சிறுத்தைப் பச்சோந்தி

ParaHoxozoa

சிறுத்தைப் பச்சோந்தி (Panther chameleon-பேந்தர் கெமிலியான்) என்பது மடகாசுகரின் கிழக்கு மற்றும் வடக்குப் பகுதிகளில் காணப்படும் பச்சோந்தி சிற்றினமாகும்.[1][3][4] இது வெப்ப மண்டல வன உயிர் பகுதிகளில் காணப்படுகிறது. மேலும் இது ரீயூனியனிலும் மொரிசியசிலும் அமெரிக்காவில் புளோரிடா மாநிலத்திலும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.[1][5]

சிறுத்தைப் பச்சோந்தி
Male
Female
உயிரியல் வகைப்பாடு e
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
செதிலுடைய ஊர்வன
Suborder:
இகுவானோமோர்பா
குடும்பம்:
பச்சோந்தி
பேரினம்:
பர்சிபர்
இனம்:
F. pardalis
இருசொற் பெயரீடு
Furcifer pardalis
(Cuvier, 1829)
வேறு பெயர்கள்
  • Chamaeleo pardalis Cuvier 1829[2]
  • Chamaeleo ater Lesson 1832
  • Cyneosaura pardalis Gray 1865
  • Chamaeleo guentheri Boulenger 1888
  • Chamaeleon longicauda Günther 1891
  • Chamaeleon axillaris Werner 1899
  • Chamaeleon krempfi Chabanaud 1923
  • Chamaeleo niger Duméril & Bibron 1836
  • Chamaeleon pardalis Werner 1911
  • Chamaeleon guentheri Werner 1911

வகைப்பாட்டியல்

தொகு

சிறுத்தை பச்சோந்தி முதன்முதலில் 1829-இல் பிரெஞ்சு இயற்கை ஆர்வலர் ஜார்ஜ் குவியர் என்பவரால் விவரிக்கப்பட்டது.[6] இதன் பேரினப் பெயரான பர்சிபெர் இலத்தீன் மூலச் சொல்லான புர்சி (furci ) என்பதிலிருந்து பெறப்பட்டது. இதன் பொருள் "முட்கரண்டி" என்பது. இது விலங்குகளின் கால்களின் வடிவத்தைக் குறிக்கிறது. பர்தாலிசு என்ற சிற்றினப் பெயர் இந்த விலங்கின் அடையாளங்களைக் குறிக்கிறது. ஏனெனில் இது "சிறுத்தை" அல்லது "சிறுத்தையைப் போலப் புள்ளிகளுடையது" என்பதற்கான இலத்தீன் சொல் ஆகும். ஆங்கிலச் சொல்லான பச்சோந்தி (கெமிலியோன்) இலத்தீன் மொழியான சாமேலியோவிலிருந்து பெறப்பட்டது. இது பண்டைய கிரேக்க χαμαιλέων (கமைலியோன்) χαmαί ("தரையில்") மற்றும் λέωn (léōn)("சிங்கம்") ஆகியவற்றின் கலவை ஆகும். கிரேக்கச் சொல்லான அக்காடியன் நெசு குக்காரி (nēš qaqqari), "தரை சிங்கம்" என்று மொழிபெயர்க்கப்பட்ட ஒரு சொல் ஆகும்.[7] இதிலிருந்து "சிறுத்தைப் பச்சோந்தி" என்ற பொதுவான ஆங்கிலப் பெயர் தோன்றியது.

தற்போது ஒப்பீட்டளவில் பரவலாகவும், நிறத்தில் மிகவும் மாறுபட்ட சிற்றினமாகவும் கருதப்பட்டாலும், மரபியல் மற்றும் கொல்லைப்படுத்தப்பட்ட இனப்பெருக்கத்தின் சான்றுகள் இது வேறுபட்ட சிற்றினமாகப் பிரிக்கப்பட வேண்டும் என்பதைக் குறிக்கிறது.[8][9]

விளக்கம்

தொகு

சிறுத்தைப் பச்சோந்தி 16 முதல் 20 அங்குலம் நீளம் வரை வளரக்கூடியது. இதில் பெண் பச்சோந்திகள் பொதுவாக ஆண்களை விடச் சிறியனவாக இருக்கும். பாலின வேறுபாடு காணப்படும் சிறுத்தைப் பச்சோந்தியில் ஆண் பச்சோந்தி பெண் பச்சோந்தியினை விடஈர்க்கக்கூடிய வண்ணத்துடன் பெரிய உடலைக் கோண்டுள்ளது.[10] நிறம் இருப்பிடத்தைப் பொறுத்து மாறுபடும். மேலும் சிறுத்தை பச்சோந்திகளின் வெவ்வேறு வண்ண வடிவங்கள் பொதுவாக 'உள்ளூர் வகை' என்று குறிப்பிடப்படுகின்றன. இவை காணப்படும் புவியியல் இருப்பிடத்தின் பெயரால் பெயரிடப்பட்டுள்ளன. நோசி பீ, அங்கிபி மற்றும் அம்பன்ஜா பகுதிகளைச் சேர்ந்த சிறுத்தைப் பச்சோந்திகள் பொதுவாக நீல நிறத்திலும், அம்பிலோப், அண்ட்சிரனனா மற்றும் சம்பாவாவைச் சேர்ந்தவை சிவப்பு, பச்சை அல்லது ஆரஞ்சு நிறத்திலும் இருக்கும். மரோண்டெத்ரா மற்றும் தமாதாவ் பகுதிகளில் காணப்படும் பச்சோந்திகள் முதன்மையாகச் சிவப்பு நிறத்தில் காணப்படும். பிற வண்ணங்களில் பிராந்திய வேறுபாடுகளுடனும் காணப்படுகின்றன. பெண் பச்சோந்திகள் பொதுவாக இளஞ்சிவப்பு அல்லது பிரகாசமான ஆரஞ்சு நிறத்தில் காணப்படும் இவை எங்கு இருந்தாலும், வெவ்வேறு வண்ணங்களில் வடிவங்களில் சிறிய வேறுபாடுகளுடன் காணப்படும்.

அனைத்துப் பச்சோந்திகளையும் போலவே, சிறுத்தை பச்சோந்திகளும் கால்விரலில் ஒரு சிறப்பு அமைப்பினைக் கொண்டுள்ளன. ஒவ்வொரு காலிலும், ஐந்து கால்விரல்கள் இரண்டு விரல்கள் ஒன்றாகவும் மூன்று விரல்கள் ஒன்றாகவும் என இரண்டு குழுவாக இணைக்கப்பட்டுள்ளன. மூன்று விரல்களின் இணைப்புக் குழு சிறுத்தை பச்சோந்தியைக் குறுகிய கிளைகளில் இறுக்கமான பிடியை அனுமதிக்கின்றன. ஒவ்வொரு கால்விரலிலும் ஒரு கூர்மையான நகம் உள்ளது. இது ஏறும் போது பட்டை போன்ற மேற்பரப்புகளில் இழுவைப் பெறுகிறது. முன்னங்கால்களில், வெளிப்புறத்தில் இரண்டு கால்விரல்கள் உள்ளன (ஒவ்வொரு காலின் வெளிப்பக்கத்தில் பக்கத்திலும், உள்ளே மூன்று (நடுத்தர). பின் கால்களில், பின்னங் கால்களில் இது தலைகீழாக உள்ளது. இரண்டு கால்விரல்கள் நடுத்தரமாகவும், மூன்று தனியாக இணைக்கப்பட்டுள்ளன.

சிறுத்தைப் பச்சோந்திகள் மிக நீண்ட நாக்குகளைக் கொண்டுள்ளன (சில நேரங்களில் இவற்றின் உடல் நீளத்தை விட நீளமாக இருக்கும்). இவை இரையைப் பிடிக்க வாயிலிருந்து விரைவாக விரிவடையும் திறன் கொண்டவை. இவை பெரும்பாலும் நில வாழ் முதுகெலும்பற்ற விலங்குகளையும் மிகவும் அரிதாகவே தாவரப் பொருட்களையும் உண்ணும்.[11] நாக்கின் முனையில் இரை ஒட்டியவுடன், விரைவாக வாயினுள் இழுக்கப்படுகிறது. சிறுத்தை பச்சோந்தியின் வலுவான தாடைகள் உணவினை நசுக்கி நுகர உதவுகின்றன.

பரவல்

தொகு

வரம்பு

தொகு

சிறுத்தைப் பச்சோந்திகள் மடகாசுகரை பூர்வீகமாகக் கொண்டவை. இந்தச் சிற்றினம் நாட்டின் கிழக்கு மற்றும் வடகிழக்குப் பகுதிகளின் தாழ் நிலப் பகுதிகளில் பரவலாகக் காணப்படுகிறது.[1] மேலும், இது ரீயூனியனிலும் மொரீசியசிலும், சமீபத்தில் அமெரிக்க மாநிலமான புளோரிடாவில் செல்லப்பிராணி வர்த்தகம் மூலம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.[1][5]

வாழ்விடம்

தொகு

சிறுத்தைப் பச்சோந்தி கிழக்கில் மழைக்காடுகளின் பகுதிகளிலும், வடமேற்கில் வறண்ட காடு/சவன்னா பகுதிகளிலும் வாழ்கிறது.[12] இப்பரப்பில் உள்ள முதன்மை தாவரச் சமூகங்கள் மனித நடவடிக்கைகளால் சீரழிக்கப்பட்டுள்ளபோதிலும் சிறுத்தை பச்சோந்திகள் இச்சீரழிவினைத் தாங்கி வளர்வதாகத் தோன்றுகிறது. மேலும் இவை சாலைகள், வீடுகள், தோட்டங்களுக்கு அருகிலும் காணப்படுகின்றன[1][12]

நடத்தையும் சூழலியலும்

தொகு

சிறுத்தை பச்சோந்தி இனச்சேர்க்கை காலத்தினைத் தவிரப் பிற நேரங்களில் மிகவும் ஆக்ரோசமானது. இவை தமது வாழ்க்கையின் பெரும்பகுதியைத் தனிமையில் செலவிடுகிறது. இரண்டு ஆண்கள் தங்களுக்குள் தொடர்பு கொள்ளும்போது, அவை நிறத்தை மாற்றி தங்கள் உடலை உயர்த்தும், தங்கள் ஆதிக்கத்தை உறுதிப்படுத்த முயற்சிக்கும். பெரும்பாலும் இந்தச் சண்டை சில நிமிடங்களில் முடிவடையும். தோல்வியுற்ற ஓணான் பின்வாங்கி, வறண்ட மற்றும் இருண்ட நிறங்களுக்கு மாறும். இரண்டில் ஒன்று பின்வாங்காமல் சண்டை தொடரும் போது, உடல் ரீதியான சண்டை ஏற்படுகிறது.[13] சிறுத்தைப் பச்சோந்திகள் வெப்ப மாறுபாட்டினைத் தாங்கக்கூடிய தகவமைப்பினைப் பெற்றுள்ளன. எனவே இவை சூடாக வேண்டியிருக்கும் போது சூரிய ஒளியிலோ அல்லது விளக்கு ஒளியிலோ தம் வெப்பநிலையினை உயர்த்திக்கொள்கின்றன.[14] சிறுத்தைப் பச்சோந்திகள் ஒரு பெரிய வெப்பச் சரிநிகர் மண்டலத்தைக் கொண்டுள்ளன. அதாவது இவை ஒரு வெப்ப நிலை வரம்பைக் கொண்டுள்ளன. இந்த வரம்பிற்குள் இவை தங்கள் உடல் வெப்பநிலையை கொண்டுள்ளன. எனவே இவை பகல் நேரத்தில் 24-36 பாகை செல்சியசிற்குள் உள்ளவாறு தங்கள் உடல் வெப்பநிலை மாற்றிக்கொள்ளும்.[15]

இனப்பெருக்கம்

தொகு
 
முட்டையுடன் கூடிய பெண் சிறுத்தைப் பச்சோந்தி, ரீயூனியன் தீவு

சிறுத்தைப் பச்சோந்திகள் குறைந்தபட்சம் ஏழு மாத வயதில் பாலியல் முதிர்ச்சியை அடைகின்றன.[16]

முட்டைகளுடன் காணப்படும் பெண் பச்சோந்திகள் அடர் பழுப்பு அல்லது கருப்பு நிறத்தில் ஆரஞ்சு நிற கோடுகளுடன் காணப்படும். ஆண்களுடன் இனச்சேர்க்கை செய்யும் எண்ணம் இல்லை என்பதைக் இந்நிறமாற்றம் உணர்த்துகிறது. மேலும், இத்தகைய பெண் பச்சோந்திகள் தற்காப்பாதுகாப்பு எண்ணத்துடன் செயல்படும். மேலும் பெண்களிடம் நெருங்கும் ஆண்களைத் தாக்குவதற்காகக் கடிக்கலாம். இத்தகைய பெண் பச்சோந்திகளின் நிறமும் வடிவமும் பச்சோந்தியின் நிறச் சூழ்நிலையினைப் பொறுத்து மாறுபடும். இது இடங்களுக்கு இடையேயான வேறுபாட்டைக் கண்டறிய ஒரு வழியை வழங்குகிறது.[17]

பெண் பச்சோந்திகள் பொதுவாக முட்டையிட்ட பிறகு இரண்டு முதல் மூன்று ஆண்டுகள் மட்டுமே வாழ்கின்றன (ஐந்து முதல் எட்டு முறை முட்டையிடும்) ஏனெனில் இவற்றின் உடலில் ஏற்படும் அழுத்தம். வளர்ச்சியின் போது உணவு மற்றும் ஊட்டச்சத்து நுகர்வு ஆகியவற்றைப் பொறுத்து மாறுகிறது. பெண் பச்சோந்திகள் ஒருமுறை 10 முதல் 40 முட்டைகள் வரை இடும். பொதுவாக முட்டைகள் 240 நாட்களில் பொரிக்கின்றன.

வளரிடத்தில்

தொகு

சிறுத்தைப் பச்சோந்தி இதன் நிறம், பெரிய அளவு மற்றும் வளரிடத்தில் இனப்பெருக்கம் செய்வதற்கான தயார்நிலை காரணமாகப் பன்னாட்டுச் செல்லப்பிராணி வர்த்தகத்திற்கு மிகவும் விரும்பப்படுகிறது.[18] சிறுத்தைப் பச்சோந்திகள் இவற்றின் வியக்கத்தக்க நிறம் காரணமாகச் செல்லப்பிராணிகளாக வளர்க்கப்படுகின்றன. பிற பச்சோந்திகளை விட இவற்றைப் பராமரிப்பது எளிதானது என்றாலும், சிறுத்தை பச்சோந்திகள் பொதுவாக வளரிடத்தில் மேலாண்மைச் செய்வது சவாலானதாகக் கருதப்படுகின்றன.[19] காட்டில் வாழும் சிறுத்தை பச்சோந்திகள் ஒரு குறுகிய கால உயிரினமாகும். சில காடுகளில் ஒரு வருடத்திற்கு மேலாகவும் உயிர்வாழ்கின்றன.[4][12] வளரிடத்தில் பச்சோந்திகள் நீண்ட காலம் வாழக்கூடும். நல்ல கவனிப்புடன் வளர்க்கப்படும் பெண் பச்சோந்திகள் 3 ஆண்டுகள் வரை வாழ முடியும். ஆண்கள் 5 முதல் 7 ஆண்டுகள் வரை வாழலாம்.[19][20]

படம்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 Jenkins, R.K.B.; Andreone, F.; Andriamazava, A.; Anjeriniaina, M.; Brady, L.; Glaw, F.; Griffiths, R.A.; Rabibisoa, N. et al. (2011). "Furcifer pardalis". IUCN Red List of Threatened Species 2011: e.T172955A6947909. doi:10.2305/IUCN.UK.2011-2.RLTS.T172955A6947909.en. https://www.iucnredlist.org/species/172955/6947909. பார்த்த நாள்: 17 August 2021. 
  2. "Synonyms of Panther Chameleon (Furcifer pardalis)". Encyclopedia of Life. 
  3. Furcifer pardalis at the Reptarium.cz Reptile Database
  4. 4.0 4.1 Andreone, F.; Guarino, F. M.; Randrianirina, J. E. (2005). "Life history traits, age profile, and conservation of the panther chameleon, Furcifer pardalis (Cuvier 1829), at Nosy Be, NW Madagascar" (PDF). Tropical Zoology 18 (2): 209–225. doi:10.1080/03946975.2005.10531221. Bibcode: 2005TrZoo..18..209A. http://fupress.net/index.php/tropicalzoology/article/download/124/122. பார்த்த நாள்: 2014-04-17. 
  5. 5.0 5.1 "WEC456/UW501: Florida's Introduced Reptiles: Veiled Chameleon (Chamaeleo calyptratus), Oustalet's Chameleon (Furcifer oustaleti), and Panther Chameleon (Furcifer pardalis)". edis.ifas.ufl.edu (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-07-10.
  6. Andreone, F.; Guarino, F. M.; Randrianirina, J. E. (2005). "Life history traits, age profile, and conservation of the panther chameleon, Furcifer pardalis (Cuvier 1829), at Nosy Be, NW Madagascar" (PDF). Tropical Zoology 18 (2): 209–225. doi:10.1080/03946975.2005.10531221. Bibcode: 2005TrZoo..18..209A. http://fupress.net/index.php/tropicalzoology/article/download/124/122. பார்த்த நாள்: 2014-04-17. 
  7. "Dictionary.com entry for "chameleon"". Dictionary.reference.com. பார்க்கப்பட்ட நாள் 2013-12-17.
  8. "Up to 11 stunningly colorful chameleon species discovered in Madagascar". Mongabay. 26 May 2015. பார்க்கப்பட்ட நாள் 26 October 2023.
  9. Grbic, D.; Saenko, S.V.; Randriamoria, T.M.; Debry, A.; Raselimanana, A.P.; Milinkovitch, M.C. (2015). "Phylogeography and support vector machine classification of colour variation in panther chameleons". Molecular Ecology 24 (13): 3455–3466. doi:10.1111/mec.13241. பப்மெட்:26011002. Bibcode: 2015MolEc..24.3455G. 
  10. Andreone, F.; Guarino, F.M.; Randrianirina, J.E. (2005). "Life history traits, age profile, and conservation of the panther chameleon, Furcifer pardalis (Cuvier 1829), at Nosy Be, NW Madagascar". Tropical Zoology 18 (2): 209-225. doi:10.1080/03946975.2005.10531221. Bibcode: 2005TrZoo..18..209A. 
  11. "Furcifer pardalis (English common name not available)". Animal Diversity Web.
  12. 12.0 12.1 12.2 The Panther chameleon : color variation, natural history, conservation, and captive management. Gary Ferguson. Malabar, Fla.: Krieger Pub. Co. 2004. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-57524-194-3. இணையக் கணினி நூலக மைய எண் 52418030.{{cite book}}: CS1 maint: others (link)
  13. Andreone, F.; Guarino, F. M.; Randrianirina, J. E. (2005). "Life history traits, age profile, and conservation of the panther chameleon, Furcifer pardalis (Cuvier 1829), at Nosy Be, NW Madagascar" (PDF). Tropical Zoology 18 (2): 209–225. doi:10.1080/03946975.2005.10531221. Bibcode: 2005TrZoo..18..209A. http://fupress.net/index.php/tropicalzoology/article/download/124/122. பார்த்த நாள்: 2014-04-17. 
  14. Ferguson, Gary W.; Gehrmann, William H.; Chen, Tai C.; Holick, Michael F. (2005). "Vitamin D-content of the Eggs of the Panther Chameleon Furcifer pardalis: its Relationship to UVB Exposure/vitamin D-condition of Mother, Incubation and Hatching Success.". Journal of Herpetological Medicine and Surgery 15 (4): 9–13. doi:10.5818/1529-9651.15.4.9. 
  15. Ferguson, Gary W.; Gehrmann, William H.; Chen, Tai C.; Holick, Michael F. (1996). "Indoor husbandry of the panther chameleon Chamaeleo [Furcifer] pardalis: Effects of dietary vitamins A and D and ultraviolet irradiation on pathology and life-history traits.". Zoo Biology 15 (3): 279–299. doi:10.1002/(SICI)1098-2361(1996)15:3<279::AID-ZOO7>3.0.CO;2-8. 
  16. Andreone, F.; Guarino, F. M.; Randrianirina, J. E. (2005). "Life history traits, age profile, and conservation of the panther chameleon, Furcifer pardalis (Cuvier 1829), at Nosy Be, NW Madagascar" (PDF). Tropical Zoology 18 (2): 209–225. doi:10.1080/03946975.2005.10531221. Bibcode: 2005TrZoo..18..209A. http://fupress.net/index.php/tropicalzoology/article/download/124/122. பார்த்த நாள்: 2014-04-17. 
  17. Andreone, F.; Guarino, F. M.; Randrianirina, J. E. (2005). "Life history traits, age profile, and conservation of the panther chameleon, Furcifer pardalis (Cuvier 1829), at Nosy Be, NW Madagascar" (PDF). Tropical Zoology 18 (2): 209–225. doi:10.1080/03946975.2005.10531221. Bibcode: 2005TrZoo..18..209A. http://fupress.net/index.php/tropicalzoology/article/download/124/122. பார்த்த நாள்: 2014-04-17. 
  18. Andreone, F.; Guarino, F.M.; Randrianirina, J.E. (2005). "Life history traits, age profile, and conservation of the panther chameleon, Furcifer pardalis (Cuvier 1829), at Nosy Be, NW Madagascar". Tropical Zoology 18 (2): 209–225. doi:10.1080/03946975.2005.10531221. Bibcode: 2005TrZoo..18..209A. 
  19. 19.0 19.1 "Panther Chameleon". Chameleon Forums (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-05-12.
  20. Healey, Mariah. "Panther Chameleon Care Sheet". ReptiFiles (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-01-18.

மேலும் வாசிக்க

தொகு
  • Ferguson, Gary W.; Gehrmann, William H.; Karsten, Kristopher B. (January 2003). "Do panther chameleons bask to regulate endogenous vitamin D3 production?". Physiological and Biochemical Zoology 76 (1): 52–59. doi:10.1086/374276. பப்மெட்:12695986. 
  • Dierenfeld, Ellen S.; Norkus, Edward B.; Carroll, Kathryn; Ferguson, Gary W. (27 June 2002). "Carotenoids, vitamin A, and vitamin E concentrations during egg development in panther chameleons (Furcifer pardalis)". Zoo Biology 21 (3): 295–303. doi:10.1002/zoo.10039. 

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிறுத்தைப்_பச்சோந்தி&oldid=4050542" இலிருந்து மீள்விக்கப்பட்டது