சிறுநீர்ப்பை இறக்கம்

சிறுநீர்ப்பை யோனிக்கு இடம்பெயர்தல்

சிறுநீர்ப்பை இறக்கம் (cystocele) என்பது ஒரு பெண்ணின் சிறுநீர்ப்பை அவளது பிறப்புறுப்புக்குள் இடம்பெயர்ந்து தொங்கிவிடும் மருத்துவ நிலையை குறிக்கிறது.[1][5]. சிலருக்கு நோயின் அறிகுறிகள் எதுவும் தெரியாமல் இருக்கலாம்[6]. மற்றவர்களுக்கு சிறுநீர் கழிப்பதில் பிரச்சினை, கட்டுப்பாடிழந்த சிறுநீர்ப்போக்கு , சிறுநீர் அடங்காமை போன்ற அறிகுறிகள் தெரியலாம்[1]. இதனால் சிறுநீர்ப்பாதைத் தொற்று மற்றும் சிறுநீர் தக்கவைக்க இயலாமை போன்ற சிக்கல்கள் உண்டாகும்.[1][7]. மேலும் சிறுநீர்ப்பை இறக்கமும் பிறப்புறுப்பில் அது தொங்கிவிடுவதும் ஒரே நேரத்தில் ஒன்றாகவே நிகழ்கின்றன.[8]. சிறுநீர்ப்பை இறக்கம் வாழ்க்கைத் தரத்தை எதிர்மறையாக பாதிக்கிறது.[9][10].

சிறுநீர்ப்பை இறக்கம்
Cystocele
ஒத்தசொற்கள்சிறுநீர்ப்பை நீட்சி, தொங்கும் சிறுநீர்ப்பை,[1] முன்புற யோனி சுவர் சரிவு[2]
73 வயது பெண்ணில் யோனி வழியாக நீண்டிருக்கும் சிறுநீர்ப்பை.
பலுக்கல்
சிறப்புசிறுநீரியல், மகளிர் மருத்துவவியல்[3]
அறிகுறிகள்சிறுநீர் கழிப்பதில் இடர், முழுமையடையாத சிறுநீர்ப்போக்கு, கட்டுப்பாடிழந்த சீறுநீர்ப்போக்கு, அடிக்கடி சிறுநீர் கழித்தல்[1]
சிக்கல்கள்சிறுநீர் தேக்கம்[1]
வகைகள்தரம் 1, 2, 3[1]
சூழிடர் காரணிகள்குழந்தை பிறப்பு, மலச்சிக்கல், நாள்பட்ட இருமல், பளு தூக்குதல், அதிக பருமன்[1]
நோயறிதல்அறிகுறிகள் மற்றும் பரிசோதனை[1]
ஒத்த நிலைமைகள்பார்தோலின் நீர்க்கட்டி, நீர்க்கட்டி, சிறுநீர்க்குழாய் குழலுறுப்பு[4]
சிகிச்சைதக்கை வளையச் சிகிச்சை, இடுப்புத் தசை பயிற்சிகள் அல்லது அறுவை சிகிச்சை[1]
நிகழும் வீதம்50 வயதுக்கு மேற்பட்ட பெண்களில் 33%

குழந்தைப்பிறப்பு, மலச்சிக்கல், நாள்பட்ட இருமல், கனமான பொருள்களைத் தூக்குதல், கருப்பை நீக்க அறுவை சிகிச்சை மரபியல் போன்றவை சிறுநீர்ப்பை இறக்கம் ஏற்படக் காரணங்களாக கூறப்படுகின்றன. அதிக உடல் எடை கொண்ட பெண்களுக்கும் இந்த நோய் தோன்றுகிறது[1][2][6]. இந்நோயால் சிறுநீர்ப்பை மற்றும் யோனிக்கு இடையில் இருக்கும் தசைகள் மற்றும் இணைப்பு திசுக்கள் பலவீனப்படுகின்றன[1]. பொதுவாக வெளிப்படும் அறிகுறிகள் மற்றும் பரிசோதனையை அடிப்படையாகக் கொண்டு நோயறிதல் செய்யப்படுகிறது.[1]

சிறுநீர்ப்பை இறக்க நோய் அறிகுறிகள் தெரிந்தால் அப்பெண் கனமான பொருட்களைத் தூக்குதல் அல்லது கடினமான வேலைகளைத் தவிர்ப்பது நல்லது.[1]. மிக உறுதியான நோய் அறிகுறிகளைக் கொண்டவர்கள் யோனிக்குள் தக்கை வளையச் சிகிச்சை, இடுப்புத் தசை பயிற்சிகள் அல்லது அறுவை சிகிச்சை போன்ற சிகிச்சைகள் பரிந்துரைக்கப்படுகின்றன[1]. கோல்போராஃபி என்ற பெயரால் அழைக்கப்படும் யோனித்தையல் முறையே இந்த அறுவை சிகிச்சையாகும்[11]. பெண்களின் வயதுக்கு ஏற்ப இந்த நோயின் நிலை மிகவும் பொதுவானதாகிறது. [1]மேலும் 50 வயதிற்கு மேற்பட்ட பெண்களில் மூன்றில் ஒரு பகுதியினர் இந்நோயினால் பாதிக்கப்படுகின்றனர்.[5]

அறிகுறிகள்

தொகு

சிறுநீர்ப்பை இறக்க நோயின் அறிகுறிகள் பின்வருமாறு:

  • யோனியில் வீக்கம்
  • யோனியில் இருந்து ஏதோ விழுகிறது போன்ற உணர்வு ஏற்படுதல்
  • இடுப்பு முழுவதும் கனமாக அல்லது கடினமாக உணர்தல்[1][12]
  • சிறுநீர் கழிக்கும் போது ஆரம்பத்தில் சிரமம் ஏற்படுவது.
  • சிறுநீர் கழித்த பின்பும் முழுமையாக சிறுநீர் கழிக்கப்படாத உணர்வு உண்டாதல்.
  • சிறுநீர் அடிக்கடி கழித்தல் அல்லது அவசரமாக சிறுநீர் கழித்தல்[12][1].
  • மலம் அடங்காமல் அடிக்கடி மலம் கழித்தல்[13]
  • சிறுநீர் பாதை நோய்த்தொற்றுகள் ஏற்படுதல்.[7][12]
  • முதுகு மற்றும் இடுப்பு வலி உண்டாதல்.
  • உடல் சோர்வு உண்டாதல்.
  • உடலுறவின் போது வலிமிகுதியாக இருத்தல்[12].
  • இரத்தப்போக்கு உண்டாதல்[14]

பெண்களின் சிறுநீர்ப்பை அதன் இயல்பான நிலையில் இருந்து யோனிக்கு கீழ் இறங்கி தொங்கி விடுதலால் சிறுநீர் கழிப்பதில் கடினமான உணர்வு மற்றும் சிறுநீர்ப்பையில் சிறுநீர் கழித்த பின்பும் முழுமையாக சிறுநீர் கழிக்கப்படாத உணர்வும் உண்டாகும்.[1]

நோயின் விளைவுகள்

தொகு

சிறுநீர்ப்பை இறக்கம் நோயினால் சிறுநீர் தக்கவைக்க இயலாமை, சிறுநீர் பாதை நோய்த்தொற்றுகள் மற்றும் சிறு நீர் கட்டுப்படுத்த இயலாமை போன்ற பாதிப்புகள் ஏற்படும்[1][7]. முன்புற யோனி சுவர் உண்மையில் யோனியின் திறப்பில் இறங்கி நீண்டுள்ளது. இது பாலியல் செயல்பாடுகளில் தலையிடக்கூடும்[6]. சிறுநீரைத் தக்கவைத்துக்கொள்பவர்களுக்கு தொடர்ச்சியான சிறுநீர் பாதை நோய்த்தொற்றுகள் பொதுவானவையாகும்[15]. கூடுதலாக சிறுநீர்ப்பை இறக்க நோய்க்கு சிகிச்சையளிக்க முடியும் என்றாலும் சிகிச்சைகள் சில சிக்கலான அறிகுறிகளைப் போக்காது, இதனால் அப்பெண்களின் வாழ்க்கைத் தரம் பாதிக்கக்கூடும். அவர்கள் வீட்டைவிட்டு பொது இடங்களுக்கு செல்வதைத் தவிர்த்து வாழ்கிறார்கள்.

காரணம்

தொகு

பெண்ணின் சிறுநீர்ப்பை மற்றும் யோனிக்கு இடையில் உள்ள தசைகள் திசுப்படலம் தசைநாண்கள் மற்றும் இணைப்பு திசுக்கள் பலவீனமடையும் போது அல்லது பிரியும்போது சிறுநீர்ப்பை இறக்கம் ஏற்படுகிறது [2][16]. ஒன்று, இரண்டு அல்லது மூன்று யோனி சுவர் இணைப்புளின் தோல்விகள் காரணமாக சிறுநீர்ப்பை இறக்க நோயின் வெவ்வேறு வகைகள் உருவாகின்றன.. யோனி சுவரின் மிகைநீட்சியினால் நடுக்கோடு சிறுநீர்ப்பை இறக்கம், இணைப்புத் திசுக்கள் பிரிவதால் புறயோனி சிறுநீர்ப்பை இறக்கம், யோனியின் உச்சியிலுள்ள தசைநாண் பிரிவதால் குறுக்குவெட்டு சிறுநீர்ப்பை இறக்கம் போன்ற வகைகள் உருவாகின்றன [2]. குழந்தை பெற்றெடுத்த 40-60% பெண்களுக்கு இடுப்பு இடப்பெயர்ச்சி உள்ளது[17][18]. இந்நோய் பாதிப்புள்ள பெண்களிடம் தசைக் காயங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இந்த காயங்கள் குழந்தை பெற்றெடுக்காத பெண்களை விட பிரசவித்த பெண்களில் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது.

மேற்கோள்கள்

தொகு
  1. 1.00 1.01 1.02 1.03 1.04 1.05 1.06 1.07 1.08 1.09 1.10 1.11 1.12 1.13 1.14 1.15 1.16 1.17 1.18 1.19 "Cystocele (Prolapsed Bladder)". National Institute of Diabetes and Digestive and Kidney Diseases. March 2014. Archived from the original on 4 October 2017. பார்க்கப்பட்ட நாள் 25 October 2017.
  2. 2.0 2.1 2.2 2.3 Baggish, Michael S.; Karram, Mickey M. (2016). Atlas of pelvic anatomy and gynecologic surgery (4th ed.). Philadelphia, PA: Elsevier. pp. 599–646. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780323225526. இணையக் கணினி நூலக மைய எண் 929893382.
  3. Liedl, Bernhard; Inoue, Hiromi; Sekiguchi, Yuki; Gold, Darren; Wagenlehner, Florian; Haverfield, Max; Petros, Peter (February 2017). "Update of the Integral Theory and System for Management of Pelvic Floor Dysfunction in Females". European Urology Supplements 17 (3): 100–108. doi:10.1016/j.eursup.2017.01.001. 
  4. Federle, Michael P.; Tublin, Mitchell E.; Raman, Siva P. (2016). ExpertDDx: Abdomen and Pelvis E-Book (in ஆங்கிலம்). Elsevier Health Sciences. p. 626. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780323443128. Archived from the original on 2017-10-25.
  5. 5.0 5.1 Firoozi, Farzeen (2014). Female Pelvic Surgery (in ஆங்கிலம்). Springer. p. 73. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781493915040. Archived from the original on 2017-10-25.
  6. 6.0 6.1 6.2 Williams, J. Whitridge (2012). Hoffman, Barbara L. (ed.). Williams gynecology (2nd ed.). New York: McGraw-Hill Medical. pp. 647–653. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780071716727. இணையக் கணினி நூலக மைய எண் 779244257.
  7. 7.0 7.1 7.2 Hamid, Rizwan; Losco, Giovanni (2014-09-01). "Pelvic Organ Prolapse-Associated Cystitis" (in en). Current Bladder Dysfunction Reports 9 (3): 175–180. doi:10.1007/s11884-014-0249-4. பன்னாட்டுத் தர தொடர் எண்:1931-7212. பப்மெட்:25170365. 
  8. "Cystoceles, Urethroceles, Enteroceles, and Rectoceles – Gynecology and Obstetrics – Merck Manuals Professional Edition" (in en-US). Merck Manuals Professional Edition. February 2017 இம் மூலத்தில் இருந்து 2017-12-23 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20171223042620/https://www.merckmanuals.com/professional/gynecology-and-obstetrics/pelvic-relaxation-syndromes/cystoceles,-urethroceles,-enteroceles,-and-rectoceles. 
  9. "Cystocele (Fallen Bladder)". www.clevelandclinic.org. Archived from the original on 2017-12-29. பார்க்கப்பட்ட நாள் 2017-12-28. {{cite web}}: Unknown parameter |= ignored (help)
  10. Deng, Donna Y.; Rutman, Matthew; Rodriguez, Larissa; Raz, Shlomo (2005-09-01). "Correction of cystocele" (in en). BJU International 96 (4): 691–709. doi:10.1111/j.1464-410x.2005.05760.x. பன்னாட்டுத் தர தொடர் எண்:1464-410X. பப்மெட்:16104940. https://archive.org/details/sim_bju-international_2005-09_96_4/page/691. 
  11. Halpern-Elenskaia, Ksenia; Umek, Wolfgang; Bodner-Adler, Barbara; Hanzal, Engelbert (2017-12-06). "Anterior colporrhaphy: a standard operation? Systematic review of the technical aspects of a common procedure in randomized controlled trials" (in en). International Urogynecology Journal 29 (6): 781–788. doi:10.1007/s00192-017-3510-5. பன்னாட்டுத் தர தொடர் எண்:0937-3462. பப்மெட்:29214325. 
  12. 12.0 12.1 12.2 12.3 Henry, Norma Jean E (2016). RN adult medical surgical nursing review module (10th ed.). Sitwell, KS: Assessment Technologies Institute. pp. 417–419. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781565335653. இணையக் கணினி நூலக மைய எண் 957778184.
  13. Barber, Matthew D.; Maher, Christopher (2013-11-01). "Epidemiology and outcome assessment of pelvic organ prolapse" (in en). International Urogynecology Journal 24 (11): 1783–1790. doi:10.1007/s00192-013-2169-9. பன்னாட்டுத் தர தொடர் எண்:0937-3462. பப்மெட்:24142054. 
  14. Cystocele Repair: Overview, Technique, Periprocedural Care. 2017-06-27. https://emedicine.medscape.com/article/1848220-overview. 
  15. Services, Department of Health & Human (April 2017). "Bladder prolapse" (in en). Victoria State Government. https://www.betterhealth.vic.gov.au/health/conditionsandtreatments/bladder-prolapse. 
  16. Lamblin, Géry; Delorme, Emmanuel; Cosson, Michel; Rubod, Chrystèle (2016-09-01). "Cystocele and functional anatomy of the pelvic floor: review and update of the various theories" (in en). International Urogynecology Journal 27 (9): 1297–1305. doi:10.1007/s00192-015-2832-4. பன்னாட்டுத் தர தொடர் எண்:0937-3462. பப்மெட்:26337427. 
  17. Robinson, Dudley; Thiagamoorthy, Gans; Cardozo, Linda (January 2018). "Review: Post-hysterectomy vaginal vault prolapse". Maturitas 107: 39–43. doi:10.1016/j.maturitas.2017.07.011. பப்மெட்:29169578. 
  18. "Genital prolapse fact sheet | Women's Health Queensland Wide". womhealth.org.au (in ஆங்கிலம்). April 2011. Archived from the original on 2017-12-22. பார்க்கப்பட்ட நாள் 2017-12-17. {{cite web}}: Unknown parameter |= ignored (help)

புற இணைப்புகள்

தொகு
வகைப்பாடு
வெளி இணைப்புகள்
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிறுநீர்ப்பை_இறக்கம்&oldid=3582341" இலிருந்து மீள்விக்கப்பட்டது