சிறிய தவிட்டுப் புறா
இக்கட்டுரை அல்லது கட்டுரைப்பகுதி கள்ளிப்புறா கட்டுரையுடன் ஒன்றிணைக்கப் பரிந்துரைக்கப்படுகிறது. (கலந்துரையாடவும்) |
Laughing dove | |
---|---|
S. s. cambayensis At Zighy Bay in the Musandam Peninsula, ஓமான் | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | விலங்கு
|
தொகுதி: | |
வரிசை: | |
குடும்பம்: | |
பேரினம்: | |
இனம்: | S. senegalensis
|
இருசொற் பெயரீடு | |
Spilopelia senegalensis (Linnaeus, 1766) | |
வேறு பெயர்கள் | |
|
பெயர்கள்
தொகுதமிழில்: சிறிய தவிட்டுப் புறா, சிரிக்கும் புறா
ஆங்கிலப்பெயர் :Little Brown Dove
அறிவியல் பெயர் :Streptopelia senegalensis [2]
உடலமைப்பு
தொகு27 செ.மீ. - வெளிர் சிவப்புத் தோய்ந்த பழுப்பும், சாம்பல் நிறமான உடலைக் கொண்டது. கழுத்தின் பக்கங்களில் கருப்பும் செம்பழுப்புமான கட்ட அமைப்புக் கொண்டது. மார்பு இளஞ் சிவப்புத் தோய்ந்த பழுப்பாகவும், வயிறு வெண்மையாகவும் இருக்கும்.
காணப்படும் பகுதிகள்
தொகுதமிழகமெங்கும் திருகுகள்ளி, சப்பாத்திக் கள்ளி ஆகியன வேலியாகவும் புதராகவும் வளர்ந்திருக்கும் விவசாய நிலங்களைச் சார்ந்து பிற புறாக்களோடு சேர்ந்து திரியும்.
உணவு
தொகுஅறுவடையான நிலங்களில் தானியங்களையும் புல் பூண்டின் விதைகளையும் இளந்தளிர்களையும் உணவாகத் தேடித் தின்னும் கூரூரூ.. கூரூஉஉ என்றோ குரு ரூ ரூ என்றோ குரல் கொடுக்கும்.
இனப்பெருக்கம்
தொகுஆண்டு முழுவதும் இனப்பெருக்கம் செய்வது உண்டெனினும் சிறப்பான பருவம் ஜனவரி முதல் அக்டோபர் வரை கள்ளிப்புதர்களில் குச்சிகள், இலைதடைகளைக் கொண்டு தட்டமைப்பில் கூடு வைத்து 2 முட்டைகள் இடும்.
மேற்கோள்கள்
தொகு- ↑ வார்ப்புரு:IUCN2015.4
- ↑ "Little Brown Dove சிறிய தவிட்டுப் புறா ". பார்க்கப்பட்ட நாள் 8 அக்டோபர் 2017.
- ↑ தமிழ்நாட்டுப் பறவைகள் முனைவர் க.ரத்னம்-மெய்யப்பன் பதிப்பகம்,பக்கம் எண்:62