த மோட்டர்சைக்கிள் டைரீஸ்

ஸ்பானிஷ் திரைப்படம்
Aswn (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 13:28, 27 பெப்பிரவரி 2013 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{Infobox film | name = த மோட்டர்சை..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)

த மோட்டர்சைக்கிள் டைரீஸ் (ஆங்கிலம் - The Motorcycle Diaries) 2004 இல் வெளியான செ குவேராவின் வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படமாகும். இத்திரைப்படம் அதேப் பெயரிலான, குவேராவினால் எழுதப்பட்ட, புதினத்தினைத் தழுவி எடுக்கப்பட்டதாகும். வால்டர் சால்ஸ் ஆல் இயக்கப்பட்டது. கேல் கார்சியா பெர்னால், ராட்ரிகோ டெ லா செர்னா, மெர்செடெஸ் மொரான், சான் பியேர் நொஹெர், செர்ஜியோ போரிஸ், பகுன்டோ எஸ்பினோசா, மியா மேஸ்ட்ரோ ஆகியோர் நடித்துள்ளனர். சிறந்த அசல் பாட்டிற்கான அகாதமி விருதினை வென்றது. சிறந்த திரைப்படத்திற்கான பாஃப்டா விருதினையும் வென்றது.

த மோட்டர்சைக்கிள் டைரீஸ்
The Motorcycle Diaries
திரைப்படச் சுவரொட்டி
இயக்கம்வால்டர் சால்ஸ்
தயாரிப்புஎட்கார்டு டெனென்பாம்
மைக்கேல் நோசிக்
கேரன் டென்காப்
மூலக்கதைத மோட்டர்சைக்கிள் டைரீஸ் (புதினம்)
படைத்தவர் சே குவேரா
திரைக்கதைஹோசே ரிவேரா
இசைகஸ்டாவோ சன்டவொலல்லா
நடிப்புகேல் கார்சியா பெர்னால்
ராட்ரிகோ டெ லா செர்னா
மெர்செடெஸ் மொரான்
சான் பியேர் நொஹெர்
செர்ஜியோ போரிஸ்
பகுன்டோ எஸ்பினோசா
மியா மேஸ்ட்ரோ
ஒளிப்பதிவுஎரிக் காட்டியர்
படத்தொகுப்புடேனியல் ரெசென்ட்
கலையகம்பிலிம் போர்
பிடி சைன்
விநியோகம்புயேனா விஸ்ட இன்டர்நேசனல் (ARG)
ஃபோகஸ் பீசர்ஸ் (USA)
வெளியீடுசனவரி 15, 2004 (2004-01-15)(சன்டான்ஸ் திரைப்படத் திருவிழா)
ஓட்டம்126 நிமிடங்கள்
நாடுஆர்ஜென்டீனா
ஐக்கிய அமெரிக்கா
சிலி
பெரு
பிரேசில்
ஐக்கிய இராச்சியம்
செருமனி
பிரான்ஸ்
மொழிஸ்பானியம்
கெசுவா

வெளியீட்டுத் தேதிகள்

  • ஐக்கிய அமெரிக்கா: சனவரி 15, 2004 (சன்டான்ஸ் திரைப்படத் திருவிழா)
  • பிரான்ஸ்: சூலை 7, 2004
  • அர்ஜென்டீனா: சூலை 29, 2004
  • ஐக்கிய இராச்சியம்: ஆகத்து 27, 2004
  • ஐக்கிய அமெரிக்கா: செப்டம்பர் 24, 2004
  • சிலி: அக்டோபர் 21, 2004
  • செருமனி: அக்டோபர் 28, 2004

பாராட்டு

த மோட்டர்சைக்கிள் டைரீஸ் 2004இல் சன்டான்ஸ் திரைப்படத் திருவிழாவில் பெரிதுமாக பாராட்டப்பட்டது.[1]

மேற்கோள்கள்

  1. Sundance Flips for Che Guevara By Roger Friedman, January 19, 2004, Fox News

வெளி இணைப்புகள்

செய்தி நிபுணர்கள்