து மூவாலைடுகளும் அவற்றின் உலோகத்துடன் தொடர்புடைய நான்காலைடு சேர்மத்தை உயர் வெப்பநிலை ஒடுக்க வினைக்கு உட்படுத்தி குறைப்பதன் மூலம் தயாரிக்கப்படலாம். முழுமையற்ற வினையும் அதிகப்படியான உலோக மாசுபடுதலும் பெரும்பாலும் நிகழ்கிறது.[1]

மற்ற குழு 4 மூவயோடைடுகளைப் போலவே, சிர்க்கோனியம் (IV) புரோமைடுடன் சிர்கோனியம் உலோகத்தை சேர்த்து வினை கலவையை உயர் வெப்பநிலை ஒடுக்க வினைக்கு உட்படுத்தி குறைப்பதன் மூலம் சிர்கோனியம்(III) புரோமைடை தயாரிக்கலாம்.

3 ZrBr4 + Zr → 4 ZrBr3

அலுமினியம் மூப்புரோமைடுடன் ஏதேனுமொரு சிர்கோனியம்(III) கரைசலைச் சேர்த்து சிர்கோனியம்(III) அயோடைடை படிகமாக்குவது ஒரு மாற்று தயாரிப்பு முறையாகும். சிர்கோனியம் (IV) புரோமைடின் எளிதுருகும் கரைசலை நீர்ம அலுமினியம் மூப்புரோமைடு கரைசலைச் சேர்த்து 230-300 பாகை செல்சியசு வெப்பநிலைக்குச் சூடுபடுத்துவதன் மூலம் தேவையான மேற்கூறிய கரைசல் தயாரிக்கப்படுகிறது.[2][3]

கட்டமைப்பு மற்றும் பிணைப்பு

தொகு

சிர்கோனியம்(III) புரோமைடு d 1 உலோக அயனி Zr 3+ அயனிக்கு எதிர்பார்த்ததை விட குறைவான காந்தத் தருணத்தைக் கொண்டுள்ளது, இதனால் மிகக் குறைவான Zr-Zr பிணைப்பு கொண்டதாக உள்ளது.[1]

சிர்கோனியம்(III) புரோமைடின் படிக அமைப்பு, Zr 3+ அயனிகளால் ஆக்கிரமிக்கப்பட்ட எண்முக இடைவெளிகளில், மூன்றில் ஒரு பகுதி அயோடைடு அயனிகளின் அறுகோண நெருக்கப் பொதிவு கட்டமைப்பை அடிப்படையாகக் கொண்டது.[1] இந்த அமைப்பு சமமற்ற இடைவெளி கொண்ட உலோக அணுக்களுடன் முகப்-பகிர்வு {ZrI 6 } எண்முக இணையான சங்கிலிகளைக் கொண்டுள்ளது. Zr-Zr பிரிப்பு 3.17 Å மற்றும் 3.51 Å அளவுகளுக்கு இடையில் மாறி மாறி வருகிறது.

ZrCl 3, ZrBr 3 மற்றும் ZrI 3 ஆகியவை β-TiCl 3 கட்டமைப்பிற்கு மிகவும் ஒத்த கட்டமைப்புகளை ஏற்றுக்கொள்கின்றன.[1] அனைத்து மூன்று ZrX 3 சேர்மங்களின் கட்டமைப்பிலும் உலோக-உலோக அச்சில் எண்முகத்தின் சிறிதளவு நீட்சி உள்ளது. உலோக-உலோக விலக்கல் பண்பு இதற்கு காரணமாக இருக்கலாம்.[3] ஆனால் இந்நீட்சி குளோரைடில் மிகவும் அதிகமாகவும் , புரோமைடில் மிதமானதாகவும் அயோடைடில் மிகக் குறைவாகவும் காணப்படுகிறது.[3]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 1.2 1.3 Greenwood, Norman N.; Earnshaw, Alan (1997). Chemistry of the Elements (2nd ed.). Butterworth–Heinemann. p. 965. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0080379419.
  2. Larsen, E. M.; Moyer, James W.; Gil-Arnao, Francisco; Camp, Michael J. (1974). "Synthesis of crystalline zirconium trihalides by reduction of tetrahalides in molten aluminum halides. Nonreduction of hafnium". Inorg. Chem. 13 (3): 574–581. doi:10.1021/ic50133a015. 
  3. 3.0 3.1 3.2 Larsen, Edwin M.; Wrazel, Julie S.; Hoard, Laurence G. (1982). "Single-crystal structures of ZrX3 (X = Cl, Br, I) and ZrI3.40 synthesized in low-temperature aluminum halide melts". Inorg. Chem. 21 (7): 2619–2624. doi:10.1021/ic00137a018.