சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு
சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு (ஆங்கிலம் Selangor State Executive Council (EXCO); மலாய்: Majlis Mesyuarat Kerajaan Negeri Selangor (MMKN) என்பது மலேசியா சிலாங்கூர் மாநில அரசாங்கத்தின் நிர்வாக ஆட்சிக்குழுவாகும். சிலாங்கூர் சுல்தான் அவர்களால் நியமிக்கப்பட்ட சிலாங்கூர் மந்திரி பெசார் ஆட்சிக் குழுவிற்கு தலைமை தாங்குகிறார். அவர் சிலாங்கூர் மாநில சட்டமன்றத்தில் பெரும்பான்மையைப் பெற்றவராக இருக்க வேண்டும். ஆட்சிக்குழுவில் மாநிலச் செயலாளர், மாநில சட்ட ஆலோசகர் மற்றும் மாநில நிதி அதிகாரி ஆகியோரும் இடம் பெறுகிறார்கள்.
சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு Selangor State Executive Council Majlis Mesyuarat Kerajaan Negeri Selangor | |
---|---|
2023–தற்போது | |
உருவான நாள் | 21 ஆகஸ்டு 2023 |
மக்களும் அமைப்புகளும் | |
அரசுத் தலைவர் | அமிருதீன் சாரி (Amirudin Shari) பாக்காத்தான் அரப்பான் மக்கள் நீதிக் கட்சி |
நாட்டுத் தலைவர் | சுல்தான் சராபுதீன் |
அமைச்சர்களின் மொத்த எண்ணிக்கை | 11 |
உறுப்புமை கட்சி | பட்டியல்
|
சட்ட மன்றத்தில் நிலை | கூட்டணி அரசு 34 / 56 |
எதிர் கட்சி | பட்டியல் |
எதிர்க்கட்சித் தலைவர் | அசுமின் அலி பெரிக்காத்தான் பெர்சத்து |
வரலாறு | |
தேர்தல்(கள்) | சிலாங்கூர் மாநிலத் தேர்தல், 2023 |
Legislature term(s) | 15-ஆவது |
சிலாங்கூர் ஆட்சிக்குழு மலேசிய அமைச்சரவை கட்டமைப்பைப் போன்றதாகும். ஆனாலும் இந்த ஆட்சிக்குழு அளவில் சிறியது. கூட்டாட்சி நடுவண் அரசாங்கத்தின் பொறுப்புகளும், மாநில அரசாங்கத்தின் பொறுப்புகளும் வேறுபடுவதால்; மத்திய மற்றும் மாநில அரசாங்கங்களுக்கு இடையிலேயும் பல துறைகளும் மாறுபடுகின்றன.
சிலாங்கூர் ஆட்சிக்குழு உறுப்பினர்கள் சிலாங்கூர் மந்திரி பெசாரால் தேர்ந்தெடுக்கப்பட்டு சுல்தானால் நியமிக்கப்படுகிறார்கள். சிலாங்கூர் ஆட்சிக்குழுவிற்கு அமைச்சுகள் இல்லை, மாறாக பல குழுக்கள் உள்ளன. ஒவ்வொரு குழுவும் மாநில விவகாரங்கள், செயல்பாடுகள் மற்றும் பல்வகைத் துறைகளைக் கவனித்துக் கொள்ளும். ஆட்சிக்குழுவின் உறுப்பினர்கள் வழக்கமாக ஒரு குழுவின் தலைவராக இருப்பார்கள்.
ஆட்சிக்குழு உறுப்பினர்களின் பட்டியல்
தொகுஅலுவல் சார்ந்த அரசு உறுப்பினர்கள்
தொகுஅரசாங்கப் பதவி | பெயர் |
---|---|
மாநிலச் செயலாளர் | அரிஸ் காசிம் |
மாநிலச் சட்ட ஆலோசகர் | சாலிம் சொயிப் |
மாநில நிதி அதிகாரி | அகமத் பட்சிலி அகமத் தாஜுதீன் |
அமிருதீன் II ஆட்சிக்குழு (2023 தொடக்கம்)
தொகுபாக்காத்தான் (10) | பாரிசான் (1) |
|
2023 ஆகஸ்டு 12-ஆம் தேதி நடைபெற்ற 2023 சிலாங்கூர் மாநிலத் தேர்தலைத் தொடர்ந்து அனைத்து ஆட்சிக்குழு உறுப்பினர்களும் 2023 ஆகஸ்டு 21-ஆம் தேதி பதவியேற்றனர். அவர்களின் மாநில அரசு துறைகள் 2023 ஆகஸ்டு 23-ஆம் தேதி அறிவிக்கப்பட்டன.[1][2]
பெயர் | துறை (நிலைக் குழு) |
கட்சி | சட்டமன்ற தொகுதி |
திகதி | |
---|---|---|---|---|---|
அமிருதீன் சாரி (Amirudin Shari) (மந்திரி பெசார்) |
|
பாக்காத்தான் (பி.கே.ஆர்) |
சுங்கை துவா | 19 சூன் 2018 | |
போர்கான் அமான் சா (Borhan Aman Shah) |
|
தஞ்சோங் சிப்பாட் | 17 செப்டம்பர் 2020 | ||
நசுவான் அலிமி (Najwan Halimi) |
|
கோத்தா அங்கேரிக் | 21 ஆகஸ்டு 2023 | ||
முகமட் பாமி நிகா (Mohammad Fahmi Ngah) |
|
செரி செத்தியா | |||
நிங் சு ஆன் (Ng Sze Han) |
|
பாக்காத்தான் (ஜசெக) |
கின்ராரா | 14 மே 2018 | |
நிங் சூயி லிம் (Ng Suee Lim) |
|
செகிஞ்சான் | 21 ஆகஸ்டு 2023 | ||
ஜமாலியா ஜமாலுதீன் (Jamaliah Jamaluddin) |
|
பண்டார் உத்தாமா | |||
பாப்பாராயுடு வர்மன் (Papparaidu Veraman) |
|
பந்திங் | |||
இசாம் அசிம் ( Izham Hashim) |
|
பாக்காத்தான் (அமாணா) |
பாண்டான் இண்டா | 14 மே 2018 | |
அன்பால் சாரி (Anfaal Saari) |
|
தாமான் டெம்பிளர் | 21 ஆகஸ்டு 2023 | ||
ரிசாம் இசுமாயில் (Rizam Ismail) |
|
தேசிய முன்னணி (அம்னோ) |
சுங்கை ஆயர் தாவார் |
மேலும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ Bernama (2023-08-18). "Selangor MB, exco members to be sworn in on Monday | New Straits Times". NST Online (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2024-01-21.
- ↑ Iskandar, Iylia Marsya (2023-08-23). "Selangor MB announces 10 exco portfolios, takes on five | New Straits Times". NST Online (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2024-01-21.