சிற்றாலா

பறவை இனம்

சிறிய ஆலா அல்லது சிற்றாலா (Sternula albifrons) என்பது நீள் சிறகு கடற்பறவை குடும்பத்தைச் சார்ந்த ஒரு கடற்பறவை ஆகும்.[2]

சிற்றாலா
Adult S. a. sinensis in breeding plumage, Australia
உயிரியல் வகைப்பாடு e
திணை:
விலங்கு
தொகுதி:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
இனம்:
S. albifrons
இருசொற் பெயரீடு
Sternula albifrons
(Pallas, 1764)
வேறு பெயர்கள்

Sterna albifrons

Sternula albifrons albifrons

இந்த பறவை மித மற்றும் வெப்பமண்டல ஐரோப்பாவிலும் ஆசியாவிலும் கடற்கரைகள் மற்றும் உள்நாட்டு நீர்நிலைகளில் இனப்பெருக்கம் செய்கிறது. இது குளிர் காலத்தில் தெற்கே உள்ள துணை வெப்பமண்டல மற்றும் வெப்பமண்டல பெருங்கடல்களில் தென்னாப்பிரிக்கா மற்றும் ஆத்திரேலியா வரை வலசை போகிறது.

இதில் மூன்று கிளை இனங்கள் உள்ளன. ஐரோப்பாவில் இருந்து வட ஆபிரிக்கா மற்றும் மேற்கு ஆசியா வரை அல்பிஃப்ரான்ஸ் (albifrons), மேற்கு மற்றும் மத்திய ஆப்பிரிக்காவின் கினியே (guineae), கிழக்கு ஆசியாவில் சினென்சிஸ் (sinensis) (தெ.கி உருசியா முதல் ஜப்பான், தெ.கி ஆசியா, பிலிப்பைன்ஸ்) மற்றும் ஆஸ்திரேலியா மற்றும் நியூ கினியாவின் வடக்கு மற்றும் கிழக்கு கடற்கரைகளில் காணப்படுகிறது.[3]

தோற்றம்

தொகு

மைனா அளவு உள்ள சிறிய ஆலாவான இது 21-25 செ.மீ நீளம் இருக்கும். இதன் இறக்கை அகலம் 41-47 செ.மீ ஆகும். இதன் அலகு ஆரஞ்சு நிறத்திலும், விழப்படலம் பழுப்பு நிறத்திலும், கால்கள் ஆரஞ்சு மஞ்சள் நிறத்தில் இருக்கும். மற்ற ஆலாக்களில் இருந்து இதன் சிறிய உருவத்தால் எளிதாக வேறுபடுத்திக் காண இயலும். இது விரைவாக இறக்கையைடித்துப் பறக்கும் தன்மைக் கொண்டது. கோடைக் காலத்தில் இனப்பெருக்கத்திற்குத் தயாராக உள்ள முதிர்ந்த பறவைக்கு தலையில் கருந்தொப்பி போன்ற கறுப்பு நிறம் பளிச்சென்று தெரியும். நெற்றி வெள்ளையாக தெரியும். அலகு கருப்பு முனையுடைய மஞ்சளாக இருக்கும். இனப்பெருக்கத்திற்குத் தயாராக இல்லாத (குளிர்காலத்தில்) வளர்ந்த பறவையின் தலை உச்சி கருப்பும் வெண்மையுமாக இருக்கும். அலகு கருப்பாக மாறும். கால்களும் நிறம் குன்றும்.

இனப்பெருக்கம்

தொகு

மற்ற வெள்ளை ஆலாக்கள் போலவே, சிற்றாலாக்கள் கடல் நீரில் மூழ்கி மீனை வேட்டையாடுகிறது. ஆண் பறவை பெண் பறவைக்கு மீனை பரிசாக கொடுத்து காதலூடாட்டத்தில் ஈடுபடுகிறது.

சிற்றாலாக்கள் சரளை அல்லது கூழாங்கல் கடற்கரைகள் மற்றும் தீவுகளில் கூட்டமாக இனப்பெருக்கம் செய்கிறது. இது தரையில் இரண்டு முதல் நான்கு முட்டைகள் வரை இடும். அனைத்து வெள்ளை ஆலாகளை போலவே, இது அதன் கூடு மற்றும் குஞ்சுகளை தற்காத்துக் கொள்ளும் மேலும் ஊடுருவுபவற்றைத் தாக்கும்.

காட்சியகம்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. BirdLife International (2016). "Sternula albifrons". செம்பட்டியல் (பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம்) 2016: e.T22694656A86737634. doi:10.2305/IUCN.UK.2016-3.RLTS.T22694656A86737634.en. http://www.iucnredlist.org/details/22694656/0. பார்த்த நாள்: 14 January 2018. 
  2. Bridge, E. S.; Jones, A. W.; Baker, A. J. (2005). "A phylogenetic framework for the terns (Sternini) inferred from mtDNA sequences: implications for taxonomy and plumage evolution". Molecular Phylogenetics and Evolution 35 (2): 459–469. doi:10.1016/j.ympev.2004.12.010. பப்மெட்:15804415 இம் மூலத்தில் இருந்து 20 July 2006 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20060720204025/http://www2.hawaii.edu/~khayes/Journal_Club/summer2006/Bridge_et_al_2005_MPE.pdf. 
  3. Higgins, P.J. & S.J.J.F. Davies (eds) 1996. Handbook of Australian, New Zealand and Antarctic Birds. Volume 3: Snipe to Pigeons. Oxford University Press, Melbourne. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-19-553070-5

வெளி இணைப்புகள்

தொகு
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Sternula albifrons
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
 
விக்கியினங்கள் தளத்தில் பின்வரும் தலைப்பில் தகவல்கள் உள்ளன:
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிற்றாலா&oldid=3811834" இலிருந்து மீள்விக்கப்பட்டது