சிலிசிய வாயில்கள்

சிலிசிய வாயில்கள் (Cilician Gates) அல்லது குலக் கணவாய் என்பது தாரசு மலைத்தொடர் வழியாக சிலிசியாவின் தாழ்வான சமவெளிகளை அனத்தோலிய பீடபூமியுடன் இணைக்கிறது. இது கோகோலுக் ஆற்றின் குறுகிய பள்ளத்தாக்கின் வழியாகும். இதன் மிக உயர்ந்த உயரம் சுமார் 1000 மீ. [2]

சிலிசிய வாயில்கள்
Gülek Boğazı
குலக் கணவாய்
ஏற்றம்1,050 மீ (3,445 அடி)[1]
அமைவிடம்மெர்சின் மாகாணம், துருக்கி
மலைத் தொடர்தாரசு மலைத்தொடர்
ஆள்கூறுகள்37°17′07″N 34°47′10″E / 37.28528°N 34.78611°E / 37.28528; 34.78611
சிலிசிய வாயில்கள் is located in துருக்கி
சிலிசிய வாயில்கள்
சிலிசிய வாயில்கள்

சிலிசிய வாயில்கள் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக ஒரு முக்கிய வணிக மற்றும் இராணுவ மையமாக இருந்து வருகிறது. [3] 20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில், இதன் வழியாக ஒரு குறுகிய பாதை இருப்புப்பாதை அமைக்கப்பட்டது. இன்று, தாரசு-அங்காரா நெடுஞ்சாலை ( இ-90, ஓ-21 ) இவற்றின் வழியாக செல்கிறது.

சிலிசியன் வாயில்களின் தெற்கு முனை தரசிலிருந்து வடக்கே 44 கி.மீ தொலைவில் உள்ளது. வடக்கு முனை கப்படோசியாவுக்கு வழிவகுக்கிறது.

வரலாறு தொகு

கிமு 4,500 ஐச் சேர்ந்த யூமுக்தீப் பகுதி (நவீன மெர்சின்), 23 அடுக்குகளுடன் நுழைவாயிலின் அருகில் குடியேறி உலகின் பழமையான வலுவூட்டப்பட்ட குடியேற்றங்களில் ஒன்றான அதனா பகுதியைக் காக்கிறது. பழங்கால பாதை ஒன்று கழுதை வணிகர்களுக்கான பாதையாக இருந்தது. (சக்கர வாகனங்கள் அல்ல) இட்டைட்டுகள் கிரேக்கர்கள், அலெக்சாந்தர், உரோமானியர்கள், பைசாந்தியர்கள்,சாசானியர்கள், மங்கோலியர்கள் , சிலுவைப்போர் வீரகள் போன்ற அனைவரும் தங்கள் போர்களிம்போது இந்த வழியில் பயணம் செய்துள்ளனர். தாரசின் திருத்தூதர்கள் பவுல், சிலாசு ஆகியோர் சிரியாவிற்கும், சிலிசியாவிற்கும் சென்றபோது இந்த வழியில் சென்றதாக விவிலியம் சாட்சியமளிக்கிறது. கலாத்தியருக்கு எழுதிய திருமுகத்தில் தெர்பே, இலிசுட்ரா மற்றும் கொன்யா நகரங்களைப் பற்றி பேசுகிறது - பவுல் தனது முதல் பயணத்தில் பார்வையிட்ட நகரங்களைப் பற்றியும், (அப்போஸ்தலர் 14; கலா. 1: 2), தங்கள் தேவாலயங்களை பலப்படுத்தும் நோக்கத்துடன், இரண்டாவது பிரசங்கத்தின் ஆரம்பத்தில் பயணம் செய்ததைப் பற்றியும் (அப்போஸ்தலர் 15: 40-41) பேசுகிறது.

அனத்தோலிய பீடபூமியிலிருந்து சிலிசிய சமவெளி 110 கிலோமீட்டர் (68 மைல்) தூரம் கொண்டது. பண்டைய காலங்களில், இது கிட்டத்தட்ட ஐந்து நாட்கள் பயண தூரத்தில் இருந்தது. திருத்தூதர் பவுலின் விவிலியக் கூற்றுப்படி, "ஆறுகளிலிருந்து வரும் ஆபத்துகள்" மற்றும் "கொள்ளையர்களிடமிருந்து வரும் ஆபத்துகள்" பற்றி பேசியுள்ளார் (2 கொரி. 11:26). கிமு 4500 ஆம் ஆண்டில் சிலிசிய வாயில்களின் தென்கிழக்கு முனையில் உலகின் பழமையான கோட்டைகளில் ஒன்று ஏன் கட்டப்பட்டது என்பதை இது விளக்கக்கூடும். பத்தாயிரத்தின் இராணுவத்தின், இசஸ் போருக்கு முன்னர் அலெக்சாந்தர், பவுல் கலாத்தியா சென்ற வழி, முதல் சிலுவைப் போரின் இராணுவத்தின் ஒரு பகுதி ஆகியவை சிலிசிய வாயிகள் வழியாகச் சென்றன. சிலுவைப்போர் வீரர்கள் ஆர்மீனிய இராச்சியமான சிலிசியாவுடன் தங்களை இணைத்துக் கொண்டனர்.

தென்மேற்கில் உள்ள வாயில்களுக்கு மேலே குலெக் நகரம் உள்ளது. இது கணிசமான பழங்காலத்தின் ஒரு பெரிய கோட்டையாகும். இது பைசாந்தியர்கள் மற்றும் அரேபியர் கால ஆக்கிரமிப்புக்கான ஆதாரங்களைத் கொண்டுள்ளது. ஆனால் இது முதன்மையாக 12 மற்றும் 13 ஆம் நூற்றாண்டுகளின் ஆர்மீனிய கட்டுமானமாகும். [4] தெற்கு மற்றும் மேற்கில் அதன் சுற்று சுவர்கள் மற்றும் கோபுரங்கள் 450 மீட்டருக்கும் அதிகமான தூரத்தை உள்ளடக்கியுள்ளது. சிலிசிய வாயிலுக்கு கீழே இடைக்கால ஆர்மீனிய கோட்டையான அனாகியா அதன் பெரிய குதிரை இலாட வடிவ கோபுரங்கள் மற்றும் மூன்று நுழைவாயில்களைக் கொண்டுள்ளது. [5] 1830 களில் உதுமானியர்களுக்கு எதிரான சிரியப் போரிம்போது எகிப்தின் இப்ராகிம் பாசாவால் கட்டப்பட்ட ஒரு கோட்டை வாயிலுக்கு அருகிலேயே உள்ளது. [6]

ஜெர்மனி பொறியியலாளர்கள் இசுதான்புல்லுக்கும், பகுதாதுக்கும் இடையிலான இருப்புப்பாதை அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது, வாயில் வழியாக செங்குத்தான, குறுகிய மற்றும் இறுக்கமான முறுக்கு பண்டைய பாதையை அவர்களால் பின்பற்ற முடியவில்லை. மேலும், இறுக்கமாக வாயில் மூலம் பண்டைய பாதையில் சென்றது. அவர்கள் கட்டிய ஏதண்டமும் சுரங்கப்பாதைகளும் இருப்புப்பாதை பொறியியலின் அற்புதங்களில் ஒன்றாகும்; [7] அனாகியா டேவுக்கு கீழே அதன் இடைக்கால ஆர்மீனிய கோட்டையுடன், இந்த பாதை உண்மையில் போசாண்டாவிலிருந்து தென்கிழக்கே ஒரு பழங்கால இரண்டாம் சாலையைப் பின்பற்றுகிறது. [8] இருப்புப்பாதை 1918 இல் திறக்கப்பட்டது; முதலாம் உலகப் போரின் இறுதி மாதங்களில் உதுமானிய துருப்புக்களையும் போர் பொருட்களையும் மெசொப்பொத்தேமிய போர் முனைக்கு இந்த குற்றகலப் பாதை கொண்டு சென்றது.

மேலும் காண்க தொகு

குறிப்புகள் தொகு

  1. "Mersin-Coğrafya" (in துருக்கிஷ்). Mersin Şehir Rehberi. Archived from the original on February 8, 2009. பார்க்கப்பட்ட நாள் March 1, 2009.
  2. W.L. Williams, Armenia, p. 8-11, quoted in Josephus Nelson Larned, The new Larned History for ready reference, reading and research s.v. "Armenia" full text
  3. William Mitchell Ramsay, The historical geography of Asia Minor, 1890, passim full text
  4. Edwards (1982). The Fortifications of Armenian Cilicia: Dumbarton Oaks Studies XXIII. Dumbarton Oaks, Trustees for Harvard University. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-88402-163-7. https://archive.org/details/DOP36_08_Edwards. 
  5. The 1979 photographic survey and a plan of Anahşa castle
  6. M. Canard, “Cilicia,” The Encyclopaedia of Islam, new edition, 1960-85, p.38.
  7. http://www.trainsofturkey.com/w/pmwiki.php/Network/CilicianGates
  8. Edwards (1982). The Fortifications of Armenian Cilicia: Dumbarton Oaks Studies XXIII. Dumbarton Oaks, Trustees for Harvard University. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-88402-163-7. https://archive.org/details/DOP36_08_Edwards. Edwards, Robert W. (1987). The Fortifications of Armenian Cilicia: Dumbarton Oaks Studies XXIII. Washington, D.C.: Dumbarton Oaks, Trustees for Harvard University. pp. 62–65, 139–142, 281, 283, pls.6a-8b, 91a–94a. ISBN 0-88402-163-7.

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=சிலிசிய_வாயில்கள்&oldid=3697952" இலிருந்து மீள்விக்கப்பட்டது