வேல்சு தேசிய காற்பந்து அணி

வேல்சு தேசிய காற்பந்து அணி (Wales national football team) என்பது பன்னாட்டு சங்கக் கால்பந்து போட்டிகளில் வேல்சைப் பிரதிநித்தித்துவப்படுத்தும் அணியாகும். இது வேல்சு கால்பந்துச் சங்கத்தினால் (FAW) நிருவகிக்கப்படுகிறது. இச்சங்கமே உலகின் மூன்றாவது மிகப் பழமையான கால்பந்து சங்கம் ஆகும்.

வேல்சு
Shirt badge/Association crest
அடைபெயர்த டிராகன்சு
கூட்டமைப்புவேல்சு கால்பந்துச் சங்கம் (FAW)
கண்ட கூட்டமைப்புஐரோப்பிய காற்பந்துச் சங்கங்களின் ஒன்றியம் (ஐரோப்பா)
தன்னக விளையாட்டரங்கம்கார்டிஃப் நகர அரங்கு
பீஃபா குறியீடுWAL
பீஃபா தரவரிசை26 2 (2 சூன் 2016)
அதிகபட்ச பிஃபா தரவரிசை8 (அக்டோபர் 2015)
குறைந்தபட்ச பீஃபா தரவரிசை117 (ஆகத்து 2011)
எலோ தரவரிசை45 (23 பெப்ரவரி 2016)
அதிகபட்ச எலோ3 (1876–1885)
குறைந்தபட்ச எலோ88 (25 மே 2011)
உள்ளக நிறங்கள்
வெளியக நிறங்கள்
முதல் பன்னாட்டுப் போட்டி
 இசுக்காட்லாந்து 4–0 வேல்சு
(கிளாஸ்கோ, இசுக்கொட்லாந்து 26 மார்ச் 1876)
உலகக் கோப்பை
பங்கேற்புகள்1 (முதற்தடவையாக 1958 இல்)
சிறந்த முடிவுகாலிறுதிகள், 1958
ஐரோப்பிய வாகையாளர்
பங்கேற்புகள்1 (முதற்தடவையாக 2016 இல்)
சிறந்த முடிவுTBD

வேல்சு அணி ஐக்கிய இராச்சியத்தில் உள்ளடக்கப்பட்டிருந்தாலும், பன்னாட்டுப் போட்டிகளில் தனித்தே போட்டியிடுகிறது. ஆனாலும், ஒலிம்பிக் போட்டிகளில் ஐக்கிய இராச்சிய அணியில் போட்டியிடுகிறது.

வரலாற்றில், வேல்சு அணி இரண்டு தடவைகள் மட்டுமே பன்னாட்டு இறுதிச் சுற்றுப் போட்டிகளில் பங்குபற்றத் தகுதி பெற்றது. 1958 உலகக்கோப்பை காற்பந்து போட்டியில் காலிறுதிக்குத் தகுதி பெற்றது.[1] யூரோ 2016 போட்டியில் விளையாடத் தகுதி பெற்றது.

மேற்கோள்கள் தொகு

  1. "World Cup 1958 Qualifying". Rec.Sport.Soccer Statistics Foundation. 2 செப்டம்பர் 2015. பார்க்கப்பட்ட நாள் 14 அக்டோபர் 2015. {{cite web}}: Check date values in: |date= (help)

வெளி இணைப்புகள் தொகு