மோசுல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*துவக்கம்*
(வேறுபாடு ஏதுமில்லை)

17:29, 12 சூன் 2014 இல் நிலவும் திருத்தம்

மோசுல் (Mosul, அரபு மொழி: الموصلal-Mawṣil;குர்தியம்: Mûsil/Nînewe; துருக்கியம்: Musul) is a city in வடக்கு ஈராக்கில் உள்ளதொரு நகரமாகும். இது நினேவே மாநிலத்தின் தலைநகரமும் ஆகும். நாட்டின் தலைநகர் பக்தாத்திலிருந்து வடமேற்கில் 400 km (250 mi) தொலைவில் அமைந்துள்ளது. பழமையான நகரப்பகுதி டைகிரிசு ஆற்றின் மேற்கு கரையில் அமைந்துள்ளது; ஆற்றின் கிழக்குக் கரையில் தொன்மையான அசிரிய நகரான நினேவே அமைந்திருந்தது. தற்போதைய மாநகரப் பகுதி இரு கரைகளிலும் உள்ள நகரப்பகுதிகளை உள்ளடக்கி உள்ளது. இரு கரைகளையும் ஐந்து பாலங்கள் இணைக்கின்றன. பெரும்பாலான மக்கள் அராபியர்களாவர். ( அசிரியர், ஈராக்கி துருக்கியர் மற்றும் குர்துக்கள் சிறுபான்மையினராக உள்ளனர்). ஈராக்கில் பக்தாத்தை அடுத்த மிகப் பெரும் நகரம் இதுவாகும்.[1][மெய்யறிதல் தேவை]

மோசுல்

الموصل
மோசுலில் உள்ள டைக்ரசு ஆறும் பாலமும்
மோசுலில் உள்ள டைக்ரசு ஆறும் பாலமும்
நாடு ஈராக்
ஆளுகைநினாவா
மாவட்டம்மோசுல்
மக்கள்தொகை (2008)
 • நகர்ப்புறம்1,800,000
நேர வலயம்கிரீன்விச் இடைநிலை நேரம் +3

புகழ்பெற்ற மசுலின் துணி நெடுங்காலமாக இங்கு தயாரிக்கப்பட்டு வந்தமையாலேயே அத்துணிக்கு இந்த நகரின் பெயர் சூட்டப்பட்டது.[2] வரலாற்றுப்படி இப்பகுதியில் மற்றொரு முக்கிய தயாரிப்பு பொருளாக மோசுல் பளிங்கு விளங்குகிறது.

1987இல் இந்நகரத்தின் மக்கள்தொகை 664,221 ஆகும்; 2002இல் மக்கள்தொகை 1,740,000 ஆகவும் 2008இல் 1,800,000 ஆகவும் மதிப்பிடப்பட்டுள்ளது.[3]

சூன் 2014இல் வட ஈராக்கு தாக்குதலின்போது இந்த நகரத்தை இராக்கிய இஸ்லாமிய தேசம் மற்றும் லெவெண்ட் கைப்பற்றியது.

மேற்சான்றுகள்

  1. {{cite web | url=http://alarab.co.uk/en/?id=406 | title=Largest Cities in Iraq | accessdate=2013-10-17 | publisher=mongabay.com | date=October 17, 2013
  2. "Musin". Online encyclopedia. பார்க்கப்பட்ட நாள் 2009-09-10.
  3. "Mosul, the next major test for the U.S. military in Iraq". mcclatchydc.com. -01-26-2009. பார்க்கப்பட்ட நாள் 2008-01-31. {{cite web}}: Check date values in: |date= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=மோசுல்&oldid=1676876" இலிருந்து மீள்விக்கப்பட்டது