சில்லுந்தம்

சில்லுந்தம் (Wheelie) என்பது ஊர்தியின் பின்சில்லில் அல்லது பின்சில்லுகளில் ஏற்படும் கூடிய விசைத் திருப்பத்தால் முன்சில்லு அல்லது முன்சில்லுகள் நிலத்தை விட்டு மேலேழுகின்ற ஊர்தி நழுவியக்கம் ஆகும். சில்லுந்தங்கள் பெரும்பாலும் உந்துருளிகளிலும் ஈருருளிகளிலும் மேற்கொள்ளப்பட்டாலும் தானுந்து, உழுவுந்து போன்ற ஊர்திகளிலும் சில்லுந்தத்தை மேற்கொள்ள முடியும்.

உந்துருளிச் சில்லுந்தம்
உழுவுந்து இழுவையொன்றிற்சில்லுந்தம்

வரலாறு தொகு

1943ஆம் ஆண்டிலேயே ஐக்கிய அமெரிக்கக் குதிரைப் படையினர் சில்லுந்தங்களை மேற்கொள்ளும் படம் இலைவு இதழில் வெளியிடப்பட்டது.[1] மேலும் எவல் நியெவெல் தனது உந்துருளிச் சாகசக் நிகழ்ச்சிகளில் சில்லுந்தங்களையும் மேற்கொண்டார்.

சில்லுந்தத்தின் வகைகள் தொகு

உந்துருளியில் மேற்கொள்ளப்படும் சில்லுந்தம் (காணொளி)

சில்லுந்தமானது பின்வரும் முறைகளில் மேற்கொள்ளப்படும்.

 • உரசிணைப்பிச் சில்லுந்தம் உரசிணைப்பியைக் கைவிட்டு, கதியை முடுக்கி, பொறியை ஓடச் செய்து, திடீரென உரசிணைப்பியைப் பிடிப்பதன் மூலம் மேற்கொள்ளப்படும்.
 • ஆற்றற்சில்லுந்தம் கதியை முடுக்குவதன் மூலம் எளிய முறையில் மேற்கொள்ளப்படும். இதன்போது ஊர்தியின் பொறியானது போதிய ஆற்றலைக் கொண்டிருந்தாலே முன்சில்லைத் தூக்க முடியும்.
 • துள்ளுசில்லுந்தம் சரியான வேளையில் கதியை முடுக்கி நிறுத்துவதன் மூலம் மேற்கொள்ளப்படும்.

உந்துருளி தொகு

சில்லுந்தம் ஒரு பொதுவான உந்துருளிச் சாகசமாகும். உந்துருளியில் சில்லுந்தத்தை மேற்கொள்வதற்கான கொள்கையும் ஈருருளியில் சில்லுந்தத்தை மேற்கொள்வதற்கான கொள்கையை ஒத்ததெனினும் உந்துருளியில் சில்லுந்தத்தைக் கட்டுப்படுத்துவதற்குப் பின்தடுப்புகளும் முடுக்கியும் பயன்படுத்தப்படுகின்றன.

உலகிலேயே விரைவான சில்லுந்தமானது மணித்தியாலத்துக்கு 307.86 கிலோமீற்றர் கதியில் பேட்ரிக்கு உவுர்ச்டேன்கொவ்வால் ஏப்பிரல் 18, 1999 அன்று மேற்கொள்ளப்பட்டது.[2] ஒரு கிலோமீற்றரை விடக் கூடிய தூரம் மேற்கொள்ளப்பட்ட சில்லுந்தங்களுள் விரைவான சில்லுந்தமானது மணித்தியாலத்துக்கு 278.3 கிலோமீற்றர் கதியில் தெர்ரி கல்கோத்தால் செப்டெம்பர் 2006இல் இங்கிலாந்தின் யார்ட்சயர்ப் பகுதியிலுள்ள எல்விங்டன் வானூர்தித் தளத்தில் மேற்கொள்ளப்பட்டது.[3]

ஐக்கிய இராச்சியம், ஐக்கிய அமெரிக்கா போன்ற சில நாடுகளில் பொதுச் சாலையில் சில்லுந்தத்தை மேற்கொள்ளும் உந்துருளி ஓட்டுநர்கள் மீது பேரிடர் விளைவிக்கும் ஓட்டத்தை மேற்கொண்ட குற்றத்தின் காரணமாகச் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு, பேரளவிலான ஒறுப்புப் பணம் அறவிடப்பட்டுச் சிறிது காலத்துக்கு ஊர்திகளை ஓட்டுவதற்குத் தடையும் விதிக்கப்படுகின்றது.[4] பாக்கித்தான், இந்தியா போன்ற சில நாடுகளிலோ பொதுச் சாலையில் சில்லுந்தத்தை மேற்கோள்ளும் உந்துருளி ஓட்டுநர்களின் உந்துருளிகள் பறிமுதல் செய்யப்படுகின்றன.[5]

தானுந்து தொகு

நேர்ப்பந்தயங்களின்போது தானுந்துகளைப் பயன்படுத்திச் சில்லுந்தங்கள் மேற்கொள்ளப்படுவதுண்டு.

ஈருருளி தொகு

 
ஈருருளியில் மேற்கொள்ளப்படும் சில்லுந்தம்

ஈருருளிகளை உள்ளரங்குகளில் ஓட்டும்போதும் கட்டற்ற பாணி ஈருருளி ஓட்டத்தின்போதும் ஈருருளியில் சில்லுந்தங்கள் மேற்கொள்ளப்படுவதுண்டு.

சில்லுந்தப் பட்டை தொகு

ஊர்தியொன்றில் சில்லுந்தத்தை மேற்கொள்ளும்போது அதன் முன்பகுதி கூடிய உயரத்துக்கு உயர்த்தப்பட்டுப் பின்னோக்கிச் சரிவதைத் தடுக்கும்பொருட்டுச் சில்லுந்தப் பட்டைகள் பயன்படுத்தப்படுகின்றன.[6]

திரைப்படங்களில் தொகு

மேற்கோள்கள் தொகு

 1. "சாகசத்தின் வரலாறு-தெருக்கள் (ஆங்கில மொழியில்)" இம் மூலத்தில் இருந்து 2012-02-25 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20120225123548/http://www.superstreetbike.com/streets/0703_sbkp_history_of_stunting/index.html. 
 2. ["விரைவான உந்துருளிச் சில்லுந்தம் (ஆங்கில மொழியில்)" இம் மூலத்தில் இருந்து 2011-09-19 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20110919063716/http://community.guinnessworldrecords.com/_Fastest-motorcycle-wheelie-/VIDEO/526127/7691.html.  விரைவான உந்துருளிச் சில்லுந்தம் (ஆங்கில மொழியில்)]
 3. சில்லுந்தச் சாதனையைக் கொண்டிருப்பவர் இறந்தார் (ஆங்கில மொழியில்)
 4. சில்லுந்தம் கெட்டது (ஆங்கில மொழியில்)
 5. ["சில்லுந்தங்களுக்காக 368 உந்துருளி ஓட்டுநர்களிடம் ஒறுப்புப் பணம் அறவிடப்பட்டது (ஆங்கில மொழியில்)" இம் மூலத்தில் இருந்து 2012-02-25 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20120225085044/http://www.visordown.com/motorcycle-news--general-news/368-motorcyclists-fined-over-wheelies/4622.html.  சில்லுந்தங்களுக்காக 368 உந்துருளி ஓட்டுநர்களிடம் ஒறுப்புப் பணம் அறவிடப்பட்டது (ஆங்கில மொழியில்)]
 6. ["சில்லுந்தப் பட்டை (ஆங்கில மொழியில்)" இம் மூலத்தில் இருந்து 2012-11-19 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20121119035348/http://rcvehicles.about.com/od/glossary/g/wheeliebar.htm.  சில்லுந்தப் பட்டை (ஆங்கில மொழியில்)]
 7. மங்காத்தா அலுவல் முறைத் திரை முன்னோட்டம் உயர் வரையறுத்தல் (ஆங்கில மொழியில்)
 8. கழுகு (தெலுங்கில்)
"https://ta.wikipedia.org/w/index.php?title=சில்லுந்தம்&oldid=3584139" இருந்து மீள்விக்கப்பட்டது