செண்டிமீட்டர்

செண்டிமீட்டர் அல்லது சென்டிமீட்டர் (centimetre அல்லது centimeter) அல்லது சதமமீட்டர் (இலங்கை வழக்கு) (குறியீடு செமீ (cm) என்பது மெட்ரிக் முறையில் நீளத்தின் ஓர் அலகு ஆகும். இது மீட்டரின் நூறில் ஒரு பங்கிற்குச் சமமாகும். "செண்டி" (centi) என்பது 1/100 பின்னத்தின் அனைத்துலக முறை அலகு முன்னொட்டாகும்.[1] இப்போது வழக்கொழிந்த சென்டிமீட்டர்-கிராம்-செகண்ட் (சிஜிஎஸ்) அலகுகளில் நீளத்தின் அடிப்படை அலகு செண்டிமீட்டர் ஆகும்.

சென்டிமீட்டர்
centimetre
சென்டிமீட்டர் அலகுகளைக் காட்டும் ஆசாரியின் அளவுகோல்
பொது தகவல்
அலகு முறைமைமெட்ரிக்கு
அலகு பயன்படும் இடம்நீளம்
குறியீடுசெமீ (cm)
அலகு மாற்றங்கள்
1 செமீ (cm) இல் ...... சமன் ...
   அனைத்துலக முறை அலகுகள்   10 மிமீ
   பிரித்தானிய, அமெரிக்க முறை   ~0.3937 அங்

இன்று பல அளவீடுகளுக்கு, 103 காரணிகளுக்கான SI முன்னொட்டுகள் (மில்லி-, கிலோ- போன்றவை) பெரும்பாலும் தொழில்நுட்பவியலாளரகளால் விரும்பப்படுகின்றன. இம்பீரியல் அளவை முறையில் உள்ள ஓர் அங்குலம் என்பது 2.54 செண்டிமீட்டர் நீளத்துக்கு ஈடாகும். இது சற்றேறக்குறைய ஆள்காட்டி விரல் அகலம் உடையது.

நீளத்தின் ஏனைய அலகுகளும் செண்டிமீட்டரும் தொகு

1 செண்டிமீட்டர் = 10 மில்லிமீட்டர்கள்
= 0.01 மீட்டர்கள்
= 0.393700787401574803149606299212598425196850 அங்குலங்கள்
 (ஓர் அங்குலத்தில் சரியாக 2.54 செண்டிமீட்டர்கள் உள்ளன.)

அனைத்துலக முறை அலகுகளில் ஒரு மில்லிலீட்டர் என்பது ஒரு கன சென்டிமீட்டருக்கு சமமாகும்.

ஏனைய பயன்பாடுகள் தொகு

நீள அளவீட்டைத் தவிர, செண்டிமீட்டர் பின்வரும் நிகழ்வுகளில் பயன்படுத்தப்படுகின்றது:

  • மழை அளவீடு மூலம் அளவிடப்படும் மழையின் அளவைக் குறிக்கப் பயன்படுத்தப்படுகிறது.[2]
  • செமீ.கி/செக் (CGS) வழக்கில், செண்டிமீட்டர் கொண்மத்தை அளவிடப் பயன்படுத்தப்படுகிறது,1 செமீ கொண்மம் = 1.113×10−12 பாரடுகள்[3]
  • வரைபடங்களில், செண்டிமீட்டர்கள் வரைபட அளவிலிருந்து உண்மையான உலக அளவில் (கிலோமீட்டர்கள்) மாற்றுவதற்குப் பயன்படுத்தப்படுகின்றன.
  • செமீ.கி/செக் (CGS) வழக்கில் ஓர் அலகான கெய்சரின் தலைகீழ், இதனால் அலை எண்ணின் SI-அல்லாத மெட்ரிக்கு அலகு: 1 கெய்சர் = 1 அலை/சென்டிமீட்டர்; அல்லது, பொதுவாக, (கெய்சர்களில் அலை எண்) = 1/(சென்டிமீட்டரில் அலைநீளம்). அலைஎண்ணின் SI அலகு தலைகீழ் மீட்டர், m−1 ஆகும்.

இவற்றையும் பார்க்க தொகு

மேற்கோள்கள் தொகு

  1. "Decimal multiples and submultiples of SI units". Bureau International des Poids et Mesures. 2014. பார்க்கப்பட்ட நாள் 5 July 2015.
  2. "Rain Measurement". www.weathershack.com.
  3. Weisstein, Eric W. "Capacitance -- from Eric Weisstein's World of Physics". scienceworld.wolfram.com.
"https://ta.wikipedia.org/w/index.php?title=செண்டிமீட்டர்&oldid=3451268" இலிருந்து மீள்விக்கப்பட்டது