சிவப்பா நாயக்கர்
சிவப்பா நாயக்கர், கேளடியை ஆண்ட நாயக்க மன்னர்களுள் மிகவும் புகழ் பெற்றவராவார்.[1] இவர் கி.பி 1645 தொடக்கம் 1660 வரையான காலப்பகுதியில் ஆட்சிப்பொறுப்பில் இருந்தார்.[2] இவர் சிறந்த நிர்வாகத் திறமையும் போர்த் திறமையும் பெற்று விளங்கியவர்.[3]
சிவப்பா நாயக்கர் | |
---|---|
ஆட்சி | கி.பி 1645- கி.பி 1660 |
முன்னிருந்தவர் | வீரபத்திர நாயக்கர் |
பின்வந்தவர் | சிக்க வெங்கடப்ப நாயக்கர் |
அரச குலம் | கேளடி நாயக்கர்கள் |
வெற்றிகள்
தொகுவேலூரில் இருந்து ஆட்சி செய்த விஜயநகரப் பேரரசின் கடைசி ஆட்சியாளரான மூன்றாம் ஸ்ரீரங்கா பீஜப்பூர் சுல்தானகத்தால் தோற்கடிக்கப்பட்டு சிவப்பாவிடம் அடைக்கலம் புகுந்தார்.[4] இதன் காரணமாக பிஜாப்பூர், கோல்கொண்டா சுல்தான்களோடு போர் புரிந்து தார்வாடு பகுதியை கைப்பற்றினர். மங்களூர், குந்தாபுரா, ஹொன்னாவர் போன்ற கடலோரப் பகுதியில் உள்ள போர்த்துகீசிய துறைமுகங்கள் கைப்பற்றி கர்நாடக பகுதியில் உள்ள போர்த்துகீசிய அரசியல் அதிகாரத்தை அழித்தார்.[5]
கட்டிடக்கலை
தொகுசிவப்பா நாயக்கரால், சந்திரகிரி, பேக்கல், மங்களூர், ஆரிக்கடி மற்றும் அட்கா பகுதிகளில் கோட்டைகள் கட்டப்பட்டன.
மேற்கோள்கள்
தொகு- ↑ Bhagamandala Seetharama Shastry, ed. (2000). Goa-Kanara Portuguese Relations, 1498-1763. Concept Publishing Company. p. 8.
- ↑ Pius Fidelis Pinto, ed. (1999). A History of Christians in Coastal Karnataka, 1500-1763 A.D. Samanvaya. p. 78.
- ↑ "Mysore and Coorg, a gazetteer - Keladi". Benjamin Lewis Rice. 1876. p. 355.
- ↑ H. V. Sreenivasa Murthy, R. Ramakrishnan, ed. (1977). A History of Karnataka, from the Earliest Times to the Present Day. S. Chand. p. 284.
- ↑ PSR, ed. (2009). Portuguese Studies Review, Vol. 16, No. 2. Baywolf Press. p. 35.